உள்ளடக்கத்துக்குச் செல்

மணிமேகலை இராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணிமேகலை இராமநாதன் (1946 - பெப்ரவரி 17, 2010) கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்துக் கலைஞர். மேடை நாடகம், வானொலி, வடமோடி, தென்மோடிக் கூத்துகள், திரைப்படம், சின்னத்திரை, வில்லுப்பாட்டு என எல்லாவற்றிலும் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டுவந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1946ம் ஆண்டு கொழும்பு கிருலப்பனையில் பிறந்தவர் மணிமேகலை. பத்து வயதாக இருந்தபோதே பாடகியாக மேடையில் கால் பதித்த இவர் தொடர்ந்து பாடசாலை நாடகங்களில் நடித்து பின்னர் மேடைகளில் குழந்தை நட்சித்திரமாக மேடைகளில் தனது திறமையை வெளிப்படுத்த பிரபலமான கலைஞர்களின் ஆதரவும் மணிமேகலைக்குக் கிடைக்க ஆரம்பித்தது.

பல ஈழத்துத் திரைப்படங்களில் தோன்றிய அவர் 300 க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். ஏராளமான வானொலி நிகழ்ச்சிகளில் தோன்றியிருக்கிறார்.

விருதுகளும் பட்டங்களும்[தொகு]

இவரது கலைப் பணியைப் பாராட்டி பல பட்டங்கள் இவருக்குக் கிடைத்தாலும் "கலைச்செல்வி" என்னும் பட்டமே இவரது பெயருடன் நிலைத்து நிற்கின்றது. இலங்கை கலாச்சார அமைச்சு நடாத்திய பல நாடகவிழாக்களிலும் விருதுகளைப் பெற்றுள்ள இவரை 2004ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற கலாச்சார விழாவில் இலங்கையின் பிரதம மந்திரி பாராட்டி பரிசும் வழங்கிக் கௌரவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நவரச நாயகி எனும் பட்டமளித்து தமிழ் கலைஞர் அபிவிருத்தி நிலையம் கெளரவித்தது. அதேபோல் இவரது பொன் விழாவை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியது கிருஷ்ண கலாயம். அதேபோல் தேசிய தமிழ் நாடக உபகுழுவின் தலைவராக இருந்தபோது இவரது கலைப்பணியைப் பாராட்டி அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் கெளரவிக்கப்பட்டவர்.

புகழ் பெற்ற மேடை நாடகங்கள்[தொகு]

  • ஆபிரகாம் கோவூரின் உண்மைக்கதையைத் தழுவி வரணியூரான் எழுதிய "நம்பிக்கை"
  • அமரர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் அரிச்சந்திரா மயானகாண்டம்
  • கலாவினோதன் வில்லுப்பாட்டுச் சின்னமணியின் சத்தியவான் சாவித்திரி
  • காத்தவராயன் கூத்து

இவற்றைவிட மனித தர்மம், கறுப்பும் சிவப்பும், நகரத்துக்கோமாளிகள், சிறுக்கியும் பொறுக்கியும், டைமன்ராணி, சக்காரலம் பென்டர், ஒரு கலைஞனின் கதை, அவன் மீண்டும் வருவான் போன்ற நாடகங்களில் அவர் நடிப்புக்கு சவால்விடும் பாத்திரங்களாகும்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிமேகலை_இராமநாதன்&oldid=3281957" இலிருந்து மீள்விக்கப்பட்டது