வால்தெர் பொதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்தெர் பொதே
வால்தெர் பொதே
பிறப்பு(1891-01-08)8 சனவரி 1891
ஒரானியன்புர்க், ஜெர்மானியப் பேரரசு[1]
இறப்பு8 பெப்ரவரி 1957(1957-02-08) (அகவை 66)
ஹைடெல்பெர்க், மேற்கு ஜெர்மனி
தேசியம்ஜெர்மானியர்
துறைஇயற்பியல், கணிதவியல், வேதியல்
பணியிடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
கீஸ்ஸென் பல்கலைக்கழகம்
ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழகம்[1]
மேக்ஸ் பிளாங்க் மருத்துவ ஆய்வு நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்பெர்லின் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்மேக்ஸ் பிளாங்க்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஹேன்ஸ் ரிட்டர் வொன் பேயர்
அறியப்படுவதுநிகழ் பொருந்து மின்சுற்று (Coincidence circuit)
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1954) [1]
மேக்ஸ் பிளாங்க் பதக்கம் (1953)

வால்தெர் வில்லெம் கியார்கு பொதே (இடாய்ச்சு மொழி: Walther Wilhelm Georg Bothe; 8 ஜனவரி 1891 – 8 பிப்ரவரி 1957) என்ற வால்தெர் பொதே செருமானிய அணுக்கரு இயற்பியலாளர், கணிதம் மற்றும் வேதியலறிஞர். 1954ல் மாக்ஸ் போர்னுடன் நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டவர்.[2]

வாழ்க்கை[தொகு]

பிரெடெரிக் பொதேவுக்கும் சார்லோட் ஹார்டுங்கிற்கும் மகனாக வால்தெர் பொதே 1891ல் பிறந்தார். 1908லிருந்து 1912 வரை பிரெடெரிக்-வில்லெம்ஸ்-பல்கலைக்கழகத்தில் படித்தார். 1913ல் அவர் மேக்ஸ் பிளாங்க்கின் பயிற்று உதவியாளராக இருந்தார். ப்ளாங்க்கின் மேற்பார்வையில், 1914ல் அவர் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

1913ம் ஆண்டில், அவர் ஜெர்மானியப் பேரரசின் இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கதிரியக்க ஆய்வகத்தில் சேர்ந்தார். 1914ல் முதலாம் உலகப் போரின் போது ஜெர்மானிய இராணுவத்தில் பணியாற்றிய அவர் ரஷ்யர்களிடம் போர்க்கைதியாகச் சிக்கினார். பின்னர் 1920ம் ஆண்டு ஜெர்மனி திரும்பினார். மீண்டும் கதிரியக்க ஆய்வகத்தில் பணிக்குத்திரும்பிய அவர் பொருத்தன்முறைகளை (Coincidence methods) உருவாக்கி அவற்றை அணுக்கரு வினைகள், காம்டன் விளைவு, அண்டக் கதிர்கள், கதிர் இயக்கத்தின் அலை-துகள் இருமை முதலியனவற்றைப் பயிலப் பயன்படுத்தினார். பொருத்தன்முறைகளைக் கண்டுபிடித்தற்காக அவர் 1954ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார்.[4]

சிறந்த நாட்டுப்பற்றாளரான வால்தெர் பொதே ஒரு திறமிக்க ஓவியராகவும் பியானோ இசைக்கலைஞராகவும் திகழ்ந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 வால்தெர் பொதே, (ஆங்கில மொழியில்)
  2. வால்தெர் வில்லெம் கியார்க் பொதெ. அறிவியல் ஒளி மாத இதழ். ஜனவரி, 2013. பக். 39-41. 
  3. 3.0 3.1 பொதே, வால்தெர் (1954) வால்தெர் பொதே வாழ்க்கை (ஆங்கில மொழியில்)
  4. பொதே, வால்தெர் (1954) பொருத்தன்முறை (ஆங்கில மொழியில்), 1954ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றபோது ஆற்றிய உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்தெர்_பொதே&oldid=2713400" இலிருந்து மீள்விக்கப்பட்டது