உள்ளடக்கத்துக்குச் செல்

எர்வின் சுரோடிங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எர்வின் சுரோடிங்கர்
Erwin Schrödinger
எர்வின் ருடோல்ஃப் ஜோசெப் அலெக்சாண்டர் சுரோடிங்கர் (1887-1961)
பிறப்பு(1887-08-12)ஆகத்து 12, 1887
ஏர்ட்பர்க், வியன்னா, ஆஸ்திரியா-ஹங்கேரி
இறப்புசனவரி 4, 1961(1961-01-04) (அகவை 73)
வியன்னா, ஆஸ்திரியா
வாழிடம் ஆஸ்திரியா
 அயர்லாந்து
குடியுரிமைஅயர்லாந்து குடியரசு ஐரியர்
தேசியம்ஆஸ்திரியா ஆத்திரியர்
துறைஇயற்பியலாளர்
பணியிடங்கள்ரொக்லா பல்கலைக் கழகம்
சூரிச் பல்கலைக் கழகம்
பெர்லின் பல்கலைக் கழகம்
ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம்
கிராஸ் பல்கலைக் கழகம்
உயர் கல்விக்கான டப்ளின் நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்வியன்னா பல்கலைக் கழகம்
ஆய்வு நெறியாளர்பிரீட்ரிக் ஹாசனோர்ல்
Other academic advisorsபிரான்ஸ் எஸ். எக்ஸ்னர்
பிரீட்ரிக் ஹாசனோர்ல்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்லினஸ் பாலிங்
Felix Bloch
அறியப்படுவதுசுரோடிங்கர் சமன்பாடு
சுரோடிங்கரின் பூனை
சுரோடிங்கர் முறை
Schrödinger functional
Schrödinger picture
சுரோடிங்கர்-நியூட்டன் சமன்பாடு
Schrödinger field
Rayleigh-Schrödinger perturbation
Schrödinger logics
Cat state
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (1933)
கையொப்பம்

எர்வின் ருடோல்ஃப் ஜோசெப் அலெக்சாண்டர் சுரோடிங்கர் (Erwin Schrödinger; ஆகஸ்ட் 12, 1887 - ஜனவரி 4, 1961) ஒரு ஆஸ்திரிய-ஐரிய இயற்பியலாளர் ஆவார். குவாண்டம் பொறிமுறைக்கு ஆற்றிய பங்களிப்பினால் இவருக்குப் பெரும் புகழ் கிடைத்தது. இப்பங்களிப்புக்காக 1933 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டில், இவரது தனிப்பட்ட நண்பரான அல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பின்னர் சுரோடிங்கரின் பூனை எனப்படும் சிந்தனைச் சோதனையை முன்வைத்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஏப்ரல் 6, 1920 இல், சுரோடிங்கர் அன்மேரி (அன்னி) பெர்டலை மணந்தார்.[1] சுரோடிங்கர் காசநோயால் பாதிக்கப்பட்டார் மற்றும் 1920 களில் பலமுறை அரோஸாவில் உடல்நல இல்லத்தில் தங்கினார். அங்கு தான் அவர் தனது அலை சமன்பாட்டை உருவாக்கியிருந்தார்.[2]

மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, சுரோடிங்கருக்கு வழக்கத்திற்கு மாறான தனிப்பட்ட வாழ்க்கை இருந்தது. 1938 ஆம் ஆண்டில் அவர் அயர்லாந்திற்கு குடிபெயர்ந்தபோது, தனக்கும், அவரது மனைவிக்கும், மற்றொரு பெண்மணியான ஹில்டே மார்சுக்கும் விசாக்களைப் பெற்றார். மார்ச், சுரோடிங்கரின் ஒரு ஆஸ்திரிய தோழனின் மனைவி மற்றும் சுரோடிங்கர் 1934 ல் அவளுடைய ஒரு மகளுக்குத் தந்தையாகவும் இருந்தார்.[3] திருமதி. மார்ச் விசாவைப் பெறுவதற்காக சுரோடிங்கர் டாய்ஸ்சாக், எமமோன் டி வாலேராவுக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். சுரோடிங்கர் அயர்லாந்து நாட்டில் மேலும் இரண்டு வெவ்வேறு பெண்களின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாக இருந்தார்.[3] இவரது பேரன், பேராசிரியர் டெர்ரி ருடால்ப், சுரோடிங்கரின் அடிச்சுவடுகளின் வழியே குவாண்டம் இயற்பியலாளராக லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் கற்றுக்கொடுக்கிறார்.[4][5]

தொடக்க காலம்[தொகு]

