ஜியோவானி ரிக்கியொலி
Appearance
ஜியோவானி பாத்திஸ்டா ரிக்கியொலி | |
---|---|
பிறப்பு | ஃபெர்ராரா (தற்போதைய இத்தாலி) | 17 ஏப்ரல் 1598
இறப்பு | 25 சூன் 1671 பொலோக்னா (தற்போதைய இத்தாலி) | (அகவை 73)
தேசியம் | இத்தாலியர் |
துறை | வானியல் |
ஜியோவானி ரிக்கியொலி அல்லது ஜியோவானி பாத்திஸ்டா ரிக்கியொலி (Giovanni Battista Riccioli[1]:17 ஏப்ரல் 1598 – 25 ஜூன் 1671); ஓர் இத்தாலிய வானவியலாளரும் கத்தோலிக்க பாதிரியாரும் ஆவார். சந்திரனின் தன்மைகளைப் பற்றிய ஆய்வு செய்தவர். சந்திரனில் காணப்படும் மலை மற்றும் பல பகுதிகளுக்கும் பெயர் சூட்டியவர்.[2] தனிஊசல் மற்றும் கீழே விழும் பொருள்களின் தூரம் அதற்கான நேரத்தின் வர்க்கத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும் என்பதை பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டிஎன்பவருடன் இணைந்து கண்டறிந்தார்.[3][4]