1671
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1671 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1671 MDCLXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1702 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2424 |
அர்மீனிய நாட்காட்டி | 1120 ԹՎ ՌՃԻ |
சீன நாட்காட்டி | 4367-4368 |
எபிரேய நாட்காட்டி | 5430-5431 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1726-1727 1593-1594 4772-4773 |
இரானிய நாட்காட்டி | 1049-1050 |
இசுலாமிய நாட்காட்டி | 1081 – 1082 |
சப்பானிய நாட்காட்டி | Kanbun 10 (寛文10年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1921 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4004 |
1671 (MDCLXXI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 28 - பனாமா நகரம் தீயிட்டு அழிக்கப்பட்டது.
- ஏப்ரல் - சரைகட் சண்டை: அகோம் தளபதி லாக்கிட் போர்ப்புக்கான் முகலாயப் படைகளை இன்றைய குவகாத்தி அருகில் தோற்கடித்தான்.
- ஏப்ரல் 2 - அமெரிக்காக்களின் முதலாவது கத்தோலிக்கப் புனிதராக லீமா நகர ரோஸ் பத்தாம் கிளமெண்ட் திருத்தந்தையினால் ரோம் நகரில் பட்டமளிக்கப்பட்டார்.
- மே 9 - தோமசு பிளட் எனும் மதகுரு இலண்டன் கோபுரத்தில் இருந்த அரச நகைகளைக் கொளையடிக்க முற்பட்டுப் பிடிபட்டார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் மன்னிக்கப்பட்டு இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னனினால் நாடு கடத்தப்பட்டார்.
- சூன் 22 - உதுமானியப் பேரரசு போலந்து மீது போரை அறிவித்தது.
- டிசம்பர் - அமெரிக்காவின் முதலாவது "ஏழாம் நாள் பாப்திசத்" தேவாலயம் றோட் தீவு நியூபோர்ட் நகரில் அமைக்கப்பட்டது.
- டிசம்பர் 30 - கட்டிடக்கலைக்கான உலகின் முதலாவது பாடசாலை பிரான்சின் பதினான்காம் லூயி மன்னரால் பாரிசு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
- ஐதரசன் கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- சூன் 25 - ஜியோவானி ரிக்கியொலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1598)
- இராகவேந்திர சுவாமிகள், இந்து ஆன்மிகவாதி (பி. 1595)