சுரோடிங்கர் 1887 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தார். இவரது தந்தையார் ருடோல்ஃப் சுரோடிங்கர், தாய் ஜோர்ஜைன் எமிலியா பிரெண்டா. தாய் ஆஸ்திரிய, ஆங்கிலேயக் கலப்பில் பிறந்தவர். சுரோடிங்கரின் வீட்டில் ஆங்கிலமும், ஜேர்மன் மொழியும் பேசப்பட்டதால் இவர் இரண்டையுமே ஒரே நேரத்தில் கற்றுக்கொண்டார். 1898 ஆம் ஆண்டில் இவர் அக்கடமிஸ்செஸ் ஜிம்னாசியம் என்னும் பள்ளியில் படித்தார். 1906 ஆம் ஆண்டுக்கும் 1910 ஆம் ஆண்டுக்கும் இடையில் இவர் வியன்னாவில் "பிரான்ஸ் செராபின் எக்ஸ்னர்" என்பவரின் கீழும், "பிரீட்ரிக் ஹசனோர்ல்" என்பவரின் கீழும் கல்வி பயின்றார். இவர் பிரடெரிக் கோல்ரவுஸ்ச் என்பவருடன் சேர்ந்து சோதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். 1911 ஆம் ஆண்டில் இவர் எக்ஸ்னருக்கு உதவியாளரானார்.

அறிவியல் ஆராய்ச்சிகள்[தொகு]

ஆரம்ப கால ஆராயச்சிகள்[தொகு]

சுரோடிங்கர் தனது ஆரம்பகாலத்தில், மின்சார பொறியியல், வளிமண்டல மின்சாரம் மற்றும் வளிமண்டல கதிரியக்கம் ஆகிய துறைகளில் சோதனைகள் பல செய்தார், ஆனால் அவர் எப்பொழுதும் அவரது முன்னாள் ஆசிரியர் ஃபிரான்ஸ் எட்னெருடன் பணிபுரிந்தார். அவர் அதிர்வுக் கோட்பாடு, பிரவுனியன் இயக்கத்தின் கோட்பாடு மற்றும் கணித புள்ளியியல் ஆகியவற்றையும் படித்தார். 1912 ஆம் ஆண்டில், மின்சாரம் மற்றும் காந்தவியல்ப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர்களின் வேண்டுகோளின்படி, இருமுனைமின்சாரம் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார். அதே வருடம், சுரோடிங்கர், கதிரியக்க பொருள்களின் சாத்தியமான உயர விநியோகம் பற்றிய கோட்பாட்டு மதிப்பீட்டை அளித்தார், இது வளிமண்டலத்தின் கவனிக்கப்பட்ட கதிரியக்கத்தை விளக்க வேண்டிய அவசிய தேவையாகும், ஆகஸ்ட் 1913 ல் ஜீஹேமில் பல பரிசோதனைக்ளை செய்தார், இந்த சோதனைகள் மூலம் அவரது தத்துவார்த்த மதிப்பீடு மற்றும் விக்டர் ஃபிரான்ஸ் ஹெஸ்னுடைய கூற்று ஆகியவகளை உறுதி செய்தார். இந்த சோதனைகளுக்காக, ஆஸ்திரிய அறிவியல் கழகத்தின் 1920 ஆம் ஆண்டிற்கான ஹெய்டிங்கர் பரிசு சுரோடிங்கருக்கு வழங்கப்பட்டது.[6] 1914 இல் இளம் ஆய்வாளராக வாயு குமிழ்கள் உள்ள அழுத்தம் சூத்திரங்கள் சோதனை ஆய்வுகள் செய்தார் மற்றும் உலோக மேற்பரப்பில் காமா கதிர்கள் வீழ்ச்சியால் தோன்றும் மென்மையான பீட்டா-கதிர்வீச்சு பண்புகளை ஆய்வு செய்தார். கடைசியாக அவர் தனது நண்பரான ஃபிரிட்ஸ் கோல்ட்ராசிக் உடன் இணைந்து 1919 ஆம் ஆண்டில், சுரோடிங்கர் தனது கடைசி இயற்பியல் பரிசோதனையாக ஒத்திசைவான ஒளியிலைப் பற்றி நிகழ்த்தினார், பின்னர் கோட்பாட்டு ஆய்வுகள் மீது கவனம் செலுத்தினார்.

