கசுவோ இசுகுரோ
கசுவோ இசிகுரோ Kazuo Ishiguro | |
---|---|
பிறப்பு | 8 நவம்பர் 1954 நாகசாகி, யப்பான் |
தொழில் |
|
கல்வி |
|
காலம் | 1981–இன்று |
வகை |
|
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
துணைவர் | லோர்னா மெக்டூகல் (தி. 1986) |
பிள்ளைகள் | 1 |
கசுவோ இசிகுரோ (Kazuo Ishiguro, பிறப்பு: 8 நவம்பர் 1954) பிரித்தானியப் புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார். இவர் சப்பான், நாகசாகியில் பிறந்தவர். இவருக்கு ஐந்து அகவை ஆனபோது 1960 இல் இவரது குடும்பம் இங்கிலாந்தில் குடிபெயர்ந்தது. 2017 ஆம் ஆண்டுக்குரிய இலக்கியத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[1]
வாழ்க்கைக் குறிப்புகள்
[தொகு]1978 இல் கென்ட் பல்கலைக் கழகத்தில் படித்து ஆங்கில இலக்கியத்திலும் தத்துவத்திலும் பட்டம் பெற்றார். 1980 இல் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக் கழகத்தில் படைப்பு எழுத்தில் முதுவர் பட்டம் பெற்றார். 1982 இல் பிரித்தானியக் குடிமகன் ஆனார்.[2]
பெற்ற மதிப்புகள்
[தொகு]மேன் புக்கர் பரிசு நான்கு முறை பெற்றார். 1982 இல் வினிபிரெட் ஓல்ட்பி நினைவுப் பரிசும், 1986 இல் விட்பிரெட் பரிசும், 1998 இல் செவாலியர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டன. 1989 இல் தி ரிமெய்ன்ஸ் ஆப் தி டே என்னும் புதினத்திற்கு புக்கர் பரிசு கிடைத்தது. டைம் இதழ் 2005 ஆம் ஆண்டில் நெவர் லேட் மீ கோ என்ற இவரது புதினத்தைச் சிறந்த புத்தகம் எனப் பாராட்டியது. 2008 ஆம் ஆண்டில் டைம் இதழ் இவரை 50 சிறந்த பிரித்தானிய எழுத்தாளர்களில் ஒருவராக மதிப்பீடு செய்தது.
மேற்கோள்
[தொகு]- ↑ https://www.theguardian.com/books/live/2017/oct/05/the-2017-nobel-prize-in-literature-live
- ↑ "Author's bio". Granta. No. 43. 1993. p. 91.