அப்துல் ஹமீத் பாகவி
Appearance
ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி (பி 1876 - இ 1955; ஒர் இசுலாமிய சமய அறிஞர், மொழிபெயர்ப்பாளர். சேலம் ஆத்தூரில் 26-11-1876 அன்று ஹாஜி காதர் முகையதீன் இராவுத்தர் அவர்களுக்கு மகனாக பிறந்தார். கிலாபத் இயக்கமும், ஒத்துழையாமை இயக்கமும் தீவிர களப்பணியில் இருந்தபோது திண்டுக்கல் நகர பொதுச்செயலாளராகப் பணிபுரிந்தார். கதர் அணியாத முஸ்லிம்களின் திருமணத்திற்கு செல்வதில்லை என்ற கொள்கை உடையவர். கிலாபத், ஒத்துழையாமை இயக்கத்தில் பெரும் பங்கேற்றார்.[1] 1943 ஆம் ஆண்டு திருக்குர்ஆனை தமிழில் முதலில் மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக இவர் அறியப்படுகிறார்.[2] இந்த மொழிபெயர்ப்பு "இனிய தமிழில், எளிய நடையில் வெளிவந்த மொழிபெயர்ப்பு" என்று சிறப்பிக்கப்படுகிறது. 1955ம் ஆண்டு ஜூன் 23ல் காலமானார் இவரது மகன் மறைந்த முஸ்லிம்லீக் தலைவர் ஆ. கா. அ. அப்துல் சமது ஆவார்.