ஜார்ஜ் பிலிப்சு பாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்ஜ் பிலிப்சு பாண்டு
பிறப்பு 1825|5|20
இறப்பு 1865|2|17|1825|5|20
தேசியம் ஐக்கிய அமெரிக்கா
துறை வானியல்
அறியப்படுவது வானொளிப்படவியல்

ஜார்ஜ் பிலிப்சு பாண்டு (George Phillips Bond) (மே 20, 1825-பிப்ரவரி 17, 1865) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வில்லியம் கிரேன்ச் பாண்டின் மகனாவார். சில தகவல் வாயில்கள் இவர் 1826 இல் பிறந்ததாக்க் கூறுகின்றன.

இவர் முதலில் இயற்கையிலும் பறவைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் இவரது அண்ணன் வில்லியம் கிரேன்ச் பாண்டு (இளவல்) இறந்ததும் தந்தையைப் பின்பற்றி வானியலில் இட்டுபடவேண்டி நேர்ந்துள்ளது. இவர் தன் தந்தைக்குப் பின்னர் ஆர்வார்டு வான்கானகத்தின் இயக்குநரானார். இப்பதவியில் இவர் 1859 முதல் தன் இறப்பு வரை நீடித்தார். இவரது ஒன்றுவிட்ட உடன்பிறப்பாளர் எட்வார்டு சிங்கிள்டன் ஓல்டன் இலிக் வான்காணக முதல் இயக்குநராக விளங்கினார்.

இவர் என்புருக்கி நோயால் இறந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]