அல்பேர்ட் காம்யு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அல்பேர்ட் காம்யு

அல்பேர்ட் காம்யு (Albert Camus) (நவம்பர் 7, 1913 - ஜனவரி 4, 1960) நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர். 1957இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1960 இல் கார் விபத்தில் காலமானார். நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் எழுதிய காம்யுவின் L'Étranger (The Stranger) நாவல் தமிழில் "அந்நியன்" என்ற பெயரில் வெ. ஸ்ரீராமால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வரலாறு‍[தொகு]

அல்பேர்ட் காம்யு 1913-ம் ஆண்டு, நவம்பர் 7 ஆம் தேதி அல்ஜீரியாவின் மோன்தோவி என்ற ஊரில் தன் பெற்றோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை வைன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஊழியர். 1914 ஆம் ஆண்டு, முதல் உலகப்போரில் ஈடுபடுத்தப்பட்டு வடக்கு பிரான்ஸில் தன்னுடைய 29 ஆவது வயதில் இறந்தார். ஐந்து முதல் பத்து வயது வரை நகராட்சி தொடக்கப் பள்ளியில் இலவசக் கல்வி. இவருடைய ஆசிரியர் லூயி ழெர்மென் முதல் உலகப் போரில் ராணுவ சேவை செய்தவர். சிறுவன் காம்யுவின் அறிவாற்றலையும் நற்பண்புகளையும் இனம் கண்டுகொண்டு, ஊக்கமும் உதவியும் அளித்து அவனை முன்னேறச் செய்ததில் இவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. நோபல் பரிசு கிடைத்தவுடனேயே, தனக்கு அளிக்கப்பட்ட கௌரவத்துக்காகத் தன்னுடைய தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து, ஆல்பெர் காம்யு எழுதிய கடிதம் இன்று வரலாற்றுப் புகழ் பெற்றுது.[1]

படைப்புக்கள்[தொகு]

 • ‘அந்நியன்’ (நாவல்) 1942
 • ‘கிளர்ச்சியாளன்’ 1951
 • ‘காலிகுலா’
 • ‘விபரீத விளையாட்டு (நாடகம்)
 • ‘சிசிஃபின் புராணம்’ (தத்துவக் கட்டுரை)
 • ‘கொள்ளை நோய்’(நாவல்)
 • ‘முற்றுகை’
 • ‘நியாயவாதிகள்’ (நாடகம்),
 • நேசம்[1]

நோபல் பரிசு‍[தொகு]

1957 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு காம்யுவுக்குக் கிடைத்தது.

இறப்பு[தொகு]

1960 ஜனவரி 4 ஆம் தேதி சாலை விபத்தில் இறந்தார்.

காமசின் கூற்றுக்கள்[தொகு]

 • "நான் எதிர்க்கிறேன், அதனால் இருக்கிறேன்."
 • "எனக்கு முன்னால் நடக்காதே, நான் உன்னை பின்பற்றாமல் இருந்து விடுவேன். எனக்குப் பின்னால் நடக்காதே, நான் வழிகாட்டாமல் இருந்து விடுவேன். என்னோடு அருகே நட, என் நண்பனாய் இரு."
 • "மாவீரர்கள், எனது நண்பா, மறக்கப்படுவது, பயன்படுத்தப்படுவது, நக்கலடிக்கப்படுவது, இதில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டு. புரிந்துகொள்ளப்படுவது ..ஒருபோதும் இல்லை."

ஆதாரங்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பேர்ட்_காம்யு&oldid=2714632" இருந்து மீள்விக்கப்பட்டது