உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாய்சு ஆஃப் அமெரிக்கா
Typeபன்னாட்டு பொது ஒளிபரப்பு கூட்டுநிறுவனம்
Countryஅமெரிக்கா
Founded1942
Headquartersவாசிங்டன் டி.சி.
Ownerஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு
Official website
www.voanews.com

வாய்சு ஆஃப் அமெரிக்கா - ஐக்கிய அமெரிக்க கூட்டரசுக்கு சொந்தமான ஒரு பன்னாட்டு ஒளிபரப்பு நிறுவனம்.

அமெரிக்காவின் ஒளிபரப்பு வாரிய ஆளுநர்கள் அமைப்பின் (BBG) கீழ் இயங்கி வரும் இந்நிறுவனம் [1] அமெரிக்காவுக்கு வெளியே 45 மொழிகளில் பல்வேறு வானொலி, தொலைக்காட்சி சேவைகளை வழங்கி வருகிறது.

வாய்சு ஆஃப் அமெரிக்கா உலகளவில் செய்தி, பிற நிகழ்ச்சிகளை கிழமைதோறும் 1500 மணி நேரம் ஒலி/ஒளிபரப்புவதை ஏறக்குறைய 123 மில்லியன் பார்வையாளர்கள் பார்க்கின்றனர்.

மொழிகள்[தொகு]

வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தற்போது 45 மொழிகளில் ஒலி/ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. (தொலைக்காட்சி அலைவரிசைகள் விண்மீன் சின்னத்துடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன):

சிறப்பு ஆங்கிலம்[தொகு]

வாய்சு ஆஃப் அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி. யில் உள்ள தலைமையகம்

ஆங்கிலம் சரியாக தெரியாதவர்களுக்கு உதவும் வகையில், குறைந்த வேகத்தில் வார்த்தைகளை நன்கு தெளிவாக உச்சரிக்கும் சிறப்பு ஆங்கில (Special English) நிகழ்ச்சிகள் 1959 அக்டோபர் 19-ம் தேதி முதல் ஒலிபரப்பத் தொடங்கியது.

இந்த முறையில் செய்திகள் வாசிக்கும்போது செய்தி வாசிப்பாளர்கள் வழக்கத்தைவிட குறைந்த வேகத்தில் செய்திகளை படிப்பதோடு கடுமையான சொற்களை தவிர்த்து 1500 அடிப்படை சொற்களை மட்டுமே பயன்படுத்துவர். [2]

ஆங்கிலம் பயில்வோருக்கு இந்நிகழ்ச்சி உதவிகரமாக இருக்கும். இந்தியாவில் டிசிட்டல் செட் டாப் பாக்சு மூலம் கேபிள் டி.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பவர்களுக்கு வாய்சு ஆஃப் அமெரிக்காவின் சிறப்பு ஆங்கில நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி பெட்டியின் மூலமும் கேட்க முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஒளிபரப்பு வாரிய ஆளுநர்கள் அமைப்பு". Archived from the original on 2016-06-14. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.
  2. சிறப்பு ஆங்கிலம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாய்ஸ்_ஆஃப்_அமெரிக்கா&oldid=3571211" இலிருந்து மீள்விக்கப்பட்டது