உள்ளடக்கத்துக்குச் செல்

நிலச்சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மண்சரிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2018 இல் பெரு, கஸ்கோ, பெரு அருகே நிலச்சரிவு
உலகெங்கிலும் சாத்தியமான நிலச்சரிவு செயல்பாடு எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்க்க நாசாவால் உருவாக்கப்பட்ட மாதிரி.
கலிபோர்னியாவின் சான் மேடியோ கவுண்டியில் நிலச்சரிவின் இயங்குபடம்
நிலச்சரிவுகள்

நிலச்சரிவு அல்லது பாறைச்சரிவு(Landslides, also known as landslips, or rockslides,)[1][2][3] என்பது மலை உள்ளிட்ட சாய்வாக உள்ள நிலப்பகுதிகளில் உள்ள கற்கள், பாறைகள், மணல் கலவை சரிவு நோக்கி கீழே நகர்வது ஆகும்.[4] மலைத்தொடர்கள் முதல் கடலோர பாறைகள் அல்லது நீருக்கடியில் கூட செங்குத்தான அல்லது லேசான சரிவுகளில் ஏற்படும் நகர்வுகளும் நிலச்சரிவாக வகைப்படுத்தப்படும்.[5] இதில் அவை நீர்மூழ்கி நிலச்சரிவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆப்பிரிக்கா, நைஜீரியாவில் நிலச்சரிவுகள்
நைஜீரியாவில் பாறை சரிவுகள்

நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஈர்ப்பு விசை முதன்மையான உந்து சக்தியாக உள்ளது. ஆனால் சரிவான நிலத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் பிற காரணிகளும் உள்ளன. பல சந்தர்ப்பங்களில், நிலச்சரிவு ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் தூண்டப்படுகிறது (அதாவது கடுமையான மழைப்பொழிவு, நிலநடுக்கம், சாலை அமைப்பதற்காக வெட்டப்படும் சாய்வு வெட்டு, மற்றும் பல), இருப்பினும் இதை அடையாளம் காணவியலாது.

மனித வள மேம்பாடு (நகர்ப்புற வளர்ச்சி போன்றவை), இயற்கை வளங்களை சுரண்டுதல் (கனிமச் சுரங்கம், காடழிப்பு) போன்றவை நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்பட காரணமாகின்றன.[6] மேலும் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலில் மனித தாக்கத்தால் ஏற்படும் புவி வெப்பமயமாதல், நிலசரிவுகளைத் தூண்டும் இயற்கை நிகழ்வுகள் (மோசமான வானிலை போன்றவை) நிலச்சரிவுக்கு காரணமாக இருக்கலாம்.[7] நிலச்சரிவு தணிப்பு என்பது நிலச்சரிவுகளில் மனித தாக்கங்களின் அபாயத்தை குறைப்பதற்கான கொள்கை மற்றும் நடைமுறைகளை விவரிக்கிறது, இயற்கை பேரழிவு அபாயத்தை குறைக்கிறது.

காரணங்கள்

[தொகு]
1950 ஸ்வீடனில் உள்ள சுர்டே என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு. 1950 ஸ்வீடனில் உள்ள சுர்டே என்ற இடத்தில் நிலச்சரிவு. விரைவான களிமண் சரிவான இதில் ஒரு மனிதர் கொல்லபட்டார்.

சாய்வாக உள்ள நிலப்பகுதி (அல்லது அதன் ஒரு பகுதி) அதன் நிலைத்தன்மை இழக்க காரணமான சில செயல்முறைகளுக்கு உள்ளாகும்போது நிலச்சரிவு உண்டாகிறது. ஒரு சரிவுப் பகுதியின் நிலைத்தன்மையில் மாற்றம் ஏற்படுவதற்கு பல காரணிகள் இருக்கின்ற. நிலச்சரிவுக்கான இயற்கை காரணங்கள் பின்வருமாறு:

