உள்ளடக்கத்துக்குச் செல்

சி. பொன்னையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
C. பொன்னையன்
தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர்
பதவியில்
2020–2021
நிதி, சட்டம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உணவுத் துறை அமைச்சர்
பதவியில்
2001–2006
கல்வி துறை அமைச்சர்
பதவியில்
1986 - 1988
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர்
பதவியில்
1984 - 1988
கூட்டுறவு துறை அமைச்சர்
பதவியில்
1980 - 1984
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர்
பதவியில்
1977 - 1980
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977-1987
2001-2006
தொகுதிதிருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1942
திருச்செங்கோடு, கொங்கு நாடு
அரசியல் கட்சிஅதிமுக(1972-தற்போது)
திமுக(1957-1972)
சமயம்இந்து சமயம்

சி. பொன்னையன் (C. Ponnaiyan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் அமைச்சரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். பொன்னையன், 1977,[1] 1980, 1984 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார். இவர், 2003 முதல் 2006 வரை அதிமுகவின் தலைமைக் கழகத் தலைவராகப் பணியாற்றினார்.

பொன்னையன் வழக்கறிஞராக தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கினார். அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் சித்தாந்தங்களால் கவரப்பட்டு, சிறு வயதிலேயே பொது வாழ்வில் ஈடுபட்டலானார்ர். நிதி, கல்வி, தொழில், வேளாண்மை, கூட்டுறவு, நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழக முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார்.[2][3]

இளமை

[தொகு]

பொன்னையன், சின்னக்குட்டி கவுண்டர் மற்றும் நல்லமாள் இணையரின் மகனாகத் திருச்செங்கோட்டில் விவசாயக் குடும்பத்தில் 1942ஆம் பிறந்தார். இவர், திருச்செங்கோட்டில் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் கல்லூரிக் கல்வியில் இளநிலை வணிகவியல் பாடத்தினை திருச்சிராப்பள்ளியிலுள்ள ஜமால் முகமது கல்லூரியிலும் சட்டப் படிப்பினை சென்னை சட்டக் கல்லூரியிலும் முடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 299-300.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Ragunathan, A. V. (15 October 2001). "Tough battle for AIADMK in Tiruchengode". Chennai, India: The Hindu இம் மூலத்தில் இருந்து 5 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105045827/http://www.hindu.com/2001/10/15/stories/0415223t.htm. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-05-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170519002255/http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/aiadmk-veteran-c-ponnaiyan-joins-hands-with-panneerselvam/articleshow/57099493.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._பொன்னையன்&oldid=4384758" இலிருந்து மீள்விக்கப்பட்டது