ஹக் டேவிட் பொலிட்ஸர்
ஹக் டேவிட் பொலிட்ஸர் | |
---|---|
பிறப்பு | ஆகத்து 31, 1949 நியூயார்க் நகரம், நியூயார்க் மாநிலம், அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கா |
துறை | இயற்பியல் |
பணியிடங்கள் | கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | மிச்சிகன் பல்கலைக்கழகம் ஹார்வார்டு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | சிட்னி கோலிமேன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | ஸ்டிபன் வொல்வ்ராம் |
அறியப்படுவது | குவைய நிறஇயக்கவியலில், அணுகு வழி சுதந்திரம் |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (2004) |
ஹக் டேவிட் பொலிட்ஸர் (பிறப்பு ஆகத்து 31,1949) ஓர் அமெரிக்க கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் கோட்பாட்டு இயற்பியலாளர். இவர் 2004 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு டேவிட் கிராஸ் மற்றும் பிரான்க் வில்செக் ஆகியோருடன் இணைந்து குவைய நிறஇயக்கவியலில்(Quantum chromodynamics) அணுகு வழி சுதந்திரம் கண்டுபிடித்ததற்காக கிடைத்தது.[1]
வாழ்க்கை மற்றும் ஆராய்ச்சிப்பணி
[தொகு]பொலிட்ஸர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் ஆலன் மற்றும் வாலெரி பொலிட்ஸர் இருவரும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இவர் 1966 ஆம் ஆண்டில் பிரான்க்ஸ் அறிவியல் பள்ளியில் படித்தார். பின்னர் 1969 ஆம் ஆண்டில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (PhD) பெற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Nobel Prize in Physics 2004". Nobel Web. 2004. பார்க்கப்பட்ட நாள் 2010-10-24.
வெளி இணைப்புகள்
[தொகு]- Biography and Bibliographic Resources, from the Office of Scientific and Technical Information, United States Department of Energy
- Nobel Citation
- Nobel Lecture, "The Dilemma of Attribution" பரணிடப்பட்டது 2008-12-01 at the வந்தவழி இயந்திரம் (pdf document. Adobe Acrobat required)
- List of papers, from SPIRES பரணிடப்பட்டது 2012-12-11 at Archive.today
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஹக் டேவிட் பொலிட்ஸர்
- Caltech press release on Politzer winning the Nobel Prize பரணிடப்பட்டது 2007-03-04 at the வந்தவழி இயந்திரம்
- கணித மரபியல் திட்டத்தில் ஹக் டேவிட் பொலிட்ஸர்