அடால்ப் குவெட்லெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடால்ப் குவெட்லெட்
பிறப்பு(1796-02-22)22 பெப்ரவரி 1796
கெண்ட், பிரெஞ்சுக் குடியரசு
இறப்பு17 பெப்ரவரி 1874(1874-02-17) (அகவை 77)
பிரசெல்சு, பெல்ஜியம்
தேசியம்பெல்ஜியம்
துறைவானியலாளர்
கணிதவியலாளர்
புள்ளியியலாளர்
சமூகவியலர்
பணியிடங்கள்பிரசெல்சு அவதான நிலையம்
கல்வி கற்ற இடங்கள்கெண்ட் பல்கலைக்கழகம், பிரான்சு
அறியப்படுவதுசமூகவியலுக்கு பங்களிப்பு
தாக்கம் 
செலுத்தியோர்
ஜோசப் ஃபூரியே[1]
பியர் சிமோன் இலப்லாசு[1]

இலாம்பர்ட் அடோல்ப் யேக்குவசு குவெட்டெலெட் (Lambert Adolphe Jacques Quetelet, பிரெஞ்சு மொழி: [kətlɛ]; 22 பிப்ரவரி 1796; 17 பிப்ரவரி 1874) ஒரு பெல்ஜிய வானியலாளரும் மக்கள்தொகையியலாளரும் கணிதவியலாளரும் புள்ளியியலாளரும் சமூகவியலாளரும் ஆவார். இவர் பிரசல்சு வான்காணகம் எனும் அரசு கழக பெல்ஜிய வான்காணகத்தை நிறுவினார். இவர் சமூக அறிவியல் புலங்களில் புள்ளியியல் முறைகளை அறிமுகப்படுத்தினார். இவரது பெயர் சிலவேளைகளில் குவேட்டெலெட் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

வாழ்க்கை[தொகு]

அடால்ப் குவெட்லெட் அப்போது பிரெஞ்சுக் குடியரசில் இருந்த கெண்டில் பிரான்கொய் அகத்தின் யாக்குவசு ஃஎன்றி குவெட்டெலெட்டுக்கும் ஆன்னி பிரான்கொய் வாந்தெர்வெல்டுக்கும் மனாகப் பிறந்தார். இவரது தந்தையார் பிரான்சில் உள்ள ஃஏம் நகரில் பிறந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியக் குடிமகன் ஆனவர்.இவருக்கு வேலை தந்த சுகாட்டிய நிலக்கிழாருடன் ஐரொப்பா முழுதும் சுற்ரிவந்துள்ளார். குறிப்பாக இத்தாலியில் நீண்டகாலம் தங்கியுள்ளார். தன் 31 ஆம் அகவையில் கெண்டில் தங்கி அந்நகரில் வேலையில் சேர்ந்துள்ளார். இங்கு தான் அடால்ப் 9 குழந்தைகளில் ஐந்தாம் குழந்தையாகப் பிறந்துள்ளார். இதில் பலர் இளமையிலேயே இறந்துவிட்டுள்ளனர்.

அடால்ப்புக்கு 7அகவை ஆகும்போதே பிரான்கொய் இறந்துள்ளார். அடால்ப் கெண்ட் பள்ளியில் பயின்றார். அங்கு 1815 இல் இருந்து தன் 19 ஆம் அகவையில் கணிதப் பாடம் கற்பித்துள்ளார். இவர் 1819 இல் பிரசல்சில் உள்ள அத்னேயத்துக்குச் சென்று அதே ஆண்டில் குவியத் தொலைவின் சில புதிய இயல்புகளும் மேலும் சில வரைவுகளும் எனும் தன் ஆய்வுரையை முடித்துள்ளார்.

இவர் 1819 இல் கெண்ட் பல்கலைக்கழகத்தில் கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்றார். குறுகிய காலத்துக்குள்ளேயே அரசையும் தனியார் கொடையும் பெற்று 1828 இல் பிரசல்சு வான்காணகத்தை உருவாக்கினார்.

இவர் 1820 இல் அரசு கல்விக்கழகத்தில் உறுப்பினரானார். இவர் பெல்ஜியம் படைதளப் பள்ளியிலும் அறிவ்யல் அருங்கட்சியகத்திலும் விரிவுரை ஆற்றினார். இவர் 1825 இல் நெதர்லாந்து அரசு நிறுவனத்தில் தொடர்பாளர் ஆனார். பிறகு 1827இல் அதன் உறுப்பினரானார். அந்நிறுவனத்தில் 1841 முதல் 1851 வரை அதன் அகவைமுதிர் ஆய்வு உதவியாளராகத் திகழ்ந்தார்.இந்நிறுவனம் கலை, அறிவியலுக்கான நெதர்லாந்து அரசு கல்விக்கழகம் ஆனதும் அதன் அயல்நாட்டு உறுப்பினர் ஆனார்.[2] இவர் 1850 இல் அறிவிய்லுக்கான சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தில் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்ய்ப்பட்டார்.

