அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (தெலுங்கு: ఆల్ ఇండియా మజ్లిస్ ఎ ఇత్తెహాదుల్ ముస్లిమీన్, All India Majlis-e-Ittehad-ul Muslimeen, AIMM) சுருக்கமாக மஜ்லிஸ் கட்சி என்பது இந்திய மாநிலமான தெலுங்கானாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய அரசியல் கட்சியாகும். பிரித்தானிய இந்தியாவின் ஹைதராபாத் மாநிலத்தில் 1927 ஆம் ஆண்டில் ஐதராபாத்து நகரத்தில் நிறுவப்பட்டது.

கட்சியின் தோற்றம்[தொகு]

1927 ஆம் ஆண்டில் ஹைதராபாத் மாநிலத்தின் நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் அவர்களின் ஆலோசனையின் பேரில், ஹைதராபாத் மாநிலத்தின் கிலேதாராக இருந்த நவாப் முஹம்மது நவாஸ் கான் என்பவரால் இக்கட்சி நிறுவப்பட்டு, வரையறுக்கப்பட்டது. நவாப் பகதூர் யார் ஜங் இதன் முதல் தலைவராக 1938 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர்[தொகு]

அசதுத்தீன் ஒவைசி இதன் தற்போதைய தலைவராக இருக்கிறார். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஹைதராபாத் தொகுதியில் இருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மாநிலத்தின் சட்ட மன்றத்தில்[தொகு]

  • ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசமாக இருந்த பொழுது 2009 ஆம் ஆண்டு போட்டியிட்ட 7 சட்ட மன்ற தொகுதிகளையும் வென்றது.
  • 2018 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தின் சட்ட மன்ற தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளை இக்கட்சி கைப்பற்றியுள்ளது.[1].

ஆதாரங்கள்[தொகு]

  1. https://www.ndtv.com/india-news/telangana-election-2018-aimim-wins-7-seats-retains-hold-in-old-city-of-hyderabad-1961237 கடந்த முறை வென்ற 7 தொகுதிகளை தக்கவைத்தது AIMIM - NDTV இணையதள செய்தியில்