நகிப் மஹ்ஃபூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நகிப் மஹ்ஃபூஸ்
பிறப்பு நகிப் மஹ்ஃபூஸ்

نجيب محفوظ
திசம்பர் 11, 1911(1911-12-11)
கெய்ரோ, எகிப்து

இறப்பு ஆகத்து 30, 2006(2006-08-30) (அகவை 94)
கெய்ரோ, எகிப்து
தொழில் புதின எழுத்தாளர்
நாடு எகிப்து
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
The Cairo Trilogy
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
இலக்கியத்துக்கான நோபல் பரிசு (1988)

நகிப் மஹ்ஃபூஸ் (அரபி: نجيب محفوظ‎, Nagīb Maḥfūẓ) (டிசம்பர் 11, 1911 – ஆகஸ்ட் 30, 2006), 1988 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஒரு எகிப்தியப் புதின எழுத்தாளர் ஆவார். தவ்பீக் எல் ஹக்கீம் என்பவருடன் சேர்த்து, இருப்பியலிய விடயங்கள் தொடர்பாக முதலில் எழுதிய தற்கால அரபு மொழி இலக்கிய எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர்.

வரலாறு[தொகு]

கெய்ரோவின் எல் கமாலேயா பகுதியில் கீழ் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பம் ஒன்றில் இவர் பிறந்தார். இவர் பிறப்பின் போது மருத்துவம் செய்த மருத்துவரான பேராசிரியர் நகிப் பாஷா மஹ்ஃபூஸ் (1882-1974)என்பவரின் பெயரைத் தழுவியே இவருக்குப் பெயரிடப்பட்டது. ஐந்து ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளுமாக ஏழு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஏழாவதாகப் பிறந்தவர் இவர். தொடக்கத்தில் எல் கமாலேயாப் பகுதியிலும் பின்னர், 1924 ஆம் ஆண்டிலிருந்து, அக்காலத்தில் கெய்ரோவின் புதிய புறநகர்ப் பகுதியான எல் அபாசேயாவிலும் வாழ்ந்தனர். இவ்விரு பகுதிகளுமே மஹ்ஃபூசின் எழுத்துக்களுக்கான பின்புலங்களாக அமைந்தன. இவரது தந்தை ஒரு பழமை விரும்பியான ஒரு குடிசார் அலுவலர். மஹ்ஃபூசும் பின்னர் அவரது தந்தையையே பின்பற்றினார். சிறுவனாக இருந்தபோதே மஹ்ஃபூஸ் நிறைய வாசிக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார். இவரது தாயார் இவரை அருங்காட்சியகங்களுக்கு அழைத்துச் செல்வார். இதனால், எகிப்திய வரலாறு மஹ்ஃபூசின் பிற்கால எழுத்தில் முக்கிய விடயமாக விளங்கியது.

மஹ்ஃபூசின் குடும்பம் முஸ்லிம் மதத்தை ஒழுங்காகக் கடைப்பிடிப்பவர்கள். இதனால் மஹ்ஃபூஸ் இறுக்கமான இஸ்லாமியப் பின்னணியிலேயே வளர்ந்தார். பிற்காலப் பேட்டியொன்றில் தனது குடும்பத்தின் மதச் சூழல் பற்றிக் குறிப்பிட்ட அவர், அக்குடும்பத்திலிருந்து ஒரு கலைஞன் உருவாவதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது எனக் குறிப்பிட்டார். அக் காலத்தில் மஹ்ஃபூசுக்கு ஏழு வயதே இருந்தபோதும், 1919 ஆம் ஆண்டின் எகிப்தியப் புரட்சி அவர் மீது கடுமையான தாக்கத்தை விளைவித்தது. ஆண்களும் பெண்களுமான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரித்தானியப் படைவீரர் துப்பாக்கிச் சூடு நடத்துவதை இவர் சாளரங்களூடாகக் கவனித்துள்ளார். பின்னொரு காலத்தில் குறிப்பிடும்போது, சிறுவயதில் தனது பாதுகாப்புக் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது 1919ன் புரட்சியே எனக் குறிப்பிட்டார்.

தாக்கங்கள்[தொகு]

மார்செல் புரூஸ்ட், பிராண்ஸ் காப்கா, ஜேம்ஸ் ஜோய்ஸ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகிப்_மஹ்ஃபூஸ்&oldid=2212093" இருந்து மீள்விக்கப்பட்டது