இவர் பல புள்ளியியல் இதழ்களையும் கழகங்களையும் ஏற்படுத்தினார். மேலும் பன்னாட்டுப் புள்ளியிஅலாளர்களிடையே கூட்டுறவை வளர்த்தார்.

இவர் 1855 இல் உறுப்புக் குருதியொழுக்கு நோய்வாய்ப்பட்டார். அதிலிருந்து மெல்ல தேறலானார். அப்போதும் இவர் தன் அறிவியல் பணியைத் தொடர்ந்தார். இவர் 1874 பிப்ரவரி 17 இல் இறந்தார்; பிரசல்சு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

வாழ்க்கைப் பணி[தொகு]

இவரது ஆய்வு வானியல், வானிலையியல், கணிதவியல், புள்ளியியல், மக்கள்தொகையியல், சமூகவியல், குற்றவியல், அறிவியல் வரலாறு என பல அறிவியல் புலங்களில் அமைந்தது. அறிவியல் வளர்ச்சிக்கு இவர் கணிசமான பங்களிப்பைச் செய்ததோடு பொதுமக்களுக்கான பல அறிவியல் நூல்களை இயற்றியுள்ளார். இவர் பெல்ஜிய அரசுவான்காணகத்தை நிறுவினார். மேலும் இவர் பல தேசிய, பன்னாட்டு புள்ளியியல் கழககளையும் அறிவியல் இதழ்களையும் ஏற்படுத்தினார்.முதல்வரிசைப் பன்னாட்டுப் புள்ளியியல் பேராயங்கலின் தலைமை ஏற்றுள்ளார். இவர் விடுதலையான சிந்தனையாளர்.நிறுவன எதிர்ப்பாளர். ஆனால் இரைமறுப்பாலரோ பொருள்முதல் வாதியோ சமவுடைமையாளரோ அல்ல.

சமூக இயற்பியல்[தொகு]

இவர் காலத்தில் நிகழ்தகவும் புள்ளியியலும் வானியலில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக,பிழைகளைக் காண மீச்சிறு சதுரங்கள் முறை பரவலான பயன்பாட்டில் இருந்தது. இந்நிலையில், முதன்முதலாக இம்முறையைச் சமூக அறிவியல் புலங்களில் பயன்படுத்தியவர் குவெட்லெட்டே ஆவார்.இவ்வகைப் பயன்பாட்டுப் புலத்துக்கு இவர் சமூக இயற்பியல் எனப் பெயரிட்டார். சமூகவியலின் சிக்கலான தன்மையை இவர் அறிந்தவர் தான். எனவே பலசமூக மாறிகளை அளக்கவேண்டியதன் தேவையை உணர்ந்தார். இதில் இவரது குறிக்கோள் குற்றவீதம், திருமணவீதம், தற்கொலை வீதம் போன்ற சமூக நிகழ்வுகளின் புள்ளியியல் விதிகளைக் கண்டறிய விரும்பினார்.இவற்றை மற்ற சமூகக் காரணிகளால் விளக்க விரும்பினார். இந்த அணுகுமுறையை அக்கால அறிவியலார் விரும்பவில்லை. இவை மாந்தனின் தேர்வு விடுதலையோடு முரண்படுவதாக அவர்கள் கருதியுள்ளனர்.

இவரது பெருந்தாக்கம் விளைவித்த நூல் Sur l'homme et le développement de ses facultés, ou Essai de physique sociale, என்பதகும். இதை இவர் 1835 இல் வெளியிட்டார். ஆங்கிலத்தில் இதன் பெயர் மாந்தனின் பனுவல் என இருந்தாலும் நேரடி மொழிபெயர்ப்பு "மாந்தனும் அவனது அறிவுப்புல வளர்ச்சியும்" அல்லது "சமூக இயற்பியல் கட்டுரைகள் " என்பதேயாகும். இதி இவர் சராசரி மாந்தன் (l'homme moyen) கருத்துப்படிமத்தை உருவாக்கியுள்ளார். இதில் அவனது அளக்கப்பட்ட இயல்புகளின் நிரல் புள்ளியியலின் இயல்பரவல் வரையைப் பின்பற்றுவதை எடுத்துகாட்டினார். இவர் இதுபோன்ர பல சமூக மாறிகளின் தரவுகளைத் தொகுத்து அவற்றின் நிரல் (சராசரி )மதிப்புகளைக் கண்டறிந்தார்.

தான் அறிமுகப்படுத்திய , சொல்லைக் குவெட்லெட் பயன்படுத்தி விட்டதை அறிந்த அகத்தே காம்ப்டே, அவர் திரட்டிய புள்ளியியல் விவரங்களை ஏற்காததால், சமூகவியல் எனும் புதிய சொல்லை உருவாக்கிப் பயன்படுத்தலானார்.