  • மழை நீர ஊடுருவல், பனி உருகுதல், பனிப்பாறைகள் உருகுதல் போன்றவற்றால் நிலத்தடியில் கூடுதல் நீர் செறிவு ஏற்பட்டு அதன் எடை கூடுதல்;[8]
  • நிலத்தடி நீர் உயருதல் அல்லது நுண்துளை நீர் அழுத்தம் அதிகரிப்பு (எ. கா. மழைக்காலங்களில் நீலத்தடி நீர் உயர்வு, அல்லது நிலத்தில் மழை நீர் ஊடுருவல் காரணமாக);[9]
  • விரிசல் மற்றும் ஆழப் பிளவுகளில் நீர்மத்தின் அழுத்தம் அதிகரிப்பு;[9][10]
  • நிலத்தின் மீது வளரும் தாவரங்கள் அழிபடுவதால் நிலத்தில் பிடிமானம் இல்லாமல் போதல் (எ. கா; காட்டுத்தீக்குப் பிறகு)[11]
  • ஆறுகள் அல்லது கடல் அலைகளால் ஒரு சரிவின் மேற்புரத்தில் ஏற்படும் அரிப்பு ;[12]
  • இயற்பொருள் மற்றும் வேதியியல் வானிலை (எ. கா; மீண்டும் மீண்டும் உறைபனி ஏற்படுதல் மற்றும் கரைதல், வெப்பமாகுதல் மற்றும் குளிர்தல், நிலத்தடி நீரில் உப்பு கசிதல் அல்லது கனிமக் கரைப்பு காரணமாக);[13][14][15]
  • நிலநடுக்கத்தால் தரையில் ஏற்படும் நடுக்கம். இது சரிவான நிலப்பகுதியை நேரடியாக சீர்குலைத்தோ அல்லது பலவீனப்படுத்தியோ நிலச்சரிவை உருவாக்கும் விரிசல்களை ஏற்படுத்தலாம்;[10][16][17]
  • எரிமலை வெடிப்புகள்;[18]
  • நுண்துளை நீர்மக் கலவையில் உண்டாகும் மாற்றங்கள்;[19]
  • வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் (பருவகால அல்லது காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்டவை).[20][21]

மனித நடவடிக்கைகள் நிலச்சரிவுக்கு காரணமாகின்றன, அவை:

  • காடழிப்பு, உழவு, கட்டுமானம்;
  • இயந்திரங்கள் அல்லது போக்குவரத்தால் ஏற்படும் அதிர்வுகள்;[22]
  • வெடிவைத்தல் மற்றும் சுரங்கநடவடிக்கைகள்;[23]
  • மண்வேலை (எ. கா. ஒரு சரிவின் வடிவத்தை மாற்றுவது, அல்லது புதிய சுமைகளை ஏற்றுவதன் மூலம்);
  • மண்ணின் கெட்டித் தன்மைக்கு வலு சேர்க்கும் , ஆழமான வேரூன்றிய தாவரங்களை அகற்றுதல்;
  • வேளாண்மை அல்லது வனவியல் நடவடிக்கைகள் (மரம் வெட்டுதல்), மற்றும் நகரமயமாக்கல், இது மண்ணில் ஊடுருவும் நீரின் அளவை மாற்றுகிறது.
  • நிலப் பயன்பாடு மற்றும் நிலப்பரப்பில் ஏற்படும் தற்காலிக மாறுபாடு (LULC): இது வேளாண் பகுதிகளை மனிதர்கள் கைவிடுவதும் அடங்கும், எ.கா. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் காரணமாக. நிலச் சிதைவு மற்றும் அதிக மழைப்பொழிவு ஆகியவை மண்ணரிப்பு மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளின் அதிர்வெண்ணை அதிகரிக்கும் காரணியானது.[6]

வகைகள்

[தொகு]
நிலச்சரிவு வகைகள்

ஹங்கர்-லெரூயில்-பிகரெல்லி வகைப்பாடு

[தொகு]

