உள்ளடக்கத்துக்குச் செல்

சேம்சு பீபிள்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேம்சு பீபிள்சு
Jim Peebles
பிறப்புபிலிப்பு சேம்சு எடுவின் பீபிள்சு
Phillip James Edwin Peebles
ஏப்ரல் 25, 1935 (1935-04-25) (அகவை 89)
[[[வினிப்பெக்]], மானிட்டோபா, கனடா
துறை
பணியிடங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்
அறியப்படுவதுபிரபஞ்ச நுண்ணலை அம்பலம்
விருதுகள்எடிங்டன் பதக்கம் (1981)
கைன்மன் பரிசு (1982)
புரூசு பதக்கம் (1995)
அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1998)
அண்டவியலில் குரூபர் பரிசு (2000)
ஆர்வே பரிசு (2001)
இழ்சா பரிசு (2004)
கிராஃபோர்டு பரிசு (2005)
டிராக் பதக்கம் (2013)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2019)

பிலிப்பு சேம்சு எடுவின் பீபிள்சு (Phillip James Edwin Peebles (பிறப்பு: ஏப்பிரல் 25, 1935) ஒரு கனடிய-அமெரிக்க இயற்பியலாளரும் கோட்பாட்டு அண்டவியலாளரும் ஆவார், இவர் இப்போது பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் அய்ன்சுட்டீன் அறிவியல் தகைமைப் பேராசிரியராக உள்ளார்.[1][2] இவர் 1970 இல் இருந்து, கோட்பாட்டு அண்டவியல் வல்லுனர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார். இவர் முந்துபாழ்மை அணுக்கருத் தொகுப்பு, கரும்பொருண்மம், அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சு, அண்டப் பேரியல் கட்டமைப்பு உருவாக்கம் ஆகிய புலங்களில் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். இவரது பெயர்பெற்ற மூன்று நூல்களான அண்டக் கட்டமைப்பியல் (1971), புடவியின் பேரளவுக் கட்டமைப்பு (1980), அண்டக் கட்டமைப்பின் நெறிமுறைகள் (1993) ஆகியவை இப்புலத்தில் செந்தரப் பாடநூல்கள் ஆகும்.

இவர், இவரது அண்டக் கட்டமைப்பியல் கண்டுபிடிப்புகளுக்காக 2019 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மதிப்பில் அரைப்பகுதியை ப் பெற்றார்.[3] சூரினை ஒத்த விண்மீனைச் சுற்றிவரும் புறவெளிக்கோளைக் கண்டுபிடித்த [[மீசல் மயோர்],] [[திதியே குவெலோ ஆகியவருடன் இப்பரிசைப் பகிர்ந்துகொண்டார்.[4][5][6]ரிவரது பெரும்பாலான் பணி முதல் சில நொடிகலிலான புடவியின் உருவாக்கத்தைப் பற்றியது என்றாலும் முழுமுதல் தொடக்கம் குறித்து, ரொருவர் முழுமுதல் தொடக்கம் குறித்து கருதும்போதும்போது , உண்மையில் நம்மிடம் தொடக்கம் பற்றிய கோட்பாடெதுவும் இல்லை என்பது தெளிவாகிறது" என்று கூறியுள்ளார்.[7]

பீபுள்சு தன்னை உறுதியான அறியொணாவாதியாக அறிவித்துக் கொண்டார்.]].[8]

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் கனடா, மனித்தோபாவைச் சேர்ந்த புனித வித்தாலில்(இன்றைய வின்னிபெகு) 1935, ஏப்பிரல் 25 இல் பிறந்தார். இவரது தந்தையாராந்திரூ சார்லசு பீபுள்சு வின்னிபெகு கூலப் பரிமாற்றகத்தில் பணிபுரிந்தார். இவரது தாயாரரடா மரியோன் இல்லக்கிழத்தியாவார்.[9] இவர் தன் இளவல் பட்டத்தை மனித்தோபா பல்கலைக்கழகத்தில் முடித்தார். இவர் 1958 இலையுதிர்காலத்தில் மனித்தோபாவில் இருந்து பிரிசுட்டன் பல்கலைக்கழகத்துக்கு தன் முனவர் பட்டம் பெறச் சென்றார். அங்கே இராபர்ட் எச். திக்கே வழிகாட்டுதலின்கீழ முனைவர் பட்டத்தை 1962 இல் முடித்தார்;[10] இவரது ஆய்வுத் தலைப்பு "Observational Tests and Theoretical Problems Relating to the Conjecture That the Strength of the Electromagnetic Interaction May Be Variable" என்பதாகும்.[11] இவ பிரிசுட்டனிலேயே வாழ்நாள் முழுவதும் இருந்து தன் தொழிலை மேற்கொண்டார். இவர் 1977-78 கல்வி ஆண்டில் உயர் ஆய்வு நிறுவனத்தின் இயற்கை அரிவியல் பள்ளியில் உறுப்பினராக இருந்தார்; இவர் பிற்கு இங்கே 1990–91 ஆம் ஆண்டிலும் 1998–99 ஆண்டிலும் வரௌகை தந்துள்ளார்.[12]

