லிம்போபோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிம்போபோ
தென்னாப்பிரிக்க மாகாணம்
லிம்போபோ-இன் கொடி
கொடி
குறிக்கோளுரை: அமைதி, ஒற்றுமை, வளமை
Map showing the location of Limpopo in the northern part of South Africa
தென்னாப்பிரிக்காவில் லிம்போபோ மாகாணத்தின் அமைவிடம்
நாடுதென்னாப்பிரிக்கா
நிறுவனம்27 ஏப்ரல் 1994
தலைநகரம்போலோக்வேன்
மாவட்டங்கள்
பட்டியல்
  • மோபானி
  • விகெம்பே
  • கேப்ரிகார்ன்
  • வாட்டர்பெர்கு
  • செக்குகுனே
அரசு
 • வகைநாடாளுமன்ற முறை
 • பிரதமர்இசுடான்லி மாதாபாதா (ஆ.தே.கா)
பரப்பளவு[1]:9
 • மொத்தம்1,25,754 km2 (48,554 sq mi)
பரப்பளவு தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 5வது
உயர் புள்ளி2,126 m (6,975 ft)
மக்கள்தொகை (2011)[1]:18[2]
 • மொத்தம்54,04,868
 • Estimate (2015)57,26,800
 • தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 5வது
 • அடர்த்தி43/km2 (110/sq mi)
 • அடர்த்தி தரவரிசைதென்னாப்பிரிக்காவில் 5வது
மக்களினக் குழுக்கள்[1]:21
 • கறுப்பர்கள்96.7%
 • வெள்ளையர்2.6%
 • இந்தியர் (அ) ஆசியர்0.3%
 • மாநிறத்தவர்0.3%
மொழிகள்[1]:25
 • வடக்கத்திய சோத்தோ52.9%
 • சோங்க17.0%
 • வேந்த16.7%
 • ஆபிரிக்கானா2.6%
நேர வலயம்தென்னாப்பிரிக்க சீர்தர நேரம் (ஒசநே+2)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுZA-LP
இணையதளம்www.limpopo.gov.za

லிம்போபோ (Limpopo) தென்னாப்பிரிக்காவின் வடகோடியில் உள்ள மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் மேற்கு, வடக்கு எல்லையில் ஓடும் லிம்போபோ ஆற்றின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கு மூன்றில் இரு பகுதி மக்கள் வடக்கத்திய சோத்தோ மொழி பேசுகின்றனர். இதன் தலைநகர் போலோக்வேன் உள்ளது. இது முன்னதாக பீட்டர்சுபர்கு என்றழைக்கப்பட்டது.

1994ஆம் ஆண்டில் மாகாணங்கள் சீரமைக்கப்பட்ட போது இது பழைய டிரான்சுவால் மாகாணத்திலிருந்து வடக்குப் பகுதியை பிரித்து உருவாக்கப்பட்டது; எனவே துவக்கத்தில் இதற்கு வடக்கு டிரான்சுவால் என்ற பெயர் இருந்தது. பின்னர் 2003 வரை வடக்கு மாகாணம் எனப்பட்டது. 2003இல் சிம்பாப்வேக்கும் போட்சுவானாக்கும் எல்லையாக ஓடும் முதன்மை ஆறான லிம்போபோவின் பெயரை மாகாண அரசு பரிந்துரைக்க அரசியல் சட்டத்திருத்தம் மூலம் மாற்றப்பட்டது. இந்த மாகாணத்தில் தங்கத்தைப் பயன்படுத்திய மிகவும் தொன்மையான நாகரிகம் நிலவிய மாபுங்குப்வே உள்ளது; இந்தப் பெயரும் மாகாணத்திற்கு பரிசீலிக்கப்பட்டது.


தென்னாப்பிரிக்காவின் மிகவும் வறிய நிலையிலுள்ள மாகாணமாக லிம்போபோ உள்ளது; மக்கள்தொகையில் 78.9% பேர் தேசிய வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.[3] 2011இல் உள்ளூர் இல்லங்களில் 74.4% பழங்குடிப் பகுதிகளில் உள்ளன. இதற்கு நேர்மாறாக தேசிய அளவில் 27.1% மட்டுமே பழங்குடியினர் பகுதிகளில் உள்ளன.[4]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Census 2011: Census in brief. Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780621413885 இம் மூலத்தில் இருந்து 2018-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225082845/http://www.statssa.gov.za/Census2011/Products/Census_2011_Census_in_brief.pdf%20. பார்த்த நாள்: 2016-02-20. 
  2. Mid-year population estimates, 2015 (PDF) (Report). Statistics South Africa. 31 July 2015. p. 3. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.
  3. "Living condition". Statistics South Africa. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013.
  4. "Community profiles > Census 2011 > Dwellings > Geo type". Statistics South Africa SuperWEB. Archived from the original on 1 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 24 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
லிம்போபோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிம்போபோ&oldid=3681562" இலிருந்து மீள்விக்கப்பட்டது