உரோசர் பென்ரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர் உரோசர் பென்ரோசு
Sir Roger Penrose
பிறப்புஆகத்து 8, 1931 (1931-08-08) (அகவை 92)
கோல்செசுட்டர், இங்கிலாந்து
துறைகணிதவியற்பியல், தரைபாவுமைகள்
பணியிடங்கள்
கல்வி
ஆய்வேடுஇயற்கணித வடிவியலில் பன்னெறிய முறைகள் (1958)
ஆய்வு நெறியாளர்ஜான் ஏ. டொட்
அறியப்படுவது
பங்களிப்புகளின் பட்டியல் 
 • மூர்-பென்ரோசு போலிநேர்மாறு
 • டுவிசுட்டர் கொள்கை
 • கருந்துளைக் குண்டு
 • காலவெளி வடிவியல்
 • அண்டத் தணிக்கைக் கருதுகோள்
 • வேய்ல் வளைமைக் கருதுகோள்
 • பென்ரோசு சமனின்மைகள்
 • பென்ரோசு குவைய இயக்கவியல் விளக்கம்
 • தியோசி-பென்ரோசு உரு
 • நியூமன்-பென்ரோசு உருவவியல்வாதம்
 • பென்ரோசு வரைபடம்
 • பென்ரோசுப் படிகள்
 • பென்ரோசு வரைவியல் குறிமானங்கள்
 • சுரோடிங்கர்-நியூட்டன் சமன்பாடுகள்
விருதுகள்
விருதுகளின் பட்டியல் 

சர் உரோசர் பென்ரோசு (Sir Roger Penrose, பிறப்பு; 8 ஆகத்து 1931)ஓர் ஆங்கிலேய கணிதவியலாளரும் கணித இயற்பியலாளரும் அறிவியல் மெய்யியலாளரும் ஆவார். இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழக கணிதவியல் நிறுவனத்தின் இரவுசுபால் கணிதவியல் பேராசிரியராவார். இவர் வாதாம் கல்லூரியின் தகைமை ஆய்வுறுப்பினரும் ஆவார்.

இவர் கணித இயற்பியல் பங்களிப்புகளுக்காக, குறிப்பாக பொதுச் சார்பியல், புறநிலை அண்டவியல் சார்ந்த ஆய்வுகளுக்காகப் பெயர்பெற்றவர். இவர் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றுள்ளார். இவரும் சுட்டீபன் ஆக்கிங்கும் 1988 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான வுல்ஃப் பரிசைப் பென்ரோசு-ஆக்கிங் ஒழுங்கின்மை தேற்றங்களுக்காகப் பெற்றனர்.[1] ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு கருந்துளைகள் உருவாதல் சாத்தியம் என்பதை பென்ரோஸ் கணிதத்தைக் கொண்டு நிரூபித்தார். இந்தக் கண்டுபிடிப்பிற்காக இரைனாடு கென்செல் மற்றும் ஆந்திரியா கியேசு ஆகியோருடன் இணைந்து 2020 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.[2]


மேற்கோள்கள்[தொகு]

 1. Penrose, R (2005). The Road to Reality: A Complete guide to the Laws of the Universe. Vintage Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-09-944068-7 
 2. "2020 Nobel Prize for Physics awarded to Roger Penrose, Reinhard Genzel and Andrea Ghez". Hindustan Times (in ஆங்கிலம்). 2020-10-06. பார்க்கப்பட்ட நாள் 2020-10-07.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பென்ரோசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோசர்_பென்ரோசு&oldid=3364708" இலிருந்து மீள்விக்கப்பட்டது