பெப்ரவரி 17
Appearance
(பிப்ரவரி 17 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | பெப்ரவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | ||
MMXXIV |
பெப்ரவரி 17 (February 17) கிரிகோரியன் ஆண்டின் 48 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 317 (நெட்டாண்டுகளில் 318) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
[தொகு]- 364 – உரோமைப் பேரரசர் யோவியன் எட்டு மாத கால ஆட்சியின் பின்னர் அனத்தோலியாவில் மர்மமான முறையில் இறந்தார்.
- 1600 – மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ உரோம் நகரில் சமய மறுப்புக்காக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
- 1739 – மராட்டியர் போர்த்துக்கீசரின் பிடியில் இருந்த வாசை நகர் (மகாராட்டிரத்தில்) மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
- 1753 – சுவீடன் யூலியன் நாட்காட்டியில் இருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. பெப்ரவரி 17ம் நாளுக்கு அடுத்த நாள் மார்ச் 1 ஆக மாற்றப்பட்டது.
- 1788 – லெப்டினண்ட் போல் என்பவன் சிட்னியில் இருந்து நோர்போக் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
- 1838 – தென்னாப்பிரிக்காவில் நத்தாலில் நூற்றுக்கணக்கான இடச்சுக் குடியேறிகளை சூலு இனத்தோர் கொன்றனர்.
- 1854 – ஐக்கிய இராச்சியம் ஆரஞ்சு விடுதலை இராச்சியத்தை விடுதலை பெற்ற நாடாக அங்கீகரித்தது.
- 1863 – ஜெனீவாவின் குடிமக்கள் சிலர் இணைந்து காயமடைந்தோர்க்கான பன்னாட்டு நிவாரணக் குழுவை அமைத்தனர். இது பின்னர் பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் என அழைக்கப்பட்டது.
- 1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: எச்.எல். ஹன்லி என்ற நீர்மூழ்கிக் கப்பல் யூஎஸ்எஸ் ஹவுசட்டோனிக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
- 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தென் கரோலினாவின் கொலம்பியா நகரம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் படைகள் வெளியேற்றத்தின் போது தீயிடப்பட்டது.
- 1867 – சூயசுக் கால்வாயூடாக முதலாவது கப்பல் சென்றது.
- 1871 – பிரான்சிய-புருசியப் போரில் பாரிசு நகரைக் கைப்பற்றிய புருசிய இராணுவம் பாரிசு நகரில் வெற்றி ஊர்வலத்தை நடத்தியது.
- 1881 – இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302,500, யாழ்ப்பாணத்தில் 40,057 ஆகக் கணக்கெடுக்கப்பட்டது.[1]
- 1933 – நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.
- 1936 – சிறுவர்களுக்கான அதிமேதாவி மாயாவி முதற்தடவையாக வரைகதைகளில் தோன்றினார்.
- 1947 – வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தனது ஒலிபரப்புச் சேவையை சோவியத் ஒன்றியத்துக்கு ஆரம்பித்தது.
- 1948 – இலங்கை, காலியில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்று வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.[2]
- 1957 – மிசோரியில் வயோதிபர் இல்லம் தீக்கிரையாகியதில் 72 பேர் உயிரிழந்தனர்.
- 1959 – முதலாவது காலநிலை செய்மதி வான்கார்ட் 2 விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1964 – காபொனில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அந்நாட்டின் அரசுத்தலைவர் லேயொன் உம்பா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- 1965 – அப்பல்லோ 11 மூலம் நிலாவிற்கு மனிதரை அனுப்புவதற்கு முன்னோட்டமாக நிலாவில் தரையிறங்குவதற்கான இடத்தைப் படம் எடுப்பதற்காக ரேஞ்சர் 8 விண்கலம் ஏவப்பட்டது.
- 1978 – ஐரியக் குடியரசுப் படை போராளிகள் பெல்பாஸ்ட் நகரில் உணவு விடுதி ஒன்றில் எரிகுண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
- 1979 – மக்கள் சீனக் குடியரசுக்கும் வியட்நாமுக்கும் இடையில் போர் ஆரம்பமாகியது.
- 1982 – இலங்கைத் துடுப்பாட்ட அணி தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக கொழும்பு ஓவல் அரங்கில் விளையாடியது.
- 1990 – இலங்கையின் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ரிச்சர்ட் டி சொய்சா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- 1992 – நகோர்னோ கரபாக் போர்: ஆர்மீனியப் படைகள் கரதாக்லி நகர ஊடுருவலில் 20 இற்கும் அதிகமான அசர்பைசானியரைக் கொன்றனர்.
- 1995 – பெருவுக்கும், எக்குவதோருக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு ஐநா முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது.
- 1996 – நாசாவின் டிசுக்கவரி திட்டம் ஆரம்பமானது. 433 ஈரோசு சிறுகோளில் தரையிறங்கும் நோக்கோடு நியர் சூமேக்கர் என்ற விண்கலம் ஏவப்பட்டது.
- 1996 – பிலடெல்பியாவில் நடைபெற்ற சதுரங்க ஆட்டத்தில் காரி காஸ்பரொவ் ஐபிஎம்மின் டீப் புளூ மீத்திறன் கணினியை வென்றார்.
