1673
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1673 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1673 MDCLXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1704 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2426 |
அர்மீனிய நாட்காட்டி | 1122 ԹՎ ՌՃԻԲ |
சீன நாட்காட்டி | 4369-4370 |
எபிரேய நாட்காட்டி | 5432-5433 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1728-1729 1595-1596 4774-4775 |
இரானிய நாட்காட்டி | 1051-1052 |
இசுலாமிய நாட்காட்டி | 1083 – 1084 |
சப்பானிய நாட்காட்டி | Kanbun 12Enpō 1 (延宝元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1923 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4006 |
1673 (MDCLXXII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 29 - இங்கிலாந்தில் இங்கிலாந்து திருச்சபையின் திருவருட்சாதனங்களை ஏற்காத கத்தோலிக்கர்களும் ஏனையோரும் வாக்களிக்கவோ, அரசப் பணி, மற்றும் பல்கலைக்க்ழகங்களில் சேரவோ தடை விதிக்கப்பட்டது.[1]
- சூலை 6 - பிரெஞ்சுப் படைகள் மாஸ்ட்ரிக்ட் நகரைக் கைப்பற்றின.
- சூலை 11 - நெதர்லாந்தும் டென்மார்க்கும் பாதுகாப்பு உடன்பாட்டை ஏற்படுத்தின.
- ஆகத்து 8 - 23 கப்பல்களைக் கொண்ட டச்சு கடற்படை அணி நியூயோர்க்கைச் சுற்றி வளைத்து சரணடைய வற்புறுத்தியது.
- ஆகத்து 9 - டச்சுப் படையினர் நியூயோர்க் நகரை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றினர். (1674 இல் ஆங்கிலேயர் இதனை மீளக் கைப்பற்றினர்.
- நவம்பர் 11 - போலந்து, லித்துவேனிய இராணுவத்தினர் துருக்கிய இராணுவத்தை கோட்டின் நகரில் தோற்கடித்தனர். இப்போரில் ஏவுகணைகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டன.
- நவம்பர் 13 - டச்சுப் படையினர் பான் நகரைக் கைப்பற்றினர்.
- நவம்பர் 14 - கிறிஸ்டோபர் ரென் நைட் பட்டம் பெற்றார்.
- பிரான்சு இலங்கையைக் கைப்பற்றும் நோக்குடன் போரை ஆரம்பித்தது.
- இயேசு சபையைச் சேர்ந்த ஜான் டி பிரிட்டோ மதப்போதனைக்காக தென்னிந்தியாவின் மதுரை நகருக்கு வந்தார்.
பிறப்புகள்
[தொகு]- இரண்டாம் நரசராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1714)
இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 17 - மொலியர், பிரெஞ்சு எழுத்தாளர், நடிகர் (பி. 1622)
- தொட்ட தேவராச உடையார், மைசூர் மன்னர்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. p. 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.