உள்ளடக்கத்துக்குச் செல்

மார்டி கிறாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்டி கிறாஸ்
பிற பெயர்(கள்)பருத்த செவ்வாய், மன்னிக்கப்பட்ட செவ்வாய்
வகைகிறித்தவம், கலாச்சாரம்
முக்கியத்துவம்தவக் கால நோன்புக்கு முந்திய கொண்டாட்டம்
கொண்டாட்டங்கள்ஊர்வலம், விருந்து
நாள்திருநீற்றுப் புதனுக்கு முந்திய நாள், உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் 47 நாட்கள்
2024 இல் நாள்பெப்பிரவரி 13
2025 இல் நாள்மார்ச்சு 4
2026 இல் நாள்பெப்பிரவரி 17
நிகழ்வுவருடா வருடம்
தொடர்புடையனமன்னிக்கப்பட்ட செவ்வாய்; கேளிக்கை, மன்னிக்கப்பட்ட திங்கள், திருநீற்றுப் புதன், தவக் காலம், Užgavėnės, Maslenitsa, வேலன்டைன் நாள்

மார்டி கிறாஸ் (Mardi Gras) எனப்படுவது திருநீற்றுப் புதனுக்கு முந்திய நாள் ஒரு கேளிக்கைப் பண்டிகை ஆகும். இந்த பிரான்சியச் சொல்லை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "பட் டியூஸ்டே" (Fat Tuesday) என ஆகும். அதாவது "பருத்த செவ்வாய்". இத்திருவிழா "மூன்று அரசர்கள் தினம்" அன்று ஆரம்பித்து திருநீற்றுப் புதனுக்கு முந்தைய தினம் முடிவடையும். இத்திருவிழாவை உண்ணா நோன்பு ஆரம்பிப்பதற்கு முன் அறுசுவை உணவு அருந்தி கொண்டாடுகின்றனர். இத்திருவிழாவில் தாங்கள் செய்த பாவங்கள் குறித்து பாவ மன்னிப்பு கேட்டும் பிரார்த்தனை செய்கின்றனர். இத்திருவிழாவில் கொண்டாட்டங்களைத் தவிர முக்கியமானவையாக கருதப்படுபவை; உண்ணா நோன்பு, மதம் சார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் செய்த தவறுகள் குறித்து வருந்துதல் என்பனவாகும்.

மரபுகள்

[தொகு]

இத்திருவிழாவின் முக்கிய மரபுகளாக முகமூடி அணிதல், வேடமிடுதல், சமுதாய மரபுகளை மாற்றி அமைத்தல், ஆடுதல், விளையாட்டுப் போட்டிகள், ஊர்வலங்கள் போன்றவையாகும். உண்மையில், கிறித்தவ மரபான பாவ மன்னிப்பு நாள் போல வெறும் ஒரு நாள் பண்டிகையாக இருந்த இவ்விழாவை ஐரோப்பிய மக்கள் அது இடம் பெறும் எல்லா நாட்களையும் மார்டி கிறாஸ் பண்டிகையை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். சில அமெரிக்க நாடுகளில், இதை "மார்டி கிறாஸ் தினம்" என்று அழைக்கின்றனர்.[1] இது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. சிலர் மூன்று அரசர்கள் தினத்தில் ஆரம்பித்து 'பன்னிரண்டாவது இரவு' வரை கொண்டாடுகின்றனர்.[2] சிலர் திருநீற்றுப் புதனுக்கு முந்தைய மூன்று நாட்களில் மட்டும் கொண்டாடுகின்றனர்.

பெல்ஜியம்

[தொகு]

பெல்ஜியத்திலிள்ள "பின்ச்செ" எனும் ஊரில் 'மார்டி கிறாஸ்' பண்டிகை ஆண்டின் மிக முக்கிய நாளாகும். இந்நாளை 'பின்ச்செ திருவிழாவின்' சிகரம் என்றும் கூறலாம். சுமார் 1000 ஜில்லர்கள் (வேடமணிந்த ஆண்கள்) காலை 4 மணி முதல் சூரிய மறைவு வரையில் நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள். நாள் முழுவதும் பாரம்பரிய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். 2003 இல் பின்ச்செ திருவிழா யுனெஸ்கோ "மனித நேயம் ஓரல் மற்றும் அருவ பாரம்பரியத்தை பற்றிய மிக அருமையான படைப்பு" என்று அழைக்கப் பெற்றது.

பிரேசில்

[தொகு]

பிரேசிலிய விடுமுறைகளில் நடைபெறும் திருவிழாகளில் இத்திருவிழாவே மிகவும் முக்கியமானதாகும். இந்தத் திருவிழா பிரேசிலின் 70% சுற்றுப் பயணிகளைக் கவர்ந்து ஈர்க்கின்றது. ஒவ்வொரு பிரேசிலிய நகரத்திலும் ஒவ்வொரு முறையைக் கடைப்பிடித்தாலும், எல்லா நகரங்களிலும் பாரம்பரிய சாம்பா நடனம் ஆடப்படுகின்றது. பிரேசிலிலும் உலகத்திலும் மிகப் பெரிய பண்டிகையாகக் கொண்டாடப்படுவது ரியோ டி ஜெனேரியோவில் கொண்டாடப்படும் மார்டி கிறாஸ் பண்டிகையாகும். சுமார் 2 மில்லியன் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இப்பண்டிகையில் கலந்து கொள்வர். சல்வடோர் நகரத்திலும் மிகப் பெரிய திருவிழா கொண்டாட்டம் நடைபெறும்.

ஜெர்மனி

[தொகு]

ஜெர்மனியில் நடக்கும் 'மார்டி கிறாஸ்' பண்டிகையை "கார்னெவல்", "பாஸ்ட் நாச்ட்" என்று இடத்திற்கு தகுந்தாற் போன்று பலவாறு அழைக்கின்றனர். ஆனால் அப் பெயர்கள் எல்லாம் ஒரே பண்டிகையைத் தான் குறிக்கின்றன. இது திருநீற்றுப் புதனுக்கு முன்னால் வரும் திங்கட்கிழமையன்று இடம் பெறுகின்றது.

இத்தாலி

[தொகு]

இத்தாலியில் இப்பண்டிகையை "மார்டேடி கிறாஸ்ஸோ" (பருத்த செவ்வாய்) என்று கொண்டாடுகின்றனர். இதுதான் இங்கு முக்கியத் திருவிழா. இதற்கு முன்பு வரும் வியாழன் அன்று இப்பண்டிகை இங்கு தொடங்குகின்றது. அதை "ஜியோவேதி கிறாஸ்ஸோ" (பருத்த வியாழன்) என்று அழைக்கின்றனர். வெனிஸ், வியாரெஜ்ஜியோ, மற்றும் இவ்ரியா போன்ற இடங்களில் இப்பண்டிகை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

உசாத்துணை

[தொகு]
  1. In London, Mardi Gras season: "Paul's Pastry Shop kneads a ton of dough in Picayune", Allbusiness.com, 2009, webpage: Allbusiness-35.
  2. "Mardi Gras Terminology". "Mobile Bay Convention & Visitors Bureau". Archived from the original on டிசம்பர் 9, 2007. பார்க்கப்பட்ட நாள் November 18, 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்டி_கிறாஸ்&oldid=3567373" இலிருந்து மீள்விக்கப்பட்டது