அலெக்சிஸ் காரெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெற்சிசு காரெல்
பிறப்புசூன் 28, 1873 (1873-06-28) (அகவை 150)
பிரான்சு
இறப்புநவம்பர் 5, 1944(1944-11-05) (அகவை 71)
குடியுரிமைபிரான்சு
துறைஒட்டறுவையியல்
மார்பக அறுவை சிகிச்சை
பணியிடங்கள்சிகாகோ பல்கலைக்கழகம்
ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுகுருதிக் குழல்/இரத்தநாள இணைவில் புதிய உத்திகள்; ஒட்டறுவையியல்; மார்பக அறுவை சிகிச்சை
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1912)

அலெற்சிசு காரெல் (Alexis Carrel; சூன் 28, 1873 - நவம்பர் 5, 1944) பிரான்சு நாட்டு அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் உயிரியலாளர் ஆவார்[1]. இவர் 1912 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப் பெற்றவர்[2]. இவர், குருதிக்குழல்/இரத்தநாள இணைவில் புதிய உத்திகளை உருவாக்கினார். ஒட்டறுவையியல் மற்றும் மார்பக அறுவை சிகிச்சையில் முன்னோடியாகத் திகழ்ந்தார். இருந்தபோதிலும், இவர் நாசிகளுடன் இணைந்து நல்லினவிருத்தியியல் கொள்கைகளை செயற்படுத்துவதில் துணை சென்றவர் என குற்றம் சாட்டப்பெற்றவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Alexis Carrel - Biographical"". Nobelprize.org. Nobel Media AB - 2014. Web. 18 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. ""Alexis Carrel - Facts"". Nobelprize.org. Nobel Media AB - 2014. Web. 18 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சிஸ்_காரெல்&oldid=3737971" இலிருந்து மீள்விக்கப்பட்டது