தென்னாப்பிரிக்காவின் மாகாணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னாப்பிரிக்காவின் மாகாணங்கள்
வகைஒருமுக அரசு
அமைவிடம்தென்னாப்பிரிக்கா
எண்ணிக்கை9 மாகாணங்கள்
மக்கள்தொகை1,145,861 (வடக்கு கேப்) – 12,272,263 (கடெங்)
பரப்புகள்47,080 km2 (18,178 sq mi) (கடெங்) – 372,890 km2 (143,973 sq mi) (வடக்கு கேப்)
அரசுமாகாண அரசு, தேசிய அரசு
உட்பிரிவுகள்மாவட்டங்கள்

தென்னாப்பிரிக்கா ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் நான்கு மாகாணங்கள் இருந்தன. 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பந்துசுத்தான்கள் என்றழைக்கப்பட்ட, தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கையால் கறுப்பின பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்டிருந்த, நிலப்பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த நான்கு மாகாணங்கள் ஒன்பது மாகாணங்களாக பிரிக்கப்பட்டன. தென்னாப்பிரிக்க அரசியலமைப்பின் 12வது, 13வது, 16வது சட்டத்திருத்தங்கள் இவற்றில் ஏழு மாகாணங்களின் எல்லைகளை மாற்றியமைத்தன.

தற்போதைய மாகாணங்கள்[தொகு]

கொடி மாகாணம் தலைநகரம் மிகப் பெரும் நகரம் பரப்பு [1] மக்கள்தொகை (2011) [2] மக்கள்தொகை அடர்த்தி (2011) ம.மே.சு (2003) [3]
Flag of the Eastern Cape Province.png கிழக்கு கேப் பிஷோ எலிசபெத் துறைமுகம் 168,966 km2 (65,238 sq mi) 6,562,053 38.8/km2 (100/sq mi) 0.62
Flag of the Free State Province.png விடுதலை இராச்சியம் புளும்பொன்டின் புளும்பொன்டின் 129,825 km2 (50,126 sq mi) 2,745,590 21.1/km2 (55/sq mi) 0.67
Flag of the Gauteng Province.png கடெங் ஜோகானஸ்பேர்க் ஜோகானஸ்பேர்க் 18,178 km2 (7,019 sq mi) 12,272,263 675.1/km2 (1,749/sq mi) 0.74
Flag of the KwaZulu-Natal Province.png குவாசுலு-நதால் பீட்டர்மாரிட்சுபர்கு டர்பன் 94,361 km2 (36,433 sq mi) 10,267,300 108.8/km2 (282/sq mi) 0.63
Flag of the Limpopo Province.png லிம்போபோ போலோக்வேன் (பீட்டர்சுபர்கு) போலோக்வேன் 125,754 km2 (48,554 sq mi) 5,404,868 43.0/km2 (111/sq mi) 0.59
Flag of Mpumalanga Province.svg இம்புமலாங்கா நெல்சுபுரூய்ட் நெல்சுபுரூய்ட் 76,495 km2 (29,535 sq mi) 4,039,939 52.8/km2 (137/sq mi) 0.65
Flag of the North West Province.png வட மேற்கு மாகிகெங் (மாஃபிகெங்) ருசுட்டென்பர்கு 104,882 km2 (40,495 sq mi) 3,509,953 33.5/km2 (87/sq mi) 0.61
Flag of the Northern Cape Province.png வடக்கு கேப் கிம்பர்லி கிம்பர்லி 372,889 km2 (143,973 sq mi) 1,145,861 3.1/km2 (8.0/sq mi) 0.69
Flag of the Western Cape Province.png மேற்கு கேப் கேப் டவுன் கேப் டவுன் 129,462 km2 (49,986 sq mi) 5,822,734 45.0/km2 (117/sq mi) 0.77
Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கக் குடியரசு பிரிட்டோரியா, கேப் டவுன், புளும்பொன்டின் ஜோகானஸ்பேர்க் 1,220,813 km2 (471,359 sq mi) 51,770,560 42.4/km2 (110/sq mi) 0.67

அடிக்குறிப்புகள்:

† இந்தத் தரவுகளில் பிரின்சு எட்வர்டு தீவுகள் சேர்க்கப்படவில்லை (335 km2 (129 sq mi), நிரந்தமாக வாழ்பவர்கள் எவருமிலர்); இத்தீவுகள் அந்தாட்டிக்காவின் வடக்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள பகுதிகளாகும். இவை சட்ட, தேர்தல் காரணங்களுக்காக மேற்கு கேப் மாகாணத்தின் அங்கமாக உள்ளன.
‡ 1994இலிருந்து 2004 வரை பீட்டர்சுமாரிட்சுபர்கும் உலுண்டியும் இணையாக குவாசுலு-நதால் மாகாணத்தின் தலைநகரமாக இருந்தன.

மேற்சான்றுகள்[தொகு]