இராசேந்திர சோழன் (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஆர். இராசேந்திரசோழன் (17 பெப்ரவரி 1945 - 1 மார்ச் 2024) ஒரு தமிழ் எழுத்தாளராவார். "அஸ்வகோஷ்" என்ற புனைபெயரில் எழுதி வந்தவர். இலக்கியம், நாடகம், இதழியல், மார்க்சியம் எனப் பன்முகத் தளங்களில் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இராசேந்திரசோழன் தென்னாற்காடு மாவட்டத்தில் உளுந்தூர்ப்பேட்டையில் 1945 திசம்பர் 17 அன்று பிறந்தார்.[1][2] பெற்றோர் இருவரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.[2] பள்ளி ஆசிரியராக இருபத்து ஒரு ஆண்டுகள் பணியாற்றி விருப்பு ஓய்வு பெற்றார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள மயிலத்தில் வசித்து வந்தார். பாதல் சர்க்காரிடம் நாடகப்பயிற்சி பெற்று, தமிழ்நாடு முழுவதும் பல நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார்.[1] அஸ்வகோஷ் என்ற புனைப்பெயரில் பல நாடகங்களை எழுதினார். சிறுகதை, நாவல், நாடகம் போன்ற புனைவிலக்கியங்கள் மட்டுமின்றி, மார்க்சியம், திராவிடம், தமிழ்த்தேசியம், பின்நவீனத்துவம் போன்றவற்றில் முக்கியமான அரசியல் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.

மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் கலை செயற்பாடுகளில் ஈடுபடுத்திய இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார்.[1] தொடர்ந்து, கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளில் முரண்பட்டு அதிலிருந்து வெளியேறினார்.[1] 'உதயம்', 'பிரச்சனை', 'மண்மொழி' போன்ற இதழ்களையும் நடத்திவந்தார்.

இறப்பு[தொகு]

சிறிது காலமாக உடல்நலமின்றி இருந்த நிலையில், 2024 மார்ச் 1 அதிகாலையில் காலமானார்.[1] இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.[2]

படைப்புகள்[தொகு]

சிறுகதைகள்[தொகு]

(அகரவரிசையில்)

 1. அவரோட லோகம்
 2. அவுட்பாஸ்
 3. அன்பின் வழியது (தமிழினி இணைய இதழ்)
 4. இச்சை
 5. இசைவு (தமிழினி இணைய இதழ்)
 6. இழை
 7. உளைச்சல் (தமிழினி இணைய இதழ்)
 8. ஊற்றுக்கண்
 9. ஊனம்
 10. எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம் (1971) (ஆனந்த விகடன்)
 11. எதிர்பார்ப்புகள்
 12. கடன்
 13. கரசேவை
 14. கழுதையின் வாயில் (தமிழினி இணைய இதழ்)
 15. காசுக்காக அல்ல
 16. காணிக்கை (தமிழினி இணைய இதழ்)
 17. கிட்டுதல்
 18. கோணல் வடிவங்கள் (கசடதபற)
 19. கைக்கிளை
 20. சவாரி
 21. சுழல்காற்றும் சருகுகளும் (தமிழினி இணைய இதழ்)
 22. சூரப்பன் வேட்டை
 23. சூழல்
 24. சென்னையில் பார்க்க வேன்டிய இடங்கள்
 25. டெய்லர் கந்தசாமி
 26. தனபாக்கியத்தோட ரவ நேரம் (தமிழினி இணைய இதழ்)
 27. தற்செயல்
 28. நாய்வேஷம் (தமிழினி இணைய இதழ்)
 29. நான் பண்ணாத சப்ளை
 30. நிலச்சரிவு
 31. நீதி
 32. பக்தி மார்க்கம்
 33. பகை (தமிழினி இணைய இதழ்)
 34. பரிணாமச் சுவடுகள்
 35. பறிமுதல் (செம்மலர்)
 36. பாசிகள்
 37. பிரார்த்தனைகளும் பிரசாதங்களும்
 38. புற்றில் உறையும் பாம்புகள் (கசடதபற)
 39. பெண் என்று சொல்லிடிலோ! (தமிழினி இணைய இதழ்)
 40. பொழுது
 41. பேதைமை
 42. மகாலட்சுமி (தமிழினி இணைய இதழ்)
 43. மடை
 44. மதராஸும் மன்னார்சாமியும்
 45. முனைப்பு
 46. மையம்
 47. வரம்பு
 48. வன்மம் (தமிழினி இணைய இதழ்)
 49. வானம் வெளிவாங்கி (1972)
 50. விசுவாசம்
 51. வினை

