மொலியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மொலியர்

மொலியரின் உருவப்படம் நிக்கோலாஸ் மிக்னார்டால் வரையப்பட்டது.
பிறப்பு ஜான்-பப்டிஸ்ட் போகுவெலின்
சனவரி 15, 1622(1622-01-15)
பாரிஸ், பிரான்ஸ்
இறப்பு பெப்ரவரி 17, 1673(1673-02-17) (அகவை 51)
பாரிஸ், பிரான்ஸ்
புனைப்பெயர் Molière
தொழில் நாடகாசிரியர்
நாடு பிரான்சியர்
எழுதிய காலம் 1645-1673
இலக்கிய வகை நகைச்சுவை
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
தார்த்தூஃபே; மிசாந்திரோப்; படித்த பெண்; மனைவிகளுக்கான பள்ளி
துணைவர்(கள்) ஆர்மண்டே பேஜார்ட்
துணைவர்(கள்) மடெலீன் பேஜார்ட்

மொலியர் என்பது, பிரெஞ்சு நாடகாசிரியரும், நடிகருமான ஜான்-பப்டிஸ்ட் போகுவெலின் (Jean-Baptiste Poquelin) (ஜனவரி 15, 1622பெப்ரவரி 17, 1673) என்பவரின் மேடைப் பெயராகும். மேற்கத்திய இலக்கியத்தில் நகைச்சுவையில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மிசாந்திரோப் (Le Misanthrope), மனைவிகளுக்கான பள்ளி (L'Ecole des femmes), தார்த்தூஃபே அல்லது பாசாங்குக்காரன் (Tartuffe ou l'Imposteur), பூர்ஷ்வா கனவான் (Le Bourgeois Gentilhomme) என்பவை இவர் எழுதிப் பெயர் பெற்ற நாடகங்களுள் சிலவாகும்.

வசதி படைத்த குடும்பமொன்றில் பிறந்து இயேசுசபையினரின் கிளெமண்ட் கல்லூரியில் படித்த மொலியர், அரங்கியலில் ஈடுபடுவதற்கு மிகப் பொருத்தமானவராக இருந்தார். 13 ஆண்டுகள் பல்வேறிடங்களுக்கும் சென்று நடிப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்ததனால் இவரது நகைச்சுவைத் திறன் கூர்மையடைந்தது. திருந்திய பிரெஞ்சு நகைச்சுவையுடன், சமயத்துக்கு ஏற்றவாறு பேசி நடிக்கும் நுட்பத்தையும் கலந்து தானே நாடகங்களை எழுதவும் தொடங்கினார்.

பாராட்டுகளும் எதிர்ப்புகளும்[தொகு]

14 ஆம் லூயி உட்பட்ட சில உயர்மட்டத்தினரின் ஆதரவினால், அரசரின் முன் லூவர் மாளிகையில் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அம்மாளிகையில் நாடகங்கள் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட பெரிய அறையொன்றைப் பயன்படுத்துவதற்கான அனுமதியும் இவருக்கு வழங்கப்பட்டது.

அரசவையிலும், பாரிஸ் நகர மக்கள் மத்தியிலும் இவருக்குப் பாராட்டுகள் கிடைத்தபோதும், ஒழுக்கவாதிகளும், திருச்சபையினரும் இவரது கேலிகளைக் கடுமையாகக் கண்டித்தனர். தார்த்துஃபே அல்லது பாசாங்குக்காரன் என்னும் நாடகம் மதப் பாசாங்குத்தனத்தைச் சாடியதனால் இது திருச்சபையினரிடம் இருந்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. டொன் யுவான் நாடகம் முற்றாகவே தடை செய்யப்பட்டது.

இறுதி நாட்கள்[தொகு]

நாடகத்துறையில் இவரது கடின உழைப்பு இவரது உடல் நலத்தைப் பாதித்தது. இதனால் 1667 அளவில் சிலகாலம் அரங்கிலிருந்து விலகி இருக்க வேண்டியதாயிற்று. 1673 ஆம் ஆண்டில் தனது இறுதி நாடகத்தை நடித்துக் கொண்டிருந்தபோது காச நோய் வாய்ப்பட்டிருந்த அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. நாடகத்தை நடத்தி முடித்துவிட்டார் ஆயினும், பின்னர் மயக்கமுற்ற அவர் சில மணி நேரங்களின் பின் காலமானார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொலியர்&oldid=2233379" இருந்து மீள்விக்கப்பட்டது