பல்ராம் சாக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்ராம் சாக்கர்
8 ஆவது மக்களவைத் தலைவர்
பதவியில்
ஜனவரி 22, 1980 – நவம்பர் 27, 1989
Deputyஜி. இலட்சுமணன்
மு. தம்பிதுரை
முன்னையவர்கே. எஸ். ஹெக்டே
பின்னவர்ரபி ரே (Rabi Ray)
23 ஆவது மத்தியப் பிரதேச ஆளுனர்
பதவியில்
ஜூன் 30, 2004 – ஜூன் 29, 2009
முன்னையவர்லெப்டினண்ட் ஜெனரல் கே. எம். சேத் (பொறுப்பு)
பின்னவர்ராமேஷ்வர் தாக்கூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-08-23)23 ஆகத்து 1923
பஞ்ச்கோசி, அபோஹர், பஞ்சாப் (இந்தியா)
இறப்பு3 பெப்ரவரி 2016(2016-02-03) (அகவை 92)
தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்

பல்ராம் சாக்கர் (Balram Jakhar 23 ஆகத்து 1923–3 பிப்பிரவரி 2016) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராகவும், மக்களவைத் தலைவராகவும், நடுவணரசு அமைச்சராகவும், மத்தியப் பிரதேச மாநில ஆளுநராகவும் இருந்தவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பஞ்சாப் மாநிலம் பெரோசுப்பூர் மாவட்டத்தில், பஞ்ச்கோசி கிராமத்தில் சாட் குடும்பத்தில் பிறந்த பல்ராம் சாக்கர் பள்ளிப் படிப்பை முடித்ததும் 1945 இல் லாகூர் போர்மன் கிறித்தவக் கல்லூரியில் சமசுக்கிருத மொழி பயின்று, புலமை அடைந்து பட்டம் பெற்றார். இந்தி உருது ஆங்கலம் ஆகியவற்றிலும் சரளமாகப் பேசக் கூடியவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1972 முதல் 1980 வரை பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தலைவராக 1980 முதல் 1989 வரை பதவி வகித்தார். 1991 இல் தேர்தலில் வெற்றி பெற்று நரசிம்ம ராவ் தலைமையில் வேளாண் துறை அமைச்சர் ஆனார். 2004 முதல் 2009 வரை மத்தியப் பிரதேச ஆளுநராக இருந்தார்[2]. நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பொறுப்பில் இருந்தபோது கணினிமயமாக்கல், நூலகம், அருங்காட்சியகம் உருவாக்கல் ஆகியவற்றில் இவருடைய பங்கு பெரிதாகக் கருதப்படுகிறது. பண்ணை நிலங்களில் நவீன முறையில் தோட்டங்கள் அமைத்தார்.

பதவிகள்[தொகு]

பாரத் கிரிசக் சமாஜ் என்னும் அமைப்பில் வாணாள் தலைவராக இருந்தார். ஜாலியன்வாலா பாக் நினைவு அறக்கட்டளை மேலாண்மைக் குழுவில் தலைவராக இருந்தார். மக்கள் நாடாளு மன்றம் நிருவாகம் என்னும் பெயரில் ஒரு நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். விளையாட்டிலும் விவசாயத்திலும் படிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். 1975 இல் உதயான் பண்டிட் என்னும் பட்டம் இவருக்கு வழங்கப் பட்டது.

சான்றாவணம்[தொகு]

  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=1456888
  2. "Official Webpage on Loksabha Website". National Informatics Centre, New Delhi. Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-24.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்ராம்_சாக்கர்&oldid=3749203" இலிருந்து மீள்விக்கப்பட்டது