பீட்டர் இராட்கிளிஃபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் இராட்கிளிஃபு
Peter J. Ratcliffe
பிறப்புமோர்க்காம், லங்காசயர், ஐக்கிய இராச்சியம்
பணியிடங்கள்பிரான்சிசு கிரிக் கல்விக்கழகம்
ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கோன்வில், கையசு கல்லூரி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2019)
இணையதளம்
https://www.ndm.ox.ac.uk/principal-investigators/researcher/peter-ratcliffe

சர் பீட்டர் சான் இராட்கிளிஃபு (Sir Peter John Ratcliffe, பிறப்பு: 14 மே 1954[1]) ஓர் பிரித்தானிய மருத்துவரும் உயிரணு மற்றும் மூலக்கூற்றியியல் உயிரியலாளர். உயிரணுவின் உள்ளே ஆக்சிசனின் அளவுக்கேற்ப நடக்கும் இயக்கங்களை, குறிப்பாக குறைந்த ஆக்சிசன் விளைவுகளால் நிகழும் இயக்கங்களை ஆய்வு செய்து கண்டுபிடித்த உண்மைகளுக்காக இவருக்கு வில்லியம் கேலின், கிரெகு செமென்சா ஆகியோருடன் சேர்ந்து 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பெற்றது. 2016 இல் இவர் பிரான்சிசு கிரிக்கு கழகத்தில் நோய் தீர்ப்பு ஆய்வு மருத்துவ இயக்குநராக ஆனார்[2]

கல்வியும் பயிற்சியும்[தொகு]

இராட்கிளிஃபு 1954 ஆம் ஆண்டு இலங்காசிட்டரில் பிறந்தார். அங்கே ஆண் மாணவர்களுக்கான இலனங்காசிட்டர் வேட்னிய இலக்கணப் பள்ளியில் படித்தார். 1972 இல் கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க படிப்புதவி விருது பெற்றார். பின்னர் இலண்டனில் உள்ள புனித பார்த்தோலோமியூ மருத்துவமனையில் மருத்துவக் கல்வியை நிறைவு செய்தார்[3] Qualifying in 1978, Ratcliffe relocated to ஆக்சுபோர்டு where he trained in renal medicine at ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், with a particular focus on renal oxygenation.

1989 இல் தன் துறையை மாற்றிக்கொண்டு வெல்கம் அறக்கட்டளை என்னும் கழகத்தில் உயிரணுவுக்குள் ஆக்சிசனை உணரும் இயக்கங்களும் அதற்கான பாதைகளும் பற்றிய ஆய்வில் ஈடுபட முதுநிலை சிறப்புப்பேராளர் பதவி பெற்றார்.[3]

பரிசுகளும் பெருமைகளும்[தொகு]

இராட்கிளிஃபு குறைந்த ஆக்சிசன்னால் ஏற்படும் உயிரணு இயக்கங்களைப் பற்றிய ஆய்வுகளுக்காகப் பல பரிசுகளும் பெருமைகளும் பெற்றார்.

  • மில்னெ-முயெர்க்கெ நிறுவன விருது (1991)
  • கிராம் பெல் பரிசு (1998)
  • அனைத்துலக குருதித் தூய்மைப்படுத்தியமைக்கான குமுகத்தின் விருது (2002)
  • வேந்திய குமுகத்தின் சிறப்புபேராளர் விருது (2002)
  • உயிரிய மருத்துவ அறிவியலுக்கான வைலி பரிசு (2014)
  • இலசுக்கர் விருது (அடிப்படை மருத்துவ ஆய்வுக்கான ஆல்பெர்ட்டு இலசுக்கர் விருது) (2016)
  • புக்கானன் பதக்கம் வேந்திய குமுகம் 2017 [4]
  • மாசிரி பரிசு (2018)
  • மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2019)

மேற்கோள்கள்[தொகு]

  1. (in en) Ratcliffe, Sir Peter (John) | WHO'S WHO & WHO WAS WHO. doi:10.1093/ww/9780199540884.013.43812. https://doi.org/10.1093/ww/9780199540884.013.43812. 
  2. "Peter Ratcliffe | The Francis Crick Institute". The Francis Crick Institute. https://www.crick.ac.uk/research/a-z-researchers/researchers-p-s/peter-ratcliffe/. 
  3. 3.0 3.1 "Peter J. Ratcliffe". Gairdner. பார்க்கப்பட்ட நாள் 2014-01-02.
  4. "Buchanan Medal". Royal Society. பார்க்கப்பட்ட நாள் 11 December 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_இராட்கிளிஃபு&oldid=3755924" இலிருந்து மீள்விக்கப்பட்டது