தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டி. எஸ். எலியட்
T. S. Eliot

1934 இல் எலியட்
தொழில் கவிஞர், நாடகக் கலைஞர், நாடகத் திறனாய்வாளர்
நாட்டுரிமை பிரித்தானியர்
கல்வி மெய்யியல் (ஆர்வர்டு, 1909)
முனைவர் (ஆவர்டு, 1915–16)[1]
எழுதிய காலம் 1905–1965
இயக்கம் நவீனத்துவம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
"The Love Song of J. Alfred Prufrock" (1915), The Waste Land (1922), Four Quartets (1943), "Murder in the Cathedral" (1935)
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1948), Order of Merit (1948)
துணைவர்(கள்) விவியன்
(தி. 1915–1932) «start: (1915)–end+1: (1933)»"Marriage: விவியன்
to தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட்
"
Location:
(linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D)

வலரி
(தி. 1957–1965) «start: (1957)–end+1: (1966)»"Marriage: வலரி
to தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட்
"
Location:
(linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D)

கையொப்பம் TS Eliot Signature.svg

தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் (Thomas Stearns Eliot, 26 செப்டம்பர் 1888 - 4 சனவரி 1965) என்பவர் ஒரு பிரித்தானியக் கட்டுரையாளர், நூல் வெளியீட்டாளர், நாடக ஆசிரியர், இலக்கிய மற்றும் சமூக விமர்சகர், இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகவும் விளங்கியவர்.[2] 1914 ஆம் ஆண்டு தனது 25-வது வயதில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அங்கேயே தன்னுடைய பணி மற்றும் திருமணத்தை அமைத்துக்கொண்டார். மேலும் அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுத்து 1927 ஆம் ஆண்டு தனது 39 வது வயதில் பிரிட்டிஷ் குடிமகனானார்.[3]

எலியட் எழுதிய "தி லவ் சாங் ஆப் ஜெ. ஆல்பிரேட் ப்ருபிராக்" (1915) என்ற கவிதை அனைவரது கவனத்தையும் ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் நவினத்துவ இயக்கத்தின் தலைசிறந்த படைப்பாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து "தி வேஸ்ட் லேண்ட்" (1922), "தி ஹாலோ மென்" (1925), "சாம்பல் புதன்" (1930) மற்றும் "நான்கு குவார்டெட்ஸ்" (1943)[4] உள்ளிட்ட மிக பிரபலமான ஆங்கில கவிதைகள் வெளிவந்தன. இவருடைய ஏழு நாடகங்களில் குறிப்பாக "மர்டர் இன் தி கதீட்ரல்" (1935) மற்றும் "தி காக்டெய்ல் பார்ட்டி" (1949) போன்ற நாடகங்கள் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றன.தற்கால கவிதைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் முன்னோடியாக திகழ்ந்தமைக்காகவும் 1948 இல் இலக்கியத்தில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jewel Spears Brooker, Mastery and Escape: T.S. Eliot and the Dialectic of Modernism, University of Massachusetts Press, 1996, p. 172.
  2. Bush, Ronald. "T.S. Eliot's Life and Career." American National Biography. Ed. John A Garraty and Mark C. Carnes. New York: Oxford University Press, 1999.[1]
  3. Bloom, Harold (2003). T.S. Eliot. Bloom's Biocritiques. Broomall: Chelsea House Publishing. பக். 30. https://books.google.com/books?id=8Ut4QeGjUGYC&pg=PA30. 
  4. "Thomas Stearns Eliot", Encyclopædia Britannica, accessed 7 November 2009.
  5. "The Nobel Prize in Literature 1948". Nobelprize.org. Nobel Media. பார்த்த நாள் 26 April 2013.
  6. "The Nobel Prize in Literature 1948 – T.S. Eliot", Nobelprize.org, taken from Frenz, Horst (ed). Nobel Lectures, Literature 1901–1967. Amsterdam: Elsevier Publishing Company, 1969, accessed 6 March 2012.