செ. அரங்கநாயகம்
செ. அரங்கநாயகம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | பி. கோபால் |
| தொகுதி | கோயம்புத்தூர் மேற்கு |
| பதவியில் 1980–1984 | |
| பின்னவர் | மு. இராமநாதன் |
| பதவியில் 1984–1989 | |
| முன்னையவர் | மா. சின்னராசு |
| பின்னவர் | உ. க. வெள்ளியங்கிரி |
| தொகுதி | தொண்டாமுத்தூர் |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | உ. க. வெள்ளியங்கிரி |
| பின்னவர் | சி. ஆர். இராமச்சந்திரன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 25 ஏப்ரல் 1931 கோயம்புத்தூர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி, திரைப்படத் தயாரிப்பாளர் |
செ. அரங்கநாயகம் (C. Aranganayagam) என்பவர் தமிழக சட்டமன்றத்துக்கு நான்கு முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல்வாதியாவார். இரு முறை தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்தும், இருமுறை கோவை மேற்குத் தொகுதியிலிருந்தும் (1977[1]; 1980) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆர் அமைச்சரவையிலும் பின்னர் ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வியமைச்சராகப் பொறுப்பு வகித்தவராவார்.[2][3][4] இவர் அதிமுக.விலிருந்து விலகி 4 செப்டெம்பர் 2006 அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த நிலையில், 2014 ஆண்டு திமுகவிலிருந்தும் விலகினார்.[5] இவர், தமிழக அமைச்சராக 1991 முதல் 1996 வரை பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் தன் பெயரிலும், தன்மனைவி, மகன்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.15 கோடிக்கு சொத்துச் சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 2017-ல் வெளியான சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின்படி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததற்காக மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது.
மறைவு
[தொகு]அதிமுக முன்னாள் அமைச்சர் செ. அரங்கநாயகம் (வயது 90) உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 29 ஏப்ரல் 2021 அன்று காலமானார்.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 49-50.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 13-15.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "AIADMK organises protest against petrol, diesel price hike". The Hindu. 3 July 2005 இம் மூலத்தில் இருந்து 27 சனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120127065821/http://www.hindu.com/2005/07/03/stories/2005070303460600.htm.
- ↑ "Tamil Nadu Legislative Assembly-Sisth Assembly - Fifth session (26 October 1979 to 10 November 1979)" (PDF). Archived from the original (PDF) on 4 செப்டெம்பர் 2011. Retrieved 28 சனவரி 2016.
- ↑ "முன்னாள் அமைச்சர் செ.அரங்கநாயகம் தி.மு.க.வில் இருந்து விலகினார்". இ குருவி. பெப்ரவரி 10, 2014. Retrieved 17 மார்ச் 2016.
- ↑ அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் காலமானார்
- ↑ [1]