மோ யான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
莫言
மோ யான்
2008இல் மோ யான்
2008இல் மோ யான்
பிறப்புகுயான் மோயெ (管谟业)
பெப்ரவரி 17, 1955 (1955-02-17) (அகவை 68)
குயோமி, சான்டோங் மாநிலம், சீனா
புனைபெயர்மோ யான்
தொழில்புதின எழுத்தாளர், ஆசிரியர்
மொழிசீனம்
தேசியம்சீனர்
காலம்1981 – இன்றுவரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்சிவப்புச் சோளம், திராட்சைமது குடியரசு, வாழ்வும் சாவும் என்னை அயர்ச்சியடைய வைக்கின்றன
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2012

குயான் மோயெ (Guan Moye, எளிய சீனம்: 管谟业மரபுவழிச் சீனம்: 管謨業பின்யின்: Guǎn Móyè), பரவலாக தமது புனைபெயர் மோ யான் (Mo Yan, சீனம்: 莫言பின்யின்: Mò Yán) (பிறப்பு பெப்ரவரி 17, 1955), ஒரு சீன எழுத்தாளர் ஆவார். அனைத்து சீன எழுத்தாளர்களிலும் "மிகவும் புகழ்பெற்ற, பலமுறை தடை செய்யப்பட்ட மற்றும் பதிப்புரிமை உரிமைகள் திருடப்பட்டவராக" அறியப்படுகிறார்.[1] இவரது இரு படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சிவப்புச் சோளம் (Red Sorghum) என்ற திரைப்படத்தின் மூலம் மேற்கத்திய உலகுக்கு அறிமுகமானார். இவருக்கு 2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.[2][3]

நோபல் பரிசு[தொகு]

2012 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவிலிருந்து இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவர்.[4]

சான்றுகோள்கள்[தொகு]

  1. Morrison, Donald (2005-02-14), "Holding Up Half The Sky", TIME, archived from the original on 2013-06-27, retrieved 2012-10-11.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-02-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130215044526/http://www.dn.se/kultur-noje/nobelpristagaren-i-litteratur-presenteras. 
  3. "The Nobel Prize in Literature 2012 Mo Yan". Nobel Media AD. 2012-10-11. http://www.nobelprize.org/nobel_prizes/literature/laureates/2012/. பார்த்த நாள்: 2012-10-11. 
  4. "Hallucinatory Realism of Mo Yan, the First Official Chinese Winner of the Nobel Prize for Literature - The Daily Beast". http://www.thedailybeast.com/articles/2012/10/11/hallucinatory-realism-of-mo-yan-the-first-official-chinese-winner-of-the-nobel-prize-for-literature.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மோ யான்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோ_யான்&oldid=3569090" இருந்து மீள்விக்கப்பட்டது