- 1996 – இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் 8.2 அளவு நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை இடம்பெற்றதில் 166 பேர் உயிரிழந்தனர். 423 பேர் காயமடைந்தனர்.
- 2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.
- 2006 – பிலிப்பீன்சில் சென் பேர்னார்ட் நகரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 1,126 பேர் உயிருடன் புதையுண்டனர்.
- 2008 – கொசோவோ செர்பியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 2011 – அரேபிய வசந்தம்: முஅம்மர் அல் கதாஃபியின் ஆட்சிக்கு எதிரான லிபிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாயின.
- 2015 – எயிட்டியில் இடம்பெற்ற மார்டி கிரா பவனியில் ஏற்பட்ட நெரிசலில், 18 பேர் உயிரிழந்தனர், 78 பேர் காயமடைந்தனர்.
- 2016 – துருக்கி, அங்காரா நகரில் இராணுவ வாகனக்கள் வெடித்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர், 61 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
[தொகு]- 1201 – நசீருத்தீன் அத்-தூசீ, பாரசீக வானியலாளர், உயிரியலாளர் (இ. 1274)
- 1723 – டோபியாஸ் மேயர், செருமானிய வானியலாளர் (இ. 1762)
- 1781 – ரெனே லென்னக், இதயத்துடிப்பு மானியைக் கண்டுபிடித்த பிரான்சிய மருத்துவர் (இ. 1826)
- 1888 – ஆட்டோ ஸ்டர்ன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1969)
- 1890 – ரொனால்டு பிசர், aaங்கிலேய-ஆத்திரேலிய உயிரியலாளர், கணிதவியலாளர் (இ. 1962)
- 1910 – கொத்தமங்கலம் சீனு, தமிழ் நாடகத், திரைப்பட நடிகர், கருநாடக இசைப் பாடகர் (இ. 2001)
- 1918 – சான்-சார்லஸ் கான்டின், கனடிய அரசியல்வாதி (இ. 2005)
- 1927 – யுவான் அல்மெய்டா, கியூபப் புரட்சியாளர் (இ. 2009)
- 1929 – அம்பி, ஈழத்துத் தமிழ் எழுத்தாளர், கவிஞர் (இ. 2024)
- 1930 – பசவ பிரேமானந்த், கேரள மெய்யியலாளர், இறைமறுப்பாளர் (இ. 2009)
- 1938 – அறிவானந்தன், மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 2000)
- 1945 – இராசேந்திர சோழன், தமிழக எழுத்தாளர் (இ. 2024)
- 1955 – மோ யான், நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர்
- 1965 – மைக்கேல் பே, அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்
- 1975 – வடிவேல் பாலாஜி, தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர், திரைப்பட நடிகர் (இ. 2020)
- 1981 – ஜோசப் கார்டன்-லெவிட், அமெரிக்க நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர்
- 1981 – பாரிஸ் ஹில்டன், அமெரிக்க நடிகை, பாடகி
- 1984 – ஏ பி டி வில்லியர்ஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்
- 1984 – சதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 1985 – சிவகார்த்திகேயன், தமிழக நடிகர்
- 1991 – எட் சீரன், ஆங்கிலேயப் பாடகர்
- 1991 – போனி ரைட், ஆங்கிலேய நடிகை, இயக்குநர்
இறப்புகள்
[தொகு]- 1553 – மூன்றாம் சாமராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1492)
- 1600 – கியோர்டானோ புரூணோ, இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர், மெய்யியலாளர் (பி. 1548)
- 1673 – மொலியர், பிரான்சிய நடிகர் (பி. 1622)
- 1865 – ஜார்ஜ் பிலிப்சு பாண்டு, அமெரிக்க வானியலாளர் (பி. 1825)
- 1874 – அடால்ப் குவெட்லெட், பெல்ச்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1796)
- 1907 – என்றி ஆல்காட், அமெரிக்க இராணுவ அதிகாரி, பிரம்மஞான சபையின் நிறுவனர் (பி. 1832)
- 1909 – யெரொனீமோ, அமெரிக்கப் பழங்குடித் தலைவர் (பி. 1829)
- 1956 – எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (பி. 1891)
- 1986 – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, இந்திய-அமெரிக்க மெய்யியலாளர் (பி. 1895)
- 1988 – கர்ப்பூரி தாக்கூர், பீகாரின் 11வது முதலமைச்சர் (பி. 1924)
- 1994 – நாவற்குழியூர் நடராஜன், இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1910)
- 1994 – சிமன்பாய் படேல், இந்திய அரசியல்வாதி (பி. 1929)
- 2010 – மணிமேகலை இராமநாதன், ஈழத்துக் கலைஞர் (பி. 1946)
- 2014 – ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (பி. 1920)
- 2016 – எஸ். ரி. அரசு, இலங்கை நாடகக் கலைஞர், ஒப்பனைக் கலைஞர், ஒளிப்பதிவாளர், சிற்பக் கலைஞர் (பி. 1926)
சிறப்பு நாள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 42
- ↑ "Principal Ceylon Events, 1948". Ferguson's Ceylon Directory, Colombo. 1949.