தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தேசிய நல கழக சின்னம்

தேசிய நல கழகம் (National Institutes of Health, NIH), ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மனித நல மற்றும் சேவை துறையின் முகமை நிறுவனமாகும். இக்கழகம், உயிரி மருத்துவம் மற்றும் உடல் நல சம்பந்தமான ஆய்விற்கான ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் முதன்மை பொறுப்புள்ள நிறுவனமாகும். தனித்தனியாக இந்நிறுவனம் 27 மையங்களைக்கொண்டுள்ளது. முதலில் இந்நிறுவனம், 1887 - ஆம் ஆண்டு சுகாதார ஆய்வகமாகத்தொடங்கப்பட்டது. இக்கழகம், இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுள்ளது: வெளி பிரிவு (Extramural) மற்றும் உள் பிரிவு (Intramural). வெளி பிரிவு, தேசிய நல கழகத்திற்கு வெளியில் நடக்கும் உயிரி மருத்துவ ஆய்வுக்கு வழங்கும் உதவிதொகைக்கும், உள் பிரிவு, தேசிய நல கழகத்தில் நடக்கும் பணிகளுக்கும் பொறுப்பானவையாகும்.

இணைய தளங்கள்[தொகு]