குவாண்டம் இயக்கவியல்[தொகு]

புதிய குவாண்டம் கோட்பாடு[தொகு]

அவரது ஆரம்ப கால ஆராய்ச்சி வாழ்க்கையின் முதல் வருடத்தில் சுரோடிங்கர் குவாண்டம் கோட்பாடுப் பற்றிய அறிமுகம், மாக்ஸ் பிளாங்க், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்சு போர், அா்னால்டு சாமா்பீல்டு, மற்றும் பலரின் ஆராயச்சிகளை படித்து அறிமுகப்ப்டுத்திக்கொண்டார். இந்த குவாண்டம் பற்றிய அறிவு, கோட்பாட்டு இயற்பியலில் சில சிக்கல்களில் வேலை செய்ய உதவியது, ஆனால் அந்த நேரத்தில் ஆஸ்திரிய விஞ்ஞானியான சுரோடிங்கர் இன்னும் பாரம்பரிய இயற்பியல் முறைகளுக்குத் தயாராக இல்லை.

அணு கோட்பாடு மற்றும் நிறமாலை கோட்பாட்டைப் பற்றி சுரோடிங்கர் முதல் பிரசுரங்கள் 1920 களின் துவக்கத்தில் இருந்து தோன்றின, சோமர்பீல்டு மற்றும் வொல்ப்காங் பாலி ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் அறிமுகமான பிறகு, ஜெர்மனிக்கு அவர் சென்றார். சனவரி 1921 இல், சுரோடிங்கர் கார உலோகங்களில் உள்ள எலக்ட்ரான்களின் மோதலினால் உண்டாகும் நிறமாலையின் பண்புகள் குறித்த போர்-சாமா்பீல்டு விளைவின் கட்டமைப்பு பற்றிய தனது முதல் கட்டுரையை முடித்தார். சார்பியல் கோட்பாடு பற்றிய அறிமுகக் கருத்துக்கள் குறிப்பாகக் கிடைத்தது அவருக்குக் குவாண்டம் கோட்பாட்டில் ஆர்வத்தை உண்டாக்கியது. 1922 ஆம் ஆண்டு இலையுதிர் காலங்களில், கணிதவியலாளர் ஹெர்மன் வெயில் (1885-1955) உருவாக்கிய முறைகளைப் பயன்படுத்தி ஒரு அணுக்கருவில் உள்ள எலக்ட்ரான் சுற்றுப்பாதைகளை அவர் பகுப்பாய்வு செய்தார். இந்த ஆய்வானது, குவாண்டம் சுற்றுப்பாதைகளைன் வடிவியல் பண்புகள் குற்த்து அறிந்துகொள்ளவும் மற்றும் அலை இயக்கவியல்ப் பற்றிய பண்புகளை அறிந்துகொள்ளவும் உதவியது. அதே ஆண்டில், அவர் நிறமாலை கோடுகளுக்கு சார்பியல் டாப்ளர் விளைவுகளின் சுரோடிங்கர் சமன்பாட்டை ஒன்றை உருவாக்கினார். இந்தச் சமன்பாடு ஒளியை குவாண்டாவாகவும் மற்றும் ஆற்றல், வேகம் பற்றிய கருத்துக்களை அடிப்படையாகவும் கொண்டது. அவர் பாதுகாப்பு சட்டத்தின் புள்ளிவிவர தன்மையை தனது ஆசிரியர் எச்னரின் கருத்தை அவர் விரும்பினார், அதனால் அவர் நீல்சு போர், ஹான்ஸ் கிராமர்ஸ் மற்றும் ஜான் சி. ஸ்லாட்டர் கட்டுரைகளை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார், இது தனிப்பட்ட அணு செயல்முறைகளில் (எடுத்துக்காட்டாக, கதிர்வீச்சு உமிழ்வு செயல்பாட்டில்) இந்த சட்டங்களை மீறுவதற்கான வாய்ப்பை பரிந்துரைத்தது. ஹான்ஸ் கெய்கர் மற்றும் வால்டர் போத்தி சோதனைகள் விரைவில் சந்தேகத்தை ஏற்படுத்தினாலும், புள்ளியியல் கருத்தாக ஆற்றல் பற்றிய யோசனை சுரோடிங்கருக்கு வாழ்நாள் முழுவதும் கவர்ந்தது, அவர் சில அறிக்கைகள் மற்றும் வெளியீடுகளில் மூலம் இதைப் பற்றி விவாதித்தார்.[7]

அலை இயக்கவியல் உருவாக்கம்[தொகு]

சனவரி 1926 இல், இயற்பியலுக்கான "அண்ணலென் டி பிசிக்ஸ்" என்னும் அறிவியல் இதழில் சுரோடிங்கர் "குவாண்டமாக்கல் ஒரு ஈகன் மதிப்பு சிக்கல்" [8] என்ற தலைப்பில் அலை இயக்கவியல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார் மற்றும் இப்போது சுரோடிங்கர் சமன்பாடு என்று வழங்கப்படுகிறது. இந்த கட்டுரையில், காலம்(நேரம்)-சாராத அமைப்புகளுக்கான அலை சமன்பாட்டின் ஒரு "வகைப்பாடு" ஒன்றை அவர் கொடுத்தார், அது ஹைட்ரஜன் போன்ற அணுவிற்கு சரியான ஆற்றல் ஈகன் மதிப்புகளை வழங்கியது. இந்த கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாக உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகிறது, மேலும் பெரும்பாலான குவாண்டம் இயக்கவியல் மற்றும் உண்மையில் இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றில் ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளது.