கல்வியியல் பணி[தொகு]

இவர் 1964 இல் இருந்து பெரும்பாலும் அண்டக் கட்டமைப்பியலில் அண்டத்தின் தோற்றம் பற்றி அறியவே பணிபுரிந்துள்ளார். இப்புலம் 1964 இல் ஆர்வம்காட்டப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இவர் அண்டத்தை ஆய்வதிலேயே கனத்தைக் குவித்தார்.[13] பீபுள்சு பெருவெடிப்புக் கோட்பாட்டுக்குப் பல அரிய பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் பெருவெடிப்புக் கோட்பாட்டுப் படிமத்துக்கு ஜார்ஜ் காமவ், இரால்ப் ஏ. ஆல்ப்பர், இராபர்ட் எர்மன் ஆகியவருக்குப் பிறகு இருபத்தாண்டுகளாக இராபர்ட் எச். திக்கேவுடன் இணைந்து முதன்மையான பங்களிப்புகளைச் செய்துள்ளார். இவர் அவர்களுக்குப் பிறகு அண்ட நுண்ணலைப் பின்னணி கதிர்வீச்சை முன்மொழிந்தார். பெருவெடிப்பு அணுக்கருத் தொகுப்பு, இருண்ட பொருள், இருண்ட ஆற்றல் ஆகியவற்றுக்குப் பாரிய பங்களிப்புகளை ஆற்றியதோடு,1970 களில் அண்டக் கட்டமைப்பு உருவாக்கத்துக்கான முன்னோடித் தலைமையேற்றவர் இவரே ஆவார். இப்புலம் அளவியல்சார் இயற்பியலில் சீரிய போக்கில் கருதுவதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே, இவர் அண்டக் கட்டமைப்பியலை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் தகவை ஏற்கும்படி பணியாற்றினார். பீபுள்சு பின்வருமாறு கூறினார், " அண்டவியலின் கண்டுபிடிப்பு ஒற்றை அடி எடுத்துவைப்பில் திடீரென உருவாகி விடவில்லை; பல பொருத்தமான அரிய உய்யநிலை ச் செய்முறை நோக்கீடுகளால் படிப்படியாகக் கிளர்ந்தெழும்பலானது. என் தொழில்முறை வாழ்க்கையில் மிக முதன்மை வாய்ந்த தெளிவான கண்டுபிடிப்பாக அண்ட நுண்னலைப் பின்னனிக் கதிர்வீச்சுக் கண்டுபிடிப்பு அனைவரின் உடனடிக் கவனிப்பை ஈர்த்தது [...] பெரிதும் செய்முறை வல்லுனரும் கதிர்வீச்சின் இயல்புகளை அளக்க ஆர்வம் கொண்டனர்; இதன் விளைவுகளை உணர்ந்தறிய கோட்பாட்டாளர்களும் பகுப்பாய்வில் ஈடுபட்டு ஒன்றுசேர்ந்தனர்".[14] இவரது சா பரிசு மேற்கோள் " புத்தண்டவியலுக்கு இவர்கோட்பாட்டியலாகவும் நோக்கீடுகள் ஊடாகவும் அதன் அடிப்படைகளை உருவாக்கி, உயர்நிலை ஊகப் புலமாக விளங்கிய அதைஹ் துல்லியமான அறிவிலாக உருமாற்றினார்" எனக் கூறுகிறது. [15]

