சொரேசு ஆல்ஃபியோரொவ்
சொரேசு ஆல்ஃபியோரொவ் Zhores Alferov | |
---|---|
பிறப்பு | வித்தேபிஸ்க், பெலருஸ், சோவியத் ஒன்றியம் | மார்ச்சு 15, 1930
இறப்பு | 1 மார்ச்சு 2019 சென் பீட்டர்ஸ்பேர்க் | (அகவை 88)
தேசியம் | பெலருசியர் |
துறை | பயன்முறை இயற்பியல் |
பணியிடங்கள் | இயோஃபி இயற்பியல்-தொழிநுட்பக் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | வி. இ. உலியானொவ் மின்தொழிநுட்பக் கழகம் |
அறியப்படுவது | Heterotransistors |
விருதுகள் | கியோட்டோ பரிசு (2001) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2000) தேமிதொவ் பரிசு (1999) இயோஃபி பரிசு (1996) சோவியத் அரசுப் பரிசு (1984) லெனின் பரிசு (1972) |
சொரேசு இவானோவிச் ஆல்ஃபியோரொவ் (Zhores Ivanovich Alferov, உருசியம்: Жоре́с Ива́нович Алфёров, மார்ச் 15, 1930 – மார்ச் 1, 2019) புகழ் பெற்ற ஓர் உருசிய இயற்பியலாளர். இவர் 2000 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவருடன் இப்பரிசை அவ்வாண்டு பகிர்ந்தவர்கள் அமெரிக்காவின் பேராசிரியர் எர்பெர்ட் குரோமர், மற்றும் சாக் கில்பி ஆகியோர். இம்மூவரும் மின்னணுவியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக இப்பரிசு வழங்கப்பட்டது. சீரொளி என்னும் லேசர் ஒளியை ஆக்க வேறுபட்ட பொருட்களை எவ்வாறு இணைத்து சீரொளி தரும் கருவியைச் செய்யலாம் என அவர்கள் செய்து கண்டுபிடித்த ஆய்வுக்கருத்துக்கள் புகழ் வாய்தவை.
ஆல்ஃபியோரொவ் பெலருசு நாட்டில் உள்ள விட்டெபஸ்க் என்னும் ஊரில் பிறந்தார். 1952ல் லெனின்கிராதில் உள்ள வி.ஐ. உலியானோவ் மின்நுட்பக் கல்விக்கழகத்தில் முதல் பட்டம் பெற்றர். பின்னர் 1953 முதலாகவே புகழ் மிக்க உருசிய அறிவியல் உயர்கல்விக் கழகத்தைச் சேர்ந்த இயோஃபி இயற்பியல் நுட்பக்கழத்தில் முனைவர் பட்டத்திற்கு படித்தார் (1970), பிறகு அங்கேயே ஆய்வும் செய்து வந்தார், அதன் பின்னர் அங்கேயே இயக்குநராக 1987ல் இருந்து பணியாற்றி வந்தார்.
பரிசுகள்
[தொகு]- லெனின் பரிசு (1972)
- சோவியத் ஒன்றிய அரச பரிசு (1984)
- இயோஃபி பரிசு (உருசிய அறிவியல் கழகம், 1996)
- நோபல் பரிசு 2000 (உடன் பெற்றவர்கள் எர்பெர்ட் குரோமர் மற்றும் சாக் கில்பி)
- கியோட்டோ பரிசு மேம்பட்ட தொழில்நுட்பத் துறைக்காக அளிக்கப்பட்டது (2001).
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- வாழ்க்கை வரலாறு பரணிடப்பட்டது 2014-10-03 at the வந்தவழி இயந்திரம்
- தன்வரலாறு, நோபல் நிறுவனத்தின் தலத்தில்.