கோட்பாட்டு இயற்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கோட்பாட்டு இயற்பியல் கணித மாதிரிகளையும், கோட்பாடுகளையும் கொண்டு இயற்கை நிகழ்வுகளை விளக்க முற்படும் இயற்பியலின் ஓர் உட்பிரிவாகும். இதன் மூலக்கரு கணித இயற்பியலானாலும் பிற தத்துவ முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இயற்பியலின் நிகழ்வுகளைப் புரிந்து கொண்டு, அவற்றை விளக்கி, கணிப்பதும் தான் இதன் குறிக்கோளாகும். அறிவியலின் வளர்ச்சி பொதுவாக செயல்முறைகளினால் அறிதலையும், கோட்பாடுகளையும் சார்ந்துதான் உள்ளது. சில சமயங்களில், இவ்வியற்பியல் கணிதத்தை மிக உறுதியாகச் சார்ந்து, செயல்முறைகளையும் புரிந்துணர்தலையும் பின்தள்ளுகிறது. உதாரணமாக, சிறப்பு சார்பியல் கோட்பாட்டை உருவாக்கும் போது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லோரன்ட்ஸ் உருமாற்றங்களைச் சார்ந்திருந்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்பாட்டு_இயற்பியல்&oldid=2056623" இருந்து மீள்விக்கப்பட்டது