பேரி பேரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேரி பேரிசு
Barry Barish
05-0367-92D.hr.jpg
பிறப்புபேரி கிளார்க் பேரிஷ்
சனவரி 27, 1936 (1936-01-27) (அகவை 85)
ஒமாகா, நெப்ராஸ்கா, ஐக்கிய அமெரிக்கா
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
கல்விகலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) (இளங்கலை, முதுகலை, முனைவர்)
விருதுகள்குளோப்சுடெக் நினைவுப் பரிசு (2002)
என்றிக்கோ பெர்மி பரிசு (2016)
என்றி டிரேப்பர் பரிசு (2017)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2017)

பேரி கிளார்க் பேரிசு (Barry Clark Barish, பிறப்பு: சனவரி 27, 1936) என்பவர் அமெரிக்க செயல்முறை இயற்பியலாளரும், நோபல் விருதாளரும் ஆவார். ஈர்ப்பு அலைகளின் ஆய்வில் இவரது பங்களிப்பு பெரிதும் போற்றப்படுகிறது.

2017 இல் இவருக்கு இராய்னர் வெய்சு, கிப் தோர்ன் ஆகியோருடன் இணைந்து "லைகோ உணர்கருவி மற்றும் ஈர்ப்பு அலைகளில் மேற்கொண்ட தீர்மானிக்கத்தகுந்த பங்களிப்புகளுக்காக" இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1][2][3][4]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பேரிசு போலந்த்தில் இருந்து ஐக்கிய அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் நெப்ராஸ்கா மாநிலத்தில் பிறந்தார்.[5][6][7]

கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் 1957 இல் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1962 இல் முனைவர் பட்டம் பெற்றார். 1963 இல் கால்ட்டெக் தொழில்நுட்பக் கழகத்தில் துகள் இயற்பியல் துறையில் பணியாற்றினார். அங்கு அவர் துணைப் பேராசிரியராகவும், இயற்பியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Nobel Prize in Physics 2017". The Nobel Foundation (3-10-2017). பார்த்த நாள் 3-10-2017.
  2. Rincon, Paul; Amos, Jonathan (3-10-2017). "Einstein's waves win Nobel Prize". BBC News. http://www.bbc.co.uk/news/science-environment-41476648. பார்த்த நாள்: 3-10-2017. 
  3. Overbye, Dennis (3-10-2017). "2017 Nobel Prize in Physics Awarded to LIGO Black Hole Researchers". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2017/10/03/science/nobel-prize-physics.html. பார்த்த நாள்: 3-10-2017. 
  4. Kaiser, David (3-10-2017). "Learning from Gravitational Waves". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2017/10/03/opinion/gravitational-waves-ligo-funding.html. பார்த்த நாள்: 3-10-2017. 
  5. https://www.familysearch.org/ark:/61903/1:1:K999-5XC
  6. "Interview with Shirley K. Cohen" (PDF). பார்த்த நாள் 2017-10-03.
  7. "A Small-Town Jewish Family’s Rebuke of Car Maker Henry Ford". பார்த்த நாள் 3-10-2017.
  8. https://labcit.ligo.caltech.edu/~BCBAct/BCB_CV0316.pdf

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரி_பேரிசு&oldid=2425418" இருந்து மீள்விக்கப்பட்டது