தெலுங்கானா இராட்டிர சமிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தெலுங்கானா ராஷ்டிர சமிதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தெலுங்கானா இராட்டிர சமிதி
சுருக்கக்குறிTRS
தலைவர்கே. சந்திரசேகர் ராவ் (கேசியார்)
தொடக்கம்ஏப்ரல் 27, 2001
தலைமையகம்பஞ்சாரா ஹில்ஸ், ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
செய்தி ஏடுநமஸ்தே தெலுங்கானா
கொள்கைதெலுங்கானா
மாநில அரசியல்
பழைமைவாதம்
அரசியல் நிலைப்பாடுநடுவண்-வலது
கூட்டணிஐமுகூ(2004–2006)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
9 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
7 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தெலங்காணா சட்டப் பேரவை)
102 / 119
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(தெலங்காணா சட்ட மேலவை)
27 / 40
இணையதளம்
www.trspartyonline.org

"தெலுங்கானா இராட்டிர சமிதி" (Telangana Rashtra Samithi, TRS) ஆந்திர மாநிலத்திலிருந்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு மாநில கட்சி ஆகும். இக்கட்சியை தொடங்கியவர் திரு. கே. சந்திரசேகர ராவ் ஆவார்.

அமைப்பின் தோற்ற வரலாறு[தொகு]

தெலுங்கானா இராட்டிர சமிதியின் தலைவர், திரு. கே. சந்திரசேகர ராவ் , கட்சியை தொடங்குவதற்கு முன்பு தெலுங்கு தேசக்கட்சியில் இருந்தார். 2001-ஆம் ஆண்டு அவர் இக்கட்சியை தொடங்கும்போது, ஆந்திர சட்டப்பேரவையில் துணை சபாநாயகராக பதவி வகித்தார். கட்சியை தொடங்கும் போது தனது பதவியை மட்டுமல்லாது ஆந்திர சட்டமன்றத்திலிருந்தும் விலகினார்.

தேர்தல்களில் முடிவுகள்[தொகு]

தெலுங்கானா இராட்டிர சமிதி தனித் தெலுங்கானா மாநிலம் கோரி போராடியது மட்டுமல்லாது தேர்தல்களிலும் பங்கேற்றது. முதன்முதலாக 2004ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பங்கேற்றது. தொடர்ச்சியான தேர்தல்களில் இக்கட்சிக்கு கிடைத்த இடங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

ஆண்டு தேர்தல் வென்றவை போட்டியிட்டவை வைப்புத்தொகை இழந்தவை
2004 சட்டப்பேரவை 26 54 17[1]
2004 மக்களவை 5 22[2] 17
2008 சட்டப்பேரவை (Bye) 7 16 2[3]
2008 மக்களவை (Bye) 2 4 0
2009 சட்டப்பேரவை 10 45 13[4]
2009 மக்களவை 2 9 1 [5]
2010 சட்டப்பேரவை (Bye) 11 11 0
2011 சட்டப்பேரவை (Bye) 1 1 0
2012 சட்டப்பேரவை (Bye) 4 5 0
2012 சட்டப்பேரவை (Bye) 1 1 0
2014 சட்டப்பேரவை 63 119 0[4]
2014 மக்களவை 11 17 0 [5]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]