பாரம்பரியமாக நிலச்சரிவு என்ற சொல் புவியின் மேற்பரப்பில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணடுக்குகள் போன்றவற்றின் கீழ்நோக்கிச் சரியும் அனைத்துவகையான சரிவுகளையும் குறிக்க ஒரு காலத்தில் பயன்படுத்தபட்டது. 1978 ஆம் ஆண்டில், புவியியலாளர் டேவிட் வார்ன்ஸ் இந்த சொல் துல்லியமற்று உள்ளதாகக் குறிப்பிட்டார். நிலச்சரிவு வகைகளைக் குறிப்பிட புதியதாக, மிகவும் நெருக்கமான வரைமுறைகளை முன்மொழிந்தார்.[24] இந்த வறைமுறை பின்னர் 1996 இல் குரூடன் மற்றும் வர்னஸ் ஆகியோரால் மாற்றியமைக்கப்பட்டது,[25] பின்னர் ஹட்சின்சனால் (1988) ,[26] ஹங்ர் . (2001),[27] இறுதியாக ஹங்ர், லெரூயில் மற்றும் பிகாரெல்லி (2014) ஆகியோரால் செப்பம் செய்யப்பட்டது.[4] அண்மைய புதுப்பிப்பின் விளைவாக உருவான வகைப்பாடுகளாக 1, கீழே விழுதல், குப்புறக் கவிழ்தல், 3, சாய்வான நிலப்பகுதி நழுவிச் சென்று விழுதல், 4, பாறை, கல், மண் போன்றவை கலவையாக ஆறு போல பாய்தல் போன்ற வகையான நலச்சரிவுகள் உள்ளன. பெரும்பாலான நிலச்சரிவுகள் 20 முதல் 30 பாகைவரை சாய்வாக உள்ள நிலப்பகுதியிலேயே உண்டாகிறது.[28]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Landslide synonyms". thesaurus.com. Roget's 21st Century Thesaurus. 2013. Archived from the original on 24 September 2020. பார்க்கப்பட்ட நாள் 16 March 2018.
  2. McGraw-Hill Encyclopedia of Science & Technology, 11th Edition, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780071778343, 2012
  3. "USGS factsheet, Landslide Types and Processes, 2004". Archived from the original on 2020-10-04. பார்க்கப்பட்ட நாள் 2020-08-28.
  4. 4.0 4.1 Hungr, Oldrich; Leroueil, Serge; Picarelli, Luciano (2014-04-01). "The Varnes classification of landslide types, an update" (in en). Landslides 11 (2): 167–194. doi:10.1007/s10346-013-0436-y. பன்னாட்டுத் தர தொடர் எண்:1612-5118. Bibcode: 2014Lands..11..167H. https://doi.org/10.1007/s10346-013-0436-y. 
  5. Haflidason, Haflidi; Sejrup, Hans Petter; Nygård, Atle; Mienert, Jurgen; Bryn, Petter; Lien, Reidar; Forsberg, Carl Fredrik; Berg, Kjell et al. (2004-12-15). "The Storegga Slide: architecture, geometry and slide development" (in en). Marine Geology. COSTA - Continental Slope Stability 213 (1): 201–234. doi:10.1016/j.margeo.2004.10.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0025-3227. Bibcode: 2004MGeol.213..201H. https://www.sciencedirect.com/science/article/pii/S0025322704002713. 
  6. 6.0 6.1 Giacomo Pepe; Andrea Mandarino; Emanuele Raso; Patrizio Scarpellini; Pierluigi Brandolini; Andrea Cevasco (2019). "Investigation on Farmland Abandonment of Terraced Slopes Using Multitemporal Data Sources Comparison and Its Implication on Hydro-Geomorphological Processes". Water (MDPI) 8 (11): 1552. doi:10.3390/w11081552. பன்னாட்டுத் தர தொடர் எண்:2073-4441. இணையக் கணினி நூலக மையம்:8206777258. , at the introductory section.
  7. Merzdorf, Jessica. "Climate Change Could Trigger More Landslides in High Mountain Asia". Climate Change: Vital Signs of the Planet. NASA's Goddard Space Flight Center. Archived from the original on 2023-02-04. பார்க்கப்பட்ட நாள் 2023-02-04.
  8. Subramanian, S. Siva; Fan, X.; Yunus, A. P.; Asch, T. van; Scaringi, G.; Xu, Q.; Dai, L.; Ishikawa, T. et al. (2020). "A Sequentially Coupled Catchment-Scale Numerical Model for Snowmelt-Induced Soil Slope Instabilities" (in en). Journal of Geophysical Research: Earth Surface 125 (5): e2019JF005468. doi:10.1029/2019JF005468. பன்னாட்டுத் தர தொடர் எண்:2169-9011. Bibcode: 2020JGRF..12505468S. https://agupubs.onlinelibrary.wiley.com/doi/abs/10.1029/2019JF005468. பார்த்த நாள்: 2021-02-23. 
