கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் | |
---|---|
![]() கேசியார்
|
|
பிறப்பு | கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் 17 பிப்ரவரி 1954 சித்திப்பெட்,மேதக் |
இருப்பிடம் | ஐதராபாத் |
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | கேசியார் |
பணி | தெலுங்கானா இயக்கம் |
சமயம் | இந்து |
வாழ்க்கைத் துணை |
கல்வகுன்ட்ல சோபா |
பிள்ளைகள் | கல்வகுன்ட்ல ராமா ராவ்(மகன்) மற்றும் கவிதா(மகள்) |
கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் (தெலுங்கு:కల్వకుంట్ల చంద్రశేఖర రావు) (பிறப்பு: பிப்ரவரி 17, 1954) சுருக்கமாக கேசியார், இந்திய நாடாளுமன்றத்தில் 15வது மக்களவை உறுப்பினர்.ஆந்திராவின் மகபூப்நகர் மாவட்டத்தில் கரீம்நகர் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா இராட்டிர சமிதி என்ற கட்சியின் நிறுவனரும் தலைவரும் ஆவார்.மைய அரசில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகப் பணி புரிந்தவர்.
தமது கட்சியைத் துவக்கும் முன்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.2004ஆம் ஆண்டு காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 5 மக்களவைத் தொகுதிகளில் தமது கட்சிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். பின்னர் மைய அரசில் பங்கேற்று அமைச்சராகப் பணி புரிந்தார். தமது நோக்கம் நிறைவேறாத நிலையில் அரசிலிருந்து விலகி தமது போராட்டத்தைத் தொடர்ந்தார்.
2009 திசம்பரில் சாகும்வரை உண்ணாநோன்பு போராட்டம் துவங்கினார். இதனால் மாணவர் போராட்டமும் கடையடைப்புகளும் வன்முறையும் எழுந்தன. [1]