அபிஜித் பேனர்ஜீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அபிஜித் பேனர்ஜீ
பானர்ஜி (2011)
பிறப்பு பெப்ரவரி 1961 (அகவை 57)
கொல்கத்தா,இந்தியா
தேசியம் இந்தியர்
நிறுவனம் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம்
துறை பொருளாதார வளர்ச்சி
பயின்றகம் ஹார்வார்ட் பல்கலைக்கழகம்
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
பிரசிடென்சி கல்லூரி,கொல்கத்தா
தாக்கம் எஸ்தர் டுஃப்லோ
தாக்கமுள்ளவர் எஸ்தர் டுஃப்லோ

அபிஜித் விநாயக் பேனர்ஜீ (Abhijit Vinayak Banerjee) 1961இல் பிறந்த இந்தியப் பொருளாதர வல்லுநர். இவர் தற்போது அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் போர்ட் அறக்கட்டளையின் சர்வதேசப் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.[1] பேனர்ஜி, அப்துல் லதீஃப் ஜமீல் வறுமை நடவடிக்கை ஆய்வகத்தின் துணை நிறுவனர் ஆவார். இந்த ஆய்வகம் வறுமை ஒழிப்புக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்காகத் தொடங்கப்பட்டது. பேனர்ஜி நிதி அமைப்புகள் மற்றும் வறுமைக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஆவார். இவர் பொருளாதார வளர்ச்சித் திறனாய்வுப் பணியகத்தின் முந்தைய அதிபராகவும், தேசியப் பொருளாதார ஆய்வத்தின் இணை ஆய்வாளராகவும், பொருளாதாரக் கொள்கைக்கான ஆராய்ச்சி மையத்தில் சக ஆராய்ச்சியாளராகவும், கெய்ல் நிறுவனத்தின் சர்வதேச ஆராய்ச்சியாளராகவும், அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியின் உறுப்பினராகவும், எகனாமெட்ரிக் சொசைடியின் உறுப்பினராகவும் உள்ளார். "புவர் எகனாமிக்ஸ்" என்ற ஆங்கில நூலை பேனர்ஜீயும், எஸ்தர் டுஃப்லோ என்பவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிஜித்_பேனர்ஜீ&oldid=2469515" இருந்து மீள்விக்கப்பட்டது