பிரான்சின் பதினான்காம் லூயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பதினான்காம் லூயி
பிரான்சினதும் நெவாரினதும் அரசன் (more...)
பதினான்காம் லூயி (1638–1715), ஹையாசிந்த் ரிகாட் வரைந்தது. (1701)
பதினான்காம் லூயி (1638–1715), ஹையாசிந்த் ரிகாட் வரைந்தது. (1701)
ஆட்சிக்காலம் மே 14, 1643 – செப்டெம்பர் 1, 1715
முடிசூட்டு ஜூன் 7, 1654
முன்னவர் லூயி XIII
பின்னவர் லூயி XV
Consort ஸ்பெயினின் மரியா தெரேசா
பிள்ளைகள்
பிரான்சின் லூயி
பிரான்சின் மாரி-தெரேஸ்
பிலிப்பே-சார்லஸ் டி பிரான்ஸ்
முழுப்பெயர்
லூயி-டியூடோன் போர்பன்
விருதுப் பெயர்
மாட்சிமை தாங்கிய அரசர்
HRH The Dauphin of Viennois
அரச இல்லம் போர்பொன் இல்லம்
தந்தை லூயி XIII
தாய் ஆஸ்திரியாவின் ஆன்
பிறப்பு செப்டம்பர் 5, 1638(1638-09-05)
செயிண்ட்-ஜெர்மைன்-என் லாயே அரண்மனை, செயிண்ட்-ஜெர்மைன்-என் லாயே, பிரான்ஸ்
இறப்பு 1 செப்டம்பர் 1715(1715-09-01) (அகவை 76)
வெர்சாய் அரண்மனை, வெர்சாய், பிரான்ஸ்
அடக்கம் செயிண்ட் டெனிஸ் பசிலிக்கா, செயிண்ட்-டெனிஸ், பிரான்ஸ்

பதினான்காம் லூயி (5 செப்டெம்பர் 1638 – 1 செப்டெம்பர் 1715) பிரான்சினதும், நெவாரினதும் அரசனாக இருந்தார். ஐந்து வயதாவதற்குச் சில மாதங்களே இருந்தபோது லூயி அரியணை ஏறினார். எனினும், 1661 ஆம் ஆண்டில் இவரது முதலமைச்சரான இத்தாலியர், ஜூல் கார்டினல் மசாரின் இறந்த பின்னரே அரசின் கட்டுப்பாடு இவரது கைக்கு வந்தது. 1715 ஆம் ஆண்டு தனது 77 ஆவது பிறந்த நாளுக்குச் சில தினங்களே இருந்தபோது இவர் காலமானார். அதுவரை 72 ஆண்டுகளும், மூன்று மாதங்களும், பதினெட்டு நாட்களும் ஆட்சி புரிந்தார். ஐரோப்பாவில் மிக நீண்டகாலம் ஆட்சிபுரிந்த மன்னர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

பிரான்ஸ்-டச்சுப் போரின் தொடக்கத்தில் கிடைத்த வெற்றி, நிஜ்மேகென் ஒப்பந்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து, எல்லா அரச ஆவணங்களும் அரசரின் பெயரை மகா லூயி (Louis the Great) என்று குறிப்பிட வேண்டும் என பாரிஸ் நாடாளுமன்றம் ஆணை பிறப்பித்தது.