இவர் பின்னர் விரிவாக பிந்தைய அறிவியலாளர்களால்ஆய்வுக்கு எடுத்துகொண்ட பல எண்ணக்கருக்களைத் தொடர்ந்து புதுப்பித்த நீண்ட வரலாற்றுத் தடம்பதித்தவர் ஆவார். எடுத்துகாட்டாக, 1987 இல் இவர் தொடக்கநிலைப் புடவி உருவாக்கத்துக்கான முந்துபாழ் சமவளைவு அடர்துகள் படிமத்தை முன்மொழிந்தார் .[16] இதேபோல, பீபுள்சு 1970களின் தொடக்கத்தில் இருண்ட பொருள் சிக்கலுக்கும் பங்களிப்புகள் செய்துள்ளார்.[17][18] இவர் பால்வெளி வடிவ நிலைப்புக்கான ஓசுத்திரிக்கர்-பீபுள்சு வரன்முறைக்காகவும் பால்வெளி உருவாக்கத்தின் சார்புநிலை நிலைப்புக்காகவும் பெயர்பெற்றவர். [19]

இவரது ஆய்வுப் பணிகளின் அழுத்தம் 2019 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு இவரைத் தேர்ந்தெடுக்க வைத்தது. நோபல் பரிசு இவரது பணியைப் பற்றிப் பின்வருமாறு விளக்குகிறது, " இவருக்கு நோபல் பரிசு அண்டக் காமைப்பியலின் கோட்பாட்டுக் கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுகிறது"; பீபுள்சு, முதன்மை வரிசை விண்மீன் ஒன்றின் புறவெளிக் கோளைக் கன்டுபிடித்த மிசல் மயோர், திதியே குவெலோ இருவருடன் பகிர்ந்துக் கொண்டார்.[20]

பீபுள்சு 1977 இல் [[ அமெரிக்கக் கலை, அறிவியல் தேசியக் கவிக்கழக உறுப்பினராகவும் 1988 இல் தேசிய அறிவியல் கல்விக்கழக றுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[21][22]

தகைமைகள்[தொகு]

விருதுகள்

இவரது பெயரிடப்பட்டவை

வெளியீடுகள்[தொகு]

