குவாசுலு-நதால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாசுலு-நதால்
குவாசுலு-நதால்-இன் கொடி
கொடி
குறிக்கோளுரை:
 • Masisukume sakhe
 • ("எழுவோம்; கட்டமைப்போம்")
Map showing the location of KwaZulu-Natal in the south-eastern part of South Africa
தென்னாப்பிரிக்காவில் குவாசுலுவின் அமைவிடம்
நாடுதென்னாப்பிரிக்கா
நதாலியா குடியரசு12 அக்டோபர் 1839
நதால் குடியேற்றம்4 மே 1843
நதால் மாகாணம்31 மே 1910
குவாசுலு-நதால்27 ஏப்ரல் 1994
தலைநகரம்பீட்டர்மாரிட்சுபர்கு
Largest cityடர்பன்
மாவட்டங்கள்
அரசு
 • வகைநாடாளுமன்ற முறை
 • பிரதமர்செரிசோ சுனு (ஆ.தே.கா)
பரப்பளவு
[2]:9
 • மொத்தம்94,361 km2 (36,433 sq mi)
 • பரப்பளவு தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 7வது
உயர் புள்ளி
3,451 m (11,322 ft)
தாழ் புள்ளி
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2011)[2]:18[3]
 • மொத்தம்1,02,67,300
 • மதிப்பீடு 
(2015)
1,09,19,100
 • தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 2வது
 • அடர்த்தி110/km2 (280/sq mi)
  அடர்த்தி தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 2வது
மக்களினக் குழுக்கள்
[2]:21
 • கறுப்பினத்தவர்86.8%
 • இநிதயர் (அ) ஆசியர்7.4%
 • வெள்ளையர்4.2%
 • மாநிறத்தவர்1.4%
மொழிகள்
[2]:25
 • சுலு77.8%
 • ஆங்கிலம்13.2%
 • சோசா3.4%
 • ஆபிரிக்கானா1.6%
நேர வலயம்ஒசநே+2 (தென்னாப்பிரிக்க சீர்தர நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுZA-NL
இணையதளம்www.kwazulunatal.gov.za

குவாசுலு-நதால் (KwaZulu-Natal,/kwɑːˌzl nəˈtɑːl/) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது கேஇசட்என்(KZN) என்றும் நதால் என்றும் குறிப்பிடப்படுகின்றது. "பூங்கா மாகாணம்" எனவும் அறியப்படுகின்றது.[4]) 1994இல் மாகாணங்கள் சீரமைக்கப்பட்டபோது சூலு பந்துசுத்தானாகிய குவாசுலுவும் (சூலு மொழியில் "சூலுக்களின் இடம்") நதாலும் இணைக்கப்பட்டு இந்த மாகாணம் உருவாக்கப்பட்டது. இது நாட்டின் தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடலின் கடலோரமாக அமைந்துள்ளது; மூன்று மாகாணங்களுடனும் மொசாம்பிக், சுவாசிலாந்து, லெசோத்தோ நாடுகளுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் தலைநகரமாக பீட்டர்மாரிட்சுபர்கும் மிகப் பெரும் நகரமாக டர்பனும் உள்ளன.

தற்போதைய மாகாணத்தின் வடபகுதியில் 1830களிலும் 1840களிலும் சூலு இராச்சியமும் தென்பகுதியில் போயர்களின் நதாலியா குடியரசும் அமைந்திருந்தன. 1843இல் பிரித்தானியர்கள் நதாலியா குடியரசை கைப்பற்றி நதால் குடியேற்றம் அமைத்தனர். குவாசுலு 1979 வரை தன்னாட்சியுடன் இருந்தது.

தென்னாப்பிரிக்காவின் வரலாற்றில் பல குறிப்பிடத்தக்க நபர்கள் இங்கு பிறந்துள்ளனர்:

 • 1960இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் வெள்ளையரல்லாதவரும் ஐரோப்பாவிற்கு வெளியே முதன்முதலாக பரிசு பெற்றவருமான ஆல்பர்ட் லுத்துலி;
 • ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) நிறுவியவரும் முதல் கறுப்பின வழக்கறிஞருமான பிக்ஸ்லி கா இசாகா செமே;
 • ஆ.தே.காங்கிரசின் நிறுவனத் தலைவரான ஜான் துபே;
 • இங்காத்தா விடுதலை கட்சியின் நிறுவனருமான மங்கோசுது புத்லெசி;
 • ஆ.தே.கா இளைஞரணியின் நிறுவனத் தலைவர் அண்டன் லெம்பேத்;
 • தற்போதைய தென்னாப்பிரிக்காவின் அரசுத் தலைவர் யாக்கோபு சூமா;
 • 19ஆவது நூற்றாண்டு சுலு தலைவராக இருந்து இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்த பம்பாத்தா

குவாசுலு-நதாலின் இரு இடங்கள் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன: இசிமாங்கலிசோ சதுப்புநிலப் பூங்கா மற்றும் உகலாம்பா டிரேக்கென்சுபெர்கு பூங்கா.

மேற்சான்றுகள்[தொகு]

 1. "KZN Premier Zweli Mkhize resigns". Mail & Guardian. பார்க்கப்பட்ட நாள் 12 September 2013.
 2. 2.0 2.1 2.2 2.3 Census 2011: Census in brief. Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780621413885. Archived from the original (PDF) on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
 3. Mid-year population estimates, 2015 (PDF) (Report). Statistics South Africa. 31 July 2015. p. 3. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
 4. http://www.southafrica.info/about/geography/kwazulu-natal.htm#.U0ZMuuaSz58

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாசுலு-நதால்&oldid=3939618" இலிருந்து மீள்விக்கப்பட்டது