  9. 9.0 9.1 Hu, Wei; Scaringi, Gianvito; Xu, Qiang; Van Asch, Theo W. J. (2018-04-10). "Suction and rate-dependent behaviour of a shear-zone soil from a landslide in a gently-inclined mudstone-sandstone sequence in the Sichuan basin, China" (in en). Engineering Geology 237: 1–11. doi:10.1016/j.enggeo.2018.02.005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-7952. Bibcode: 2018EngGe.237....1H. 
  10. 10.0 10.1 Fan, Xuanmei; Xu, Qiang; Scaringi, Gianvito (2017-12-01). "Failure mechanism and kinematics of the deadly June 24th 2017 Xinmo landslide, Maoxian, Sichuan, China" (in en). Landslides 14 (6): 2129–2146. doi:10.1007/s10346-017-0907-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1612-5118. Bibcode: 2017Lands..14.2129F. 
  11. Rengers, Francis K.; McGuire, Luke A.; Oakley, Nina S.; Kean, Jason W.; Staley, Dennis M.; Tang, Hui (2020-11-01). "Landslides after wildfire: initiation, magnitude, and mobility" (in en). Landslides 17 (11): 2631–2641. doi:10.1007/s10346-020-01506-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1612-5118. Bibcode: 2020Lands..17.2631R. 
  12. Edil, T. B.; Vallejo, L. E. (1980-07-01). "Mechanics of coastal landslides and the influence of slope parameters" (in en). Engineering Geology. Special Issue Mechanics of Landslides and Slope Stability 16 (1): 83–96. doi:10.1016/0013-7952(80)90009-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-7952. Bibcode: 1980EngGe..16...83E. https://dx.doi.org/10.1016/0013-7952%2880%2990009-5. 
  13. Di Maio, Caterina; Vassallo, Roberto; Scaringi, Gianvito; De Rosa, Jacopo; Pontolillo, Dario Michele; Maria Grimaldi, Giuseppe (2017-11-01). "Monitoring and analysis of an earthflow in tectonized clay shales and study of a remedial intervention by KCl wells". Rivista Italiana di Geotecnica 51 (3): 48–63. doi:10.19199/2017.3.0557-1405.048. https://www.researchgate.net/publication/321348162. பார்த்த நாள்: 2018-05-26. 
  14. Di Maio, Caterina; Scaringi, Gianvito; Vassallo, R (2014-01-01). "Residual strength and creep behaviour on the slip surface of specimens of a landslide in marine origin clay shales: influence of pore fluid composition". Landslides 12 (4): 657–667. doi:10.1007/s10346-014-0511-z. https://www.researchgate.net/publication/271630325. பார்த்த நாள்: 2018-05-26. 
  15. Fan, Xuanmei; Xu, Qiang; Scaringi, Gianvito; Li, Shu; Peng, Dalei (2017-10-13). "A chemo-mechanical insight into the failure mechanism of frequently occurred landslides in the Loess Plateau, Gansu Province, China" (in en). Engineering Geology 228: 337–345. doi:10.1016/j.enggeo.2017.09.003. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-7952. Bibcode: 2017EngGe.228..337F. https://www.sciencedirect.com/science/article/pii/S001379521730889X. 
  16. Fan, Xuanmei; Scaringi, Gianvito; Domènech, Guillem; Yang, Fan; Guo, Xiaojun; Dai, Lanxin; He, Chaoyang; Xu, Qiang et al. (2019-01-09). "Two multi-temporal datasets that track the enhanced landsliding after the 2008 Wenchuan earthquake" (in en). Earth System Science Data 11 (1): 35–55. doi:10.5194/essd-11-35-2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1866-3508. Bibcode: 2019ESSD...11...35F. https://www.earth-syst-sci-data.net/11/35/2019/essd-11-35-2019.html. பார்த்த நாள்: 2019-01-09. 
