சான் கூடினஃபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் கூடினஃப்
John Goodenough
பிறப்புசான் பானிசுட்டர் கூடினஃப்
சூலை 25, 1922 (1922-07-25) (அகவை 101)
செனா, செருமனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
டெக்சாஸ் பல்கலைக்கழகம் (ஆஸ்டின்)
கல்வியேல் பல்கலைக்கழகம் (BS)
சிக்காகோ பல்கலைக்கழகம் (முதுகலை
ஆய்வு நெறியாளர்கிலாரன்சு சேனர்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்பில் டேவிட்[1]
அறியப்படுவதுஇலித்தியம் அயனி மின்கலம், கூடினஃப்-கனமோரி விதிகள்
விருதுகள்சப்பான் பரிசு (2001)
என்ரிக்கோ பெர்மி விருது (2009)
அறிவியலுக்கான தேசிய விருது (2011)
ஐஇஇஇ விருது(2012)
சார்லசு இசுட்டார்க் திரேப்பர் பரிசு (2014)
வெல்ச் விருது (2017)
கோப்லி பதக்கம் (2019)
வேதியியலுக்கான நோபல் பரிசு (2019)

சான் பானிசிட்டர் கூடினஃபு (John Bannister Goodenough, பிறப்பு: 25 சூலை 1922) ஓர் அமெரிக்கப் பேராசிரியர். இவர் திண்மநிலை இயற்பியலாளரும், நோபல் விருதாளரும் ஆவார். இவர் டெக்சசு ஆசுட்டினில் உள்ள தெக்சாசு பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் துறையிலும் பொருளறிவியல் துறையிலும் பேராசிரியராக உள்ளார். இவர் இலித்தியம் மின்மவணு மின்கலங்கள் பற்றிய ஆய்விற்கும் கூடினஃபு-கானமோரி விதிகளுக்கும் புகழ் பெற்றவர். இவர் இசுட்டான்லி விக்கிங்காம், அக்கிரா யோசினோ ஆகிய இருவரோடு சேர்ந்து, இலித்தியம்-மின்மவணு மின்கல வளர்ச்சிகளுக்காக செய்த ஆய்வுகளுக்காக 2019 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை தனது 97-வது அகவையில் வென்றார். இவரே வரலாற்றில் மிகவும் வயதான காலத்தில் நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.[2]

2014 இல் இவர் இலித்தியம்-மின்மவணு மின்கல வளர்ச்சிகளுக்காக செய்த ஆய்வுகளுக்காக திரேப்பர் பரிசு பெற்றார்.[3]

இளமை வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

கூடினஃபு இடாய்ச்சுலாந்தில் இயேனா (Jena) என்னும் ஊரில் தந்தையார் எர்வின் இராம்சிடல் கூடினஃபு ((1893-1965) அவர்களுக்கும் தாய் எலென் மெரியம் கூடினஃபு அவர்களுக்கும் பிறந்தார். இவர் பிறக்கும் காலத்தில் இவரின் தந்தையார் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் கடவுட்தன்மையியல் கல்லூரியில் முனைவர்ப்பட்டத்துக்குப் படித்துக்கொண்டிருந்தார். இவரின் தந்தையார் பின்னர் யேல் பல்கலைக்கழகத்தில் சமய வரலாற்றுத் துறாய்யில் பேராசிரியராக இருந்தார். இவரின் அண்ணன் மறைந்த வார்டு கூடினஃபு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மாந்தவியலாய்வாளராக இருந்தார். இவரும் இவரின் அண்ணனும் மாசாச்சுசெட்சில் உள்ள குரோட்டன் என்னும் இடத்தில் உள்ள தங்கிப்படிக்கும் தனியார் பள்ளியான குரோட்டன் பள்ளியில் படித்தனர்[4]. சான் கூடினஃபு 1944 இல் யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டத்தைப் பெற்றார்[5] அதன் பின்னர் இரண்டாவது உலகப்போரின் பொழுது அமெரிக்கப் படைத்துறையில் விண்கல் ஆய்வாளராக இருந்தார்[6]. அதன் பின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் கிளரன்சு சீனர் ஆய்வு நெறியாள்கையில் 1952 ஆண்டு இயற்பியல் துறையில் முனைவர்ப்பட்டம் பெற்றார்

மேற்கோள்கள்[தொகு]

  1. Thackeray, M. M.; William I. F. David; Bruce, P. G.; Goodenough, J. B. (1983). "Lithium insertion into manganese spinels". Materials Research Bulletin 18 (4): 461–472. doi:10.1016/0025-5408(83)90138-1. 
  2. Specia, Megan (9 October 2019). "Nobel Prize in Chemistry Honors Work on Lithium-Ion Batteries - John B. Goodenough, M. Stanley Whittingham and Akira Yoshino were recognized for research that has “laid the foundation of a wireless, fossil fuel-free society.”". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2019/10/09/science/nobel-prize-chemistry.html. பார்த்த நாள்: 9 October 2019. 
  3. Charles Stark Draper Prize News, National Academy of Engineering. Retrieved March 1, 2015.
  4. LeVine, Steve (5 February 2015). "The man who brought us the lithium-ion battery at the age of 57 has an idea for a new one at 92". Quartz (publication) (Atlantic Media Company). http://qz.com/338767/the-man-who-brought-us-the-lithium-ion-battery-at-57-has-an-idea-for-a-new-one-at-92/. பார்த்த நாள்: 5 February 2015. 
  5. Goodenough, John B. (2008). Witness to Grace. PublishAmerica. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781462607570.
  6. "His current quest | The University of Chicago Magazine". mag.uchicago.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_கூடினஃபு&oldid=2896179" இலிருந்து மீள்விக்கப்பட்டது