ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட்
Allvar Gullstrand.jpg
பிறப்பு ஜூன் 5, 1862 (1862-06-05) (அகவை 153)
பிறப்பிடம் சுவீடன்
இறப்பு ஜூலை 28, 1930 (அகவை 68)
இறப்பிடம் ஸ்டாக்ஹோம், சுவீடன்
குடியுரிமை சுவீடிஷ்
தேசியம் சுவீடிஷ்
துறை விழியியல்
பணி நிறுவனம் உப்சாலா பல்கலைக்கழகம்
விருதுகள் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1911)

ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட் (Allvar Gullstrand, சூன் 5, 1862 - சூலை 28, 1930) ஒரு சுவீடிய விழியியலாளர் (கண் மருத்துவர்) ஆவார். இவர் உப்சாலா பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து (1894-1927) கண் மருத்துவம், மற்றும் ஒளியியல் துறைகளில் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். 1911 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப் பெற்றவர். இவர், கண்களில் ஏற்படும் ஒளி சிதைவினையும், ஒளியியல் உருமத்தினையும் கண்டறிய இயல்கணித முறைகளைப்பயன்படுத்தினார். உருப்பிறழ்ச்சி (astigmatism), விழி அகநோக்கியினை மேம்படுத்துதல் மற்றும் கண்புரை நீக்கியபின் திருத்துவில்லைகளை உபயோகித்தல் ஆகியவற்றில் நடத்திய ஆய்விற்காக பாராட்டப்படுகிறார்.