  17. Fan, Xuanmei; Xu, Qiang; Scaringi, Gianvito (2018-01-26). "Brief communication: Post-seismic landslides, the tough lesson of a catastrophe" (in en). Natural Hazards and Earth System Sciences 18 (1): 397–403. doi:10.5194/nhess-18-397-2018. பன்னாட்டுத் தர தொடர் எண்:1561-8633. Bibcode: 2018NHESS..18..397F. 
  18. Watt, Sebastian F.L.; Talling, Peter J.; Hunt, James E. (2014). "New Insights into the Emplacement Dynamics of Volcanic Island Landslides". Oceanography 27 (2): 46–57. doi:10.5670/oceanog.2014.39. பன்னாட்டுத் தர தொடர் எண்:1042-8275. 
  19. Di Maio, C.; Scaringi, G. (2016-01-18). "Shear displacements induced by decrease in pore solution concentration on a pre-existing slip surface" (in en). Engineering Geology 200: 1–9. doi:10.1016/j.enggeo.2015.11.007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-7952. Bibcode: 2016EngGe.200....1D. https://www.sciencedirect.com/science/article/pii/S0013795215300922. 
  20. Scaringi, Gianvito; Loche, Marco (2022-03-15). "A thermo-hydro-mechanical approach to soil slope stability under climate change" (in en). Geomorphology 401: 108108. doi:10.1016/j.geomorph.2022.108108. பன்னாட்டுத் தர தொடர் எண்:0169-555X. Bibcode: 2022Geomo.40108108S. 
  21. Shibasaki, Tatsuya; Matsuura, Sumio; Okamoto, Takashi (2016-07-16). "Experimental evidence for shallow, slow-moving landslides activated by a decrease in ground temperature: Landslides Affected by Ground Temperature" (in en). Geophysical Research Letters 43 (13): 6975–6984. doi:10.1002/2016GL069604. http://doi.wiley.com/10.1002/2016GL069604. 
  22. Laimer, Hans Jörg (2017-05-18). "Anthropogenically induced landslides – A challenge for railway infrastructure in mountainous regions" (in en). Engineering Geology 222: 92–101. doi:10.1016/j.enggeo.2017.03.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-7952. Bibcode: 2017EngGe.222...92L. https://www.sciencedirect.com/science/article/pii/S0013795216307335. 
  23. Fan, Xuanmei; Xu, Qiang; Scaringi, Gianvito (2018-10-24). "The "long" runout rock avalanche in Pusa, China, on 28 August 2017: a preliminary report" (in en). Landslides 16: 139–154. doi:10.1007/s10346-018-1084-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:1612-5118. 
  24. Varnes D. J., Slope movement types and processes. In: Schuster R. L. & Krizek R. J. Ed., Landslides, analysis and control. Transportation Research Board Sp. Rep. No. 176, Nat. Acad. oi Sciences, pp. 11–33, 1978.
  25. Cruden, David M., and David J. Varnes. "Landslides: investigation and mitigation. Chapter 3-Landslide types and processes." Transportation research board special report 247 (1996).
  26. Hutchinson, J. N. "General report: morphological and geotechnical parameters of landslides in relation to geology and hydrogeology." International symposium on landslides. 5. 1988.
  27. Hungr O, Evans SG, Bovis M, and Hutchinson JN (2001) Review of the classification of landslides of the flow type. Environmental and Engineering Geoscience VII, 221-238.
  28. "புதுமை புகுத்து 29: மீண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்க வேண்டாமா!". Hindu Tamil Thisai. 2024-08-13. பார்க்கப்பட்ட நாள் 2024-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலச்சரிவு&oldid=4135347" இலிருந்து மீள்விக்கப்பட்டது