உள்ளடக்கத்துக்குச் செல்

யுவான் அல்மெய்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுவான் அலெமெய்டா
Juan Almeida
பிறப்பு(1927-02-17)பெப்ரவரி 17, 1927
அவானா, கியூபா
இறப்புசெப்டம்பர் 11, 2009(2009-09-11) (அகவை 82)
அவானா, கியூபா

யுவான் அல்மெய்டா பொஸ்க் (Juan Almeida Bosque, பெப்ரவரி 17, 1927செப்டம்பர் 11, 2009[1]) என்பவர் கியூபாவின் அரசியல்வாதியும் 50களில் இடம்பெற்ற கியூபா புரட்சியின் முக்கியமான ஆரம்பகட்டத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். புரட்சியின் பின்னர் இவர் கியூபா பொதுவுடமைக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்தார். 2009 இல் அவர் இறக்கும் போது கியூபாவின் துணை அதிபராக இருந்தார்.

பிடல் காஸ்ட்ரோ மற்றும் ராவுல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியின் ஆரம்பகாலங்களின் போது போராடியிருந்தார். இந்த போராட்டத்தின் முடிவாக ஃபல்கேன்சியோ பாட்டிஸ்டாவின் அரசாங்கம் 1959 ஆம் ஆண்டு ஆட்சியில் தூக்கி எறியப்பட்டது.

அவானாவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான யூவான் அல்மெய்தா, புரட்சியாளர்கள் தலைமை பீடத்தில் இருந்த ஒரே கறுப்பினத்தவர் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

அவானாவின் வறுமையான பகுதி ஒன்றில் பிறந்த அல்மெய்டா தனது 11 வயதில் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தி கட்டிடத் தொழிலாளி ஆனார்[2]. அவானா பல்கலைக்கழகத்தில் 1952 இல் சட்டம் பயின்ற அல்மெய்டா, அங்கு பிடெல் காஸ்ட்ரோவுடன் நெருங்கிய நட்புக் கொண்டார். அதே ஆண்டில் கியூபப் புரட்சியில் இணைந்து கொண்டார். 1953 பிடெல் மற்றும் ராவுல் உடன் இணைந்து சண்டியாகோவில் மொன்காடா இராணுவ நிலை மீதான தாக்குதலில் பங்குகொண்டு காஸ்ட்ரோக்களுடன் கைது செய்யப்பட்டார்[1][3]. 1955, மே 15 இல் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு மெக்சிக்கோவுக்கு அனுப்பப்பட்டார். இவர் பின்னர் 1956, நவம்பர் 25 இல் சே குவேரா, மற்றும் காஸ்ட்ரோக்களுடன் மொத்தம் 82 பேர்களாக படகில் கியூபா வந்திறங்கினர். இவர்களில் 16 பேரே உயிர் தப்பினர். ஏனையோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Juan Almeida Bosque, a Comrade of Castro’s, Is Dead at 82, த நியூயோர்க் டைம்சு
  2. Cuban revolutionary Almeida dies, பிபிசி
  3. Ramonet, Ignacio, Fidel Castro: My Life. Penguin Books: 2007, p. 681

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுவான்_அல்மெய்டா&oldid=3226302" இலிருந்து மீள்விக்கப்பட்டது