குற்றவியல்[தொகு]

குவெட்லெட் குற்றவியலில் பெயர் போனவர். இவரும் ஆந்திரே மைக்கேல் குவெரியும் இணைந்து குற்றவியலில் நேர்க்காட்சிவாதப் பள்ளியையும் நிலவரையியல் பள்ளியையும் உருவாக்கினர். இவை சமூகவியலில் விரிவாகப் புள்ளியியல் நுட்பங்களை பயன்படுத்தின. புள்ளியியல் பகுப்ப்பாய்வுவழி இவர் குற்றத்துக்கும் பிற சமூக்க் காரணிகளுக்கும் இடையே உள்ள உறவை நிறுவினார். அகவைக்கும் குற்றத்துக்கும், பாலினத்துக்கும் குற்றத்துக்கும் வலிவான உறவுகள் அமைவதை எடுத்துகாட்டினார்.குற்றத்தோடு உறவுடைய மற்ர காரணிகளாக, காலநிலை, வறுமை, கல்வி, குடிப்பழக்கம் ஆகியவை அமைதலைக் கண்டறிந்தார். தன் ஆய்வு விவரங்களைக் கொண்டு குற்ற வளர்ச்சியைத் தூண்டும்காரணிகள் எனும் நூலை வெளியிட்டார்.[3]

மாந்த அளவியல்[தொகு]

இவர் 1835 இல் Sur l'homme et le développement de ses facultés, essai d'une physique sociale எனும் ஆய்வில் நிரல் (சராசரி) மாந்தனின் இயல்புகளை விவரித்து அவை புள்ளியியலின் இயல்வரையைப் பின்பற்றுவதை விளக்கினார். இந்த இயல்வேறுபாடு மக்கள்திரளில் இயற்கைத் தேர்வு அல்லது செயற்கைத் தேர்வு நிகழ்வதை நிறுவின.[4]


இவர் கண்டறிந்த எடைக்கும் உயரத்துக்கும் உள்ள நிரலான உறவை பிற்காலத்தில் மக்கள் நலவாழ்வுத் திட்டங்கள் பின்பற்றலாயின. மிகவும் சிறுசிறு வேறுபாடுகளுடன் உடல்பொறுண்மை சுட்டி (குவெட்லெட் சுட்டி), இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது.[5] இவரது மாந்த அளவியல் தரவுகள் இக்காலப் பயன்பட்டில் ஒவ்வொரு நுகர்வுசார் ஆக்கப் பொருள்களிலும் பயன்படுகிறது.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் 1839 இல் பல அரசு கழக ஆய்வுறுப்பினற்களைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவ்வாண்டு இவர் அக்கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[6]

வெளியீடுகள்[தொகு]

 • 1823. Relation d'un voyage fait à la grotte de Han au mois d'août 1822'. 'With M.M. Kickx.
 • 1827. Recherches sur la population, les naissances, les décès, les prisons, les dépôts de mendicité, etc., dans le royaume des Pays-Bas.
 • 1829. Recherches statistiques sur le royaume des Pays-Bas.
 • 1831. The Propensity to Crime.
 • 1834. Astronomie élémentaire.
 • 1835. Sur l'homme et le développement de ses facultés, ou Essai de physique sociale. 2 volumes.
 • 1838. De l'influence des saisons sur la mortalité aux différens âges dans la Belgique.
 • 1839. Catalogue des principales apparitions d'étoiles filantes.
 • 1842. A Treatise on Man and the Development of His Faculties.
 • 1843. Sur l'emploi de la boussole dans les mines.
 • 1845–1851. Sur le climat de la Belgique. 2 volumes.
 • 1848. Du système social et des lois qui le régissent.
 • 1848. Sur la statistique morale et les principes qui doivent en former la base.
 • 1850. Mémoire sur les lois des naissances et de la mortalité à Bruxelles.
 • 1853. Mémoire sur les variations périodiques et non périodiques de la température, d'après les observations faites, pendant vingt ans, à l'observatoire royal de Bruxelles.
 • 1864. Histoire des sciences mathématiques et physiques chez les Belges.
 • 1867. Météorologie de la Belgique comparée à celle du globe.
 • 1867. Sciences mathématiques et physiques au commencement du XIXe siècle.
 • 1869. Sur la physique du globe en Belgique.
 • 1870. Anthropométrie, ou Mesure des différentes facultés de l'homme.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Quetelet, Adolphe": entry in The Britannica Guide to Statistics and Probability, edited by Erik Gregersen
 2. "Lambert Adolphe Jacques Quetelet (1796 - 1874)". Royal Netherlands Academy of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் 20 July 2015.
 3. Piers Beirne (1987). "Adolphe Quetelet and the Origins of Positivist Criminology". In; American Journal of Sociology 92(5): pp. 1140–1169.
 4. Eiseley, Loren (1961). Darwin's Century. Anchor Books (Doubleday). p. 227.
 5. Garabed Eknoyan (2008). "Adolphe Quetelet (1796–1874) – the average man and indices of obesity". In: Nephrol. Dial. Transplant. 23 (1): 47–51.
 6. "Fellows of the Royal Society". London: Royal Society. Archived from the original on 2015-03-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடால்ப்_குவெட்லெட்&oldid=3582548" இலிருந்து மீள்விக்கப்பட்டது