 • Peebles, P. J. E. (1980). Large-Scale Structure of the Universe. Princeton University Press.
 • Peebles, P. J. E. (1992). Quantum Mechanics (1st Printing ed.). Princeton University Press.
 • Peebles, P. J. E. (1993). Principles of Physical Cosmology (n ed.). Princeton University Press.
 • Peebles, J. P. E. (2009). Finding the Big Bang (1st ed.). Cambridge University Press.
 • Peebles, P. J. E. (2020). Cosmology’s Century. Princeton University Press.
 • Peebles, P. J. E. (2022). The Whole Truth. Princeton University Press.[40]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Princeton University Physics Department". Archived from the original on 2011-05-11. பார்க்கப்பட்ட நாள் 2017-04-17.
 2. "Princeton University News". Archived from the original on 2016-04-13. பார்க்கப்பட்ட நாள் 2017-04-17.
 3. Hooper, Dan (October 12, 2019). "A Well-Deserved Physics Nobel - Jim Peebles' award honors modern cosmological theory at last". Scientific American. https://blogs.scientificamerican.com/observations/a-well-deserved-physics-nobel/. 
 4. "The Nobel Prize in Physics 2019". Nobel Media AB. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 5. Chang, Kenneth; Specia, Megan (October 8, 2019). "Nobel Prize in Physics Awarded for Cosmic Discoveries - The cosmologist James Peebles split the prize with the astrophysicists Michel Mayor and Didier Queloz, for work the Nobel judges said "transformed our ideas about the cosmos."". The New York Times. https://www.nytimes.com/2019/10/08/science/nobel-prize-physics.html. 
 6. Kaplan, Sarah (8 October 2019). "Nobel Prize in physics awarded for research on exoplanets and the structure of the universe". Washington Post. https://www.washingtonpost.com/science/2019/10/08/nobel-prize-physics-awarded-research-exoplanets-structure-universe/?wpisrc=nl_optimist&wpmm=1. 
 7. Couronne, Ivan (November 14, 2019). "Top cosmologist's lonely battle against 'Big Bang' theory". Phys.org. https://phys.org/news/2019-11-cosmologist-lonely-big-theory.html. 
 8. "Jim Peebles - Session II". www.aip.org (in ஆங்கிலம்). 2015-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
 9. Narins, Brigham, ed. (2001). Notable Scientists from 1900 to the Present. Vol. 4 (N–S) (2 ed.). Gale Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780787617554 – via Google Books.
 10. Seeing Cosmology Grow
 11. Peebles, Phillip James Edwin (1962). Observational tests and theoretical problems relating to the conjecture that the strength of the electromagnetic interaction may be variable (PhD thesis). Princeton University. இணையக் கணினி நூலக மைய எண் 83718695 – via ProQuest.
 12. "Phillip James E. Peebles". Institute for Advanced Study. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 13. Garlinghouse, Tom (October 8, 2019). "A 'joy ride' of a career: Peebles wins Nobel Prize in Physics for tackling big questions about the universe". Princeton University. பார்க்கப்பட்ட நாள் October 9, 2019.
 14. "Interview with James Peebles". CERN EP newsletter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் May 4, 2016.
 15. "Announcement-The Shaw Laureate in Astronomy 2004". Shaw Foundation. பார்க்கப்பட்ட நாள் 27 January 2016.
 16. Hu (1994-06-28)
 17. de Swart, J. G.; Bertone, G.; van Dongen, J. (2017). "How dark matter came to matter". Nature Astronomy 1 (3): 0059. doi:10.1038/s41550-017-0059. 0059. Bibcode: 2017NatAs...1E..59D. 
 18. de Swart, Jaco (2020). "Closing in on the Cosmos: Cosmology's Rebirth and the Rise of the Dark Matter Problem". In Blum, Alexander; Lalli, Roberto; Renn, Jürgen (eds.). The Renaissance of General Relativity in Context. Einstein Studies. Vol. 16. Birkhäuser, Cham. pp. 257–284. arXiv:1903.05281. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-030-50754-1_8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-030-50754-1. S2CID 84832146.
 19. Binney, James; Tremaine, Scott (1987). Galactic Dynamics (in ஆங்கிலம்). Princeton University Press. p. 374. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691084459.
 20. Chang, Kenneth; Specia, Megan (October 8, 2019). "Nobel Prize in Physics Awarded for Studies of Earth's Place in the Universe". The New York Times. பார்க்கப்பட்ட நாள் October 9, 2019.
 21. "P. James E. Peebles". American Academy of Arts & Sciences (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-11.
 22. "P. James E. Peebles". www.nasonline.org. பார்க்கப்பட்ட நாள் 2020-05-11.
 23. "APS Fellow Archive".
 24. 24.0 24.1 Weintraub, David A. (2011). How Old Is the Universe? (in ஆங்கிலம்). Princeton University Press. p. 317. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691147314. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 25. "Dannie Heineman Prize for Astrophysics | American Astronomical Society". aas.org. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 26. "Phillip Peebles biography". Royal Society. பார்க்கப்பட்ட நாள் January 24, 2017.
 27. "The Bruce Medalists". www.phys-astro.sonoma.edu. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 28. "Earlier Lectures - Oskar Klein Centre". www.okc.albanova.se. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 29. Williams, D. A. (June 1, 1999). "Prof. P J E Peebles: 1998 Gold Medal". Astronomy & Geophysics (in ஆங்கிலம்). pp. 3.6–a–3.6. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/astrog/40.3.3.6-a. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 30. "2000 Gruber Cosmology Prize | Gruber Foundation". gruber.yale.edu. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 31. "Princeton Announcements, June 2001 - Archived". www.princeton.edu. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 32. "The Shaw Prize - Top prizes for astronomy, life science and mathematics". www.shawprize.org. Archived from the original on April 5, 2018. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 33. "American Philosophical Society Member History". www.amphilsoc.org. பார்க்கப்பட்ட நாள் June 9, 2021.
 34. "The Crafoord Prize 2005". www.crafoordprize.se. January 26, 2005. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 35. "Charles M. and Martha Hitchcock Lectures | Series | Berkeley Graduate Lectures". gradlectures.berkeley.edu. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 36. "FACULTY AWARD: Peebles awarded 2013 Dirac Medal for work in theoretical physics". Princeton University (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 37. "12 Manitobans to receive province's highest honour this summer". CBC.ca. May 12, 2017. https://www.cbc.ca/news/canada/manitoba/order-of-manitoba-recipients-1.4111916. 
 38. "The Nobel Prize in Physics 2019". Nobel Media AB. பார்க்கப்பட்ட நாள் October 8, 2019.
 39. "AAS Fellows". AAS. பார்க்கப்பட்ட நாள் 30 September 2020.
 40. PUP. "Phillip James Edwin Peebles Books | List of books by author Phillip James Edwin Peebles". PrincetonUniversityPress (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-15.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேம்சு_பீபிள்சு&oldid=3778451" இலிருந்து மீள்விக்கப்பட்டது