உள்ளடக்கத்துக்குச் செல்

கொறடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொறடா (Whip)[1][2] சட்டம் இயற்றும் அதிகாரம் படைத்த சட்டமன்றங்களில் அல்லது நாடாளுமன்றத்தில் ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்களிடையே கட்சியின் ஒழுக்கத்தை நிலைநாட்டுபவர் ஆவார். கொறடாவிற்கு உதவிட துணைக் கொறடா இருப்பர்.

இந்தியாவில் கொறடா

[தொகு]

இந்தியாவில் தங்கள் கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றுபவர்களான கொறடாக்கள், தங்கள் கட்சியின் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களை சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றக் கூட்டங்களில் தவறாது கலந்து கொள்ள கட்டளையிடும் நபர் ஆவார். மேலும் தங்கள் கட்சித் தலைமையின் கொள்கைகளின்படி, சட்டமன்றங்களில் கொண்டு வரப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவாக அல்லது எதிராகவோ தமது கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என ஆணையிடும் அதிகாரம் படைத்தவர் ஆவார். கொறடாவின் கட்டளையை மீறி நடந்து கொள்பவர்கள், சட்டமன்றத்திலிருந்து நீக்க, சட்டமன்றத் தலைவருக்கு கொறடா பரிந்துரைப்பார்.

நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்கள் தங்களது அரசியல் கட்சியின் கொறடாவை நியமிப்பர். கொறடாவை நியமிப்பத்திற்கு மன்றத்தில் குறைந்தது மூன்று உறுப்பினர்களை அரசியல் கட்சிகள் கொண்டிருக்க வேண்டும்.

பணிகளும், அதிகாரங்களும்

[தொகு]
  • நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் கூடும் போது, தனது அரசியல் கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பேரவைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென எழுத்து மூலமாக கட்டளையிடும் அதிகாரம் படைத்தவர்.
  • பொதுவாக நாடாளுமன்றத்தில் அல்லது சட்டமன்றங்களில் கொண்டு வரப்படும் ஒரு தீர்மானம் குறித்து வாக்களிப்பு நடைபெறும் போது, கொறடா தன் கட்சி உறுப்பினர்களை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவாகவோ எல்லது எதிராகவோ வாக்களிக்க வேண்டும் என கட்டளையிடும் அதிகாரம் படைத்தவர். கொறடா உத்தரவு மூலம் தனது கட்சியின் உறுப்பினர்களை பிற கட்சியினரின் வாக்கு வேட்டையிலிருந்து காப்பாற்ற முடிகிறது.
  • கொறடாவின் கட்டளைக்கு எதிராக வாக்களித்த தனது அரசியல் கட்சியின் மன்ற உறுப்பினரை பதவியிலிருந்து நீக்க மன்றத் தலைவருக்கு பரிந்துரை செய்வார்.

ஒரு அரசியல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினராக இருப்பினும், கொறடாவின் கட்டளைக்கு எதிராக வாக்களித்தால் தனது உறுப்பினர் தகுதியை இழப்பர் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "whip". Archived from the original on 2017-01-04. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. whip
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-05. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொறடா&oldid=4058773" இலிருந்து மீள்விக்கப்பட்டது