ஹரோல்ட் ஈ. வர்மஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹரோல்ட் ஈ. வர்மஸ்

ஹரோல்ட் எலியட் வர்மஸ் (Harold Eliot Varmus பிறப்பு: டிசம்பர் 18, 1939) ஓர் அமெரிக்க நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி ஆவார், இவர் 1993 முதல் 1999 வரை தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராகவும், 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 14 வது இயக்குநராகவும் இருந்தார்.இவர் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமாவால் நியமிக்கப்பட்டார். [1] [2] ரெட்ரோ வைரஸ் புற்றுநோய் உருவாக்கும் உயிரணு தோற்றத்தைக் கண்டுபிடிப்பதற்காக 1989 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசினை ஜே. மைக்கேல் பிஷப்புடன் இணைந்து பெற்றார். அவர் தற்போது லூயிஸ் தாமஸ் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியராகவும், நியூயார்க் ஜீனோம் மையத்தில் மூத்த பங்குதாராராகவும் உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஒரு சமூக சேவை ஊழியரான பீட்ரைஸுக்கும், கிழக்கு ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த யூத பெற்றோர்களான ஃபிராங்க் வர்மஸுக்கும் நியூயார்க்கின் ஓசியன்சைடில் வர்மஸ் பிறந்தார். [3] [4] 1957 ஆம் ஆண்டில், அவர் ஃப்ரீபோர்ட், என்.யுவில் உள்ள ஃப்ரீபோர்ட் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார் .பின்னர் இவர் ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் சேர்ந்தார்.தனது தந்தையினைப் போலவே மருத்துவராக ஆக வேண்டும் என விரும்பினார், ஆனால் இறுதியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1962 ஆம் ஆண்டில் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் பட்டப்படிப்பைப் பெற்றார். இருந்தபோதிலும் மீண்டும் மருத்துவப் பள்ளிகளுக்கு விண்ணப்பித்தார். [5] இவரது விண்ணப்பம் இரண்டு முறை ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியினால் நிராகரிக்கப்பட்டது. அதே ஆண்டில், அவர் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் இந்தியாவின் பரேலியில் உள்ள ஒரு சமயப் பரப்பாளர் மருத்துவமனை மற்றும் கொலம்பியா-பிரஸ்பைடிரியன் மருத்துவமனையில் பணியாற்றினார். வியட்நாம் போரில் இராணுவ ரீதியாக சேவை செய்வதற்கு மாற்றாக, வர்மஸ் 1968 இல் தேசிய சுகாதார நிறுவனங்களில் பொது சுகாதார சேவையில் சேர்ந்தார். ஈரா பாஸ்தானின் மேற்பார்வையின் கீழ் பணிபுரிந்த அவர், சுழற்சி AMP ஆல் பாக்டீரியா மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்தார். 1970 ஆம் ஆண்டில் , சான் பிரான்சிஸ்கோவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிஷப்பின் ஆய்வகத்தில் முதுகலை ஆராய்ச்சியைத் துவங்கினார்.

அரசியல் மற்றும் அரசு சேவை[தொகு]

1990 களின் முற்பகுதியில், நோபல் பரிசு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, வர்மஸ் மற்றும் பிஷப் அறிவியல் அரசியலில் தீவிரமாக செயல்பட்டனர்.குறிப்பாக இவர்கள் புரூஸ் ஆல்பர்ட்ஸ் மற்றும் மார்க் கிர்ஷ்னெர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினர், மேலும் கூட்டு வழிநடத்தல் குழுவுடன் (பின்னர் வாழ்க்கை அறிவியலுக்கான கூட்டணி என மறுபெயரிடப்பட்டது) ). [6] 1992 ஆம் ஆண்டின் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் இவர் கிளிண்டனுடன் இணைந்து பணியாற்றினார்.

விருதுகள் மற்றும் கவுரவங்கள்[தொகு]

ரெட்ரோ வைரஸ் புற்றுநோய் உருவாக்கும் உயிரணு தோற்றத்தைக் கண்டுபிடிப்பதற்காக 1989 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசினை ஜே. மைக்கேல் பிஷப்புடன் இணைந்து பெற்றார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வர்மஸ் 1969 ஆம் ஆண்டில் பத்திரிகையாளரும் அறிவியல் எழுத்தாளருமான கான்ஸ்டன்ஸ் லூயிஸ் கேஸியை மணந்தார். மன்ஹாட்டனின் வசிக்கும் இவர்களுக்கு ஜாக்கப் மற்றும் கிறிஸ்டோபர் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். [7]

சான்றுகள்[தொகு]

  1. "President Obama to Appoint Harold Varmus, M.D." National Cancer Institute. Archived from the original on May 27, 2010.
  2. "NIH Directors". 2015-02-11.
  3. Les Prix Nobel. The Nobel Prizes 1989, Editor Tore Frängsmyr, Nobel Foundation, Stockholm, 1990.
  4. "Biography". National Cancer Institute. Archived from the original on January 4, 2014.
  5. Jamie Shreeve. "Free Radical". Wired Magazine. June 2006. Issue 14.06.
  6. Bishop, J.M.; Kirschner, M.; Varmus, H.E. (1993). "Policy Forum: Science and the New Administration". Science 259 (5094): 444–445. doi:10.1126/science.8424162. பப்மெட்:8424162. 
  7. Goldberger, Paul (2008-12-01). "Swing Science". The New Yorker. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-792X. http://www.newyorker.com/magazine/2008/12/01/swing-science. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரோல்ட்_ஈ._வர்மஸ்&oldid=3020877" இலிருந்து மீள்விக்கப்பட்டது