இரண்டாவது கட்டுரை (தாள்) நான்கு வாரங்கள் கழித்து சமர்பித்ததார். அதில் குவாண்டம் சீரான அலையியற்றி, திடமான சுழலி மற்றும் இருஅணு மூலக்கூறு சிக்கல்கள் ஆகிய சிக்கல்கலுக்கான முடிவுகளை கொடுத்தார். மேலும் சுரோடிங்கர் சமன்பாடுக்கான புதிய வகைப்பாட்டையும் கொடுத்தார்.

மே மாதம் வெளியிடப்பட்ட ஒரு மூன்றாவது தாளானது, ஹெசென்பெர்கின் அணுகுமுறைக்கான சமன்பாட்டையும் மற்றும் ஸ்டார்க் விளைவுக்கான முடிவுகளையும் வழங்கினார். இந்த தொடரில் ஒரு நான்காவது தாளில் சிதறிய பிரச்சினைகளைப் போலவே காலத்தை மாற்றியமைக்கும் சிக்கல்களை எப்படிக் கையாள்வது என்பதைக் விளக்கினார். இந்தத் தாளில் நான்காவது மற்றும் ஆறாவது வரிசை வேறுபாடு சமன்பாடுகளின் நிகழ்வுகளை தடுக்க, அலை சமன்பாட்டிற்கு சிக்கலான தீர்வையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

கெளரவங்கள் மற்றும் விருதுகள்[தொகு]

 • இயற்பியலுக்கான் நோபல் பரிசு (1933) - சுரோடிங்கர் சமன்பாட்டின் உருவாக்கத்திற்காக
 • மேக்ஸ் பிளாங்க் பதக்கம் (1937)
 • 1949 ஆண்டில் ராயல் சொசைட்டி (ForMemRS) வெளியுறவு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]
 • ஆஸ்திரிய அறிவியல் கழகத்தின் (1956 ஆம் ஆண்டுக்கான எர்வின் ஸ்ரோடைங்கர் பரிசு
 • அறிவியல் மற்றும் கலைக்கான ஆஸ்திரிய அலங்காரம் விருது (1957)

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Moore discusses Schrödinger's unconventional relationships, including his affair with Hildegunde March, in chapters seven and eight, "Berlin" and "Exile in Oxford".
 2. Moore, p. 194
 3. 3.0 3.1 Ronan Fanning, Eamon de Valera: A Will to Power, Faber & Faber, 2015
 4. Ryan, Greg (3 June 2013). "Searching for the Man Behind the Cat". The Brooklyn Rail. http://brooklynrail.org/2013/06/books/searching-for-the-man-behind-the-cat. பார்த்த நாள்: 2017-02-11. 
 5. Gribbin, John (2012). Erwin Schrödinger and the Quantum Revolution. Transworld. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781446465714. பார்க்கப்பட்ட நாள் 2017-02-11.
 6. Mehra, J. and Rechenberg, H. (1987) Erwin Schrödinger and the Rise of Wave Mechanics. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-95179-9
 7. The Conceptual Development of Quantum Mechanics. New York: McGraw-Hill, 1966; 2nd ed: New York: American Institute of Physics, 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88318-617-9
 8. Schrodinger, Erwin (1926). "Quantisierung als Eigenwertproblem". Annalen der Physik 384 (4): 273–376. doi:10.1002/andp.19263840404. Bibcode: 1926AnP...384..361S இம் மூலத்தில் இருந்து 25 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140525161450/http://onlinelibrary.wiley.com/doi/10.1002/andp.19263840404/pdf. பார்த்த நாள்: 7 April 2014. 
 9. Walter Heitler (1961). "Erwin Schrodinger. 1887–1961". Biographical Memoirs of Fellows of the Royal Society 7: 221–226. doi:10.1098/rsbm.1961.0017. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Erwin Schrödinger
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எர்வின்_சுரோடிங்கர்&oldid=3536176" இலிருந்து மீள்விக்கப்பட்டது