குறுநாவல்கள்[தொகு]

 1. சிறகுகள் முளைத்து; (1988); 2018; தமிழினி, சென்னை
 2. பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம் (1997)
 3. 21ஆவது அம்சம்

நாடகங்கள்[தொகு]

 1. அஸ்வகோஷ் நாடகங்கள்
 2. தெனாலிராமன் நகைச்சுவை நாடகங்கள்
 3. நாளை வரும் வெள்ளம்
 4. மரியாதைராமன் மதிநுட்ப நாடகங்கள்
 5. மீண்டும் வருகை
 6. வட்டங்கள்
 7. விசாரணை

நாவல்[தொகு]

 1. காவலர் இல்லம், 2019, தமிழினி
 2. பதியம், 2023, பக்.224, தமிழினி

சிறுகதைத்தொகுதிகள்[தொகு]

 1. எட்டு கதைகள், க்ரியா பதிப்பகம்
 2. சீட்டாட்டக் கலைஞன்,2022, தமிழினி
 3. தற்செயல் (1994)
 4. பறிமுதல் (1979)
 5. இராசேந்திரசோழன் கதைகள் (இருதொகுதிகள்), 2022, தமிழினி
 6. இராசேந்திரசோழன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்; 2020; டிஸ்கவரி புக்பேலஸ்
 7. முத்துக்கள் பத்து இராசேந்திர சோழன், 2023, பக்.140, அம்ருதா

குருநாவல் தொகுதிகள்[தொகு]

 1. இராசேந்திரசோழன் குறுநாவல்கள் (தொகுப்பு)
 2. மகாலட்சுமி, 2021, பக்.191, தமிழினி


கட்டுரைத்தொகுதிகள்[தொகு]

 1. அணு ஆற்றலும் மானுட வாழ்க்கையும், இரண்டாம் பதிப்பு 2012, பக்.200; மங்கை பதிப்பகம்
 2. அணுசக்தி மர்மம்: தெரிந்ததும் தெரியாததும்
 3. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு - சில சிந்தனைகள்
 4. அரங்க ஆட்டம் (இருதொகுதிகள்)
 5. இந்தியம் திராவிடம் தமிழ்த் தேசியம்
 6. கருத்தியல் மதம் சாதி பெண்
 7. சாதியம் தீண்டாமை தமிழர் ஒற்றுமை, 2011, பக்.400, மங்கை பதிப்பகம்
 8. சொர்க்கம் எங்கே இருக்கிறது? (2006)
 9. தமிழ்த் தேசமும் தன்னுரிமையும்
 10. தமிழ்த் தேசியம் என்றால் என்ன?
 11. தமிழகம் தேசம் மொழி சாதி
 12. தலித்தியம் - நோக்கும் போக்கும்
 13. திராவிடம் மார்க்சியம் தமிழ்த் தேசியம்
 14. தீண்டாமை ஒழிப்பும் தமிழர் ஒற்றுமையும்
 15. நாம் ஏன் தமிழ் வழியில் பயில வேண்டும்?, 2013, பக்.32, மங்கை பதிப்பகம்
 16. பகுத்தறிவின் மூடநம்பிக்கை, தமிழினி
 17. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் தேவைதானா?
 18. பின்நவீனத்துவம் பித்தும் தெளிவும் (கட்டுரைத் தொகுப்பு)
 19. பெண்கள் சமூகம் மதிப்பீடுகள்
 20. பொதுவுடைமையும் தமிழர்களும்
 21. மண், மொழி,மனிதம்,நீதி, 2003, பக்.256, மங்கை பதிப்பகம்
 22. மார்க்சிய மெய்யியல்:கடவுள் என்பது என்ன?(1995)
 23. மிதிபடும் மானுடம் மீட்பின் மனவலி,2006, பக்.320, மங்கை பதிப்பகம்
 24. மொழிக்கொள்கை

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]