ஐரியக் குடியரசுப் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரியக் குடியரசு இராணுவம்
Provisional Irish Republican Army
(Óglaigh na hÉireann)

இயங்கிய காலம் 1969 - இற்றைவரை
தலைவர்கள் ஐ.ஆர்.ஏ. இராணுவ கவுன்சில்
Strength ~10,000 (30 ஆண்டுகளில்), ~1,000 (2002இல்)[1]
Originated as ஐரியக் குடியரசு இராணுவம் (1922–1969)
எதிராளிகள் ஐக்கிய இராச்சியம்

தற்காலிக ஐரியக் குடியரசு இராணுவம் (Provisional Irish Republican Army, அல்லது ஐ.ஆர்.ஏ., IRA[2]) என்பது ஓர் இடதுசாரி[3] இராணுவ இயக்கம் ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வட அயர்லாந்தை இராணுவ வழிமுறைகளில் பிரித்து தனிநாடாக்கப் போராடிய ஓர் ஐரிய இராணுவக் குழுவாகும். இவ்வியக்கம் வட அயர்லாந்தையும் அயர்லாந்து குடியரசையும் விடுவித்து முழு அயர்லாந்து தீவையும் ஒரு நாடாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்டு 1969ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்து குடியரசிலும் ஒரு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டன[4][5].

ஜூலை 28, 2005 இல் ஐஆர்ஏ இராணுவக் கவுன்சில் தனது இராணுவ நடவடிக்கைகளை முற்றிலும் நிறுத்துவதாகவும் தனது தனிநாட்டுக் கோரிக்கைகளை அரசியல், சனநாயக வழிமுறைகளில் போராடிப் பெறப்போவதாகவும் அறிவித்தது[6].

2007 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் உள்ளக இராணுவ அறிக்கை ஒன்றின்படி பிரித்தானிய இராணுவத்தினரால் ஐ.ஆர்.ஏ இயக்கத்தை இராணுவ வழிமுறைகளில் அடக்கி வெல்ல முடியாமல் போனதென்றும், அதே நேரத்தில் வன்முறைகள் மூலம் ஐ.ஆர்.ஏ தனது நோக்கங்களை நிறைவேற்ற முடியாமல் போனதென்றும் குறிப்பிட்டுள்ளது[7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]