கூன்டர் கிராசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூன்டர் கிராஸ்
Günter Grass

2006 இல் கூன்டர் கிராசு
பிறப்பு கூன்டர் கிராஸ்
அக்டோபர் 16, 1927(1927-10-16)
டான்சிக்-லாங்ஃபூர்,
இன்றைய கதான்ஸ்க், போலந்து
இறப்பு 13 ஏப்ரல் 2015(2015-04-13) (அகவை 87)
லூபெக், செருமனி
தொழில் புதின எழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர்
இனம் காசுபியன்[1][2]
நாட்டுரிமை டான்சிக்
செருமனி
எழுதிய காலம் 1956–2013
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
தி டின் டிரம்
பூனையும் எலியும்
நாய் ஆண்டுகள்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1999)
கையொப்பம் Günter Grass signature new.svg

கூன்டர் கிராசு (Günter Grass, 16 அக்டோபர் 1927 - 13 ஏப்ரல் 2015)[3] செருமானிய புதின, நாடக எழுத்தாளரும், கவிஞரும், சிற்பியும் ஆவார். இவருக்கு 1999 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4][5][6][7]

மேற்கு சிலாவிய இனக்குழுவைச் சேர்ந்த கசுபியான் இனத்தைச் சேர்ந்த கூன்டர் கிராசு[1][2][8] டான்சிக் நகரில் (இன்றைய கதான்ஸ்க், போலந்து) பிறந்தார். 1944 ஆம் ஆண்டில் தனது பதின்ம வயதிலேயே நாட்சி கட்சியின் இராணுவப் பிரிவான "வாஃபன் எஸ்.எஸ்" இல் தனது சுய விருப்பத்தின் பேரில் சேர்ந்து கொண்டதாக 2006 ஆம் ஆண்டில் இவர் அறிவித்தது அப்போது பெரும் சர்ர்ச்சையைக் கிளப்பியிருந்தது.[9] 1945 மே மாதத்தில் அமெரிக்கப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் 1946 ஏப்ரலில் விடுவிக்கப்பட்டார். சிற்பத் தொழிலில் பயிற்றுவிக்கப்பட்ட கூன்டர் கிராசு, 1950களில் எழுதத் தொடங்கினார்.

1959 ஆம் ஆண்டில் எழுதிய த டிம் டிரம் என்ற முதலாவது புதினம் இவருக்குப் புகழைத் தேடித் தந்தது. இப்புதினத்தில் இவர் நாட்சி இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.[9] இவரது படைப்புகள் பொதுவாக இடதுசாரி அரசியல் கொள்கைகளை சார்ந்திருந்தது. செருமனியின் சமூக சனநாயகக் கட்சியின் பெரும் ஆதரவாளராக இவர் இருந்தார். டிம் டிரம் புதினம் 1979 இல் அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு, சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படங்களுக்கான அகாதமி விருதைப் பெற்றது. 1999 இல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Günter Grass nie żyje. Noblista miał 87 lat". Gazeta Wyborcza. 13 ஏப்ரல் 2015. http://wyborcza.pl/1,75475,17744558,Gunter_Grass_nie_zyje__Noblista_mial_87_lat.html#ixzz3XDIG5oiR. பார்த்த நாள்: 13 ஏப்ரல் 2014. "Pytany o tożsamość narodową, mówił, że jest Kaszubą. (Asking about his ethnicity, he always said that he's Kashubian)" 
  2. 2.0 2.1 "Porträt: Der unbequeme Nationaldichter". Focus. 13 ஏப்ரல் 2015. http://www.focus.de/tagesthema/literatur-portraet-der-unbequeme-nationaldichter_id_4608522.html. பார்த்த நாள்: 13 ஏப்ரல் 2014. "Aber wenige haben auch soviel einstecken müssen wie der Kaschube aus Danzig. (But, just few people had to take flak like the mustachioed Kashubian from Gdansk)" 
  3. "Renowned German author Günter Grass dies, aged 87". DW.de. April 14, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. Kulish, Nicholas; Bronner, Ethan (8 ஏப்ரல் 2012). "Gunter Grass tries to hose down row over Israel". சிட்னி மோர்னிங் எரால்டு. Archived from the original on 2012-04-10. https://web.archive.org/web/20120410024422/http://www.smh.com.au/world/gunter-grass-tries-to-hose-down-row-over-israel-20120407-1wi8c.html. பார்த்த நாள்: 8 ஏப்ரல் 2012. 
  5. "Outrage in Germany". Der Spiegel. 4 ஏப்ரல் 2012. http://www.spiegel.de/international/germany/0,1518,825712,00.html. பார்த்த நாள்: 4 ஏப்ரல் 2012. 
  6. "Yishai: Günter Grass not welcome in Israel". The Jerusalem Post. 4 ஏப்ரல் 2012. http://www.jpost.com/DiplomacyAndPolitics/Article.aspx?id=265259. பார்த்த நாள்: 4 ஏப்ரல் 2012. 
  7. Harding, Luke; Sherwood, Harriet (8 ஏப்ரல் 2012). "Outcry as Gunter Grass poem strongly criticises Israel". தி இந்து (சென்னை). http://www.thehindu.com/news/international/article3291242.ece. பார்த்த நாள்: 8 ஏப்ரல் 2012. 
  8. "Polnische Ostseeküste, Danzig, Masuren". Klaus Klöppel, Olaf Matthei. https://books.google.de/books?id=VmV2M05xxiEC&pg=PA61&lpg=PA61&dq=%22g%C3%BCnter+grass%22+%22kaschube%22&source=bl&ots=Rlr7HNFlXk&sig=-MUoexknLdb1j4vq2EL3PCJ6yYA&hl=de&sa=X&ei=osovVYu0BoOsPYLEgeAC&ved=0CCMQ6AEwATgK#v=onepage&q=%22g%C3%BCnter%20grass%22%20%22kaschube%22&f=false. "Er bezeichnet sich selbst gerne als Kaschube" 
  9. 9.0 9.1 "ஜெர்மன் நாவலாசிரியர் குந்தர் கிராஸ் காலமானார்". பிபிசி தமிழோசை. 13 ஏப்ரல் 2015. 17 ஏப்ரல் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  10. "The Nobel Prize in Literature 1999". Nobelprize.org. 8 October 2009 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூன்டர்_கிராசு&oldid=3356334" இருந்து மீள்விக்கப்பட்டது