மிசல் மயோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசல் மயோர்
Michel G.E. Mayor
Michel Mayor astrophysicien.JPG
பிறப்பு12 சனவரி 1942 (1942-01-12) (அகவை 81)
லோசான், சுவிட்சர்லாந்து
தேசியம்சுவிட்சர்லாந்து
துறைவானியற்பியல்
பணியிடங்கள்ஜெனீவா பல்கலைக்கழகம்
கல்விஇலசான் பல்கலைக்க்ழகம் (முதுகலை)
ஜெனீவா பல்கலைக்கழகம் (PhD)
கல்வி கற்ற இடங்கள்இலசான் பல்கலைக்கழகம் (M.S., 1966)
ஜெனீவா பல்கலைக்கழகம் (Ph.D, 1971)
அறியப்படுவதுகதிரவ மண்டலத்துக்கு வெளியே விண்மீனைச் சுற்றிவரு கோளை முதன்முதலாகக் கண்டுபிடித்தல் 51 பெகாசி
விருதுகள்பிரீ சூல்சு சான்சன் (1998)
சா பரிசு (2005)
ஊல்ஃபு பரிசு (2017)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2019)

மிசல் மயோர் (Michel G.E. Mayor, பிறப்பு: 12 சனவரி 1942) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த விண்ணிய இயற்பியலாளர். இவர் செனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.[1] இவர் 2007 இல் பணி ஓய்வு பெற்றார் என்றாலும் செனீவா வான்காணகத்தில் ஆய்வாளராக உள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு சேம்சு பீபிள்சு (1/2 பரிசுத்தொகை), திதியே கெலோ (1/4 பரிசுத்தொகை) ஆகியோருடன் சேர்ந்து இவருக்கு வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் விக்டர் அம்பார்ட்ஃசுமியன் அனைத்துலக பரிசை வென்றார்.[2]. பின்னர் இவருக்கு 2015 இல் கியோட்டோ பரிசு அளிக்கப்பெற்றது.

51 பெகாசசு என்னும் விண்மீன் கூட்டத்தின் அருகே உள்ள ஒரு விண்மீனைச் சுற்றி ஒரு கோள் சுற்றி வருவதை திதியே கெலோ என்பாருடன் சேர்ந்து 1995 இல் முதன்முதலாகக் கண்டுபிடித்ததற்காக, இவருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் பரிசு வழங்கபெற்றது.[3][4]

மயோர் இலசான் பல்கலைக்கழகத்தில் பயின்று அறிவியலில் முதுநிலை பட்டத்தை 1966 இலும் செனீவாவில் வானியலில் முனைவர் பட்டத்தை 1971 இலும் பெற்றார். பின்னர் ஆய்வுக்கான நெடிய விடுப்பில் வட சிலி நாட்டில் இருக்கும் ஐரோப்பிய தென் வான்காணகத்திலும் அவாயி பல்கலைக்கழகத்திலும் சென்று ஆய்வு செய்தார்.[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "125076 Michelmayor (2001 UD6)". Minor Planet Center. 12 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Viktor Ambartsumian International Prize". Vaprize.sci.am. 18 July 2014. 14 செப்டம்பர் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. Michel Mayor profile; Didier Queloz (1995). "A Jupiter-mass companion to a solar-type star". Nature 378 (6555): 355–59. doi:10.1038/378355a0. Bibcode: 1995Natur.378..355M. 
  4. "The Nobel Prize in Physics 2019". நோபல் பரிசு. 8 October 2019 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Michel Mayor". The Planetary Society. 8 August 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசல்_மயோர்&oldid=3587896" இருந்து மீள்விக்கப்பட்டது