ஆல்பிரட் ஜி. கில்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆல்ஃபிரட் குட்மேன் கில்மேன் (Alfred Goodman Gilman ஜூலை 1, 1941 - டிசம்பர் 23, 2015) ஓர் அமெரிக்க மருந்தியல் நிபுணர் மற்றும் உயிர் வேதியியலாளர் ஆவார் . அவரும் மார்ட்டின் ரோட்பலும் 1994 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசை " ஜி-புரதங்களைக் கண்டுபிடித்ததற்காகவும், உயிரணுக்களில் சமிக்ஞை கடத்தலில் இந்த புரதங்களின் பங்கிற்காகவும்" இணைந்து பெற்றனர்.[1]

கில்மேன் ஆல்ஃபிரட் கில்மானின் மகன் ஆவார், இவர் குட்மேன் & கில்மானின் தி பார்மகாலஜிகல் பேஸிஸ் ஆஃப் தெரபியூடிக்ஸ் எனும் நூலினை லூயிஸ் எஸ். குட்மேனுடன் இணைந்து எழுதியுள்ளார். யேல் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் பட்டம் பெற்றார். 1962ஆம் ஆண்டில் பட்டம் பெற்ற பிறகு, அவர் ஆலன் கோனியுடன் பரோஸ் வெல்கம் & கம்பெனியில் பணிபுரிந்தார். ஏர்ல் வில்பர் சதர்லேண்ட், ஜூனியரால் அறிவுறுத்தப்பட்ட அவர், முனைவர் படிப்புக்காக கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினில் சேர்ந்தார். அவர் 1969இல் அங்கு பட்டம் பெற்றார். பின்னர் அவர் 1969 மற்றும் 1971க்கு இடையில் மார்ஷல் நிரன்பெர்க்குடன் இணைந்து பணியாற்ற தேசிய நல கழகத்திற்குச் சென்றார்.

கில்மேன் 1971ஆம் ஆண்டில் வர்ஜீனியா பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் மருந்தியல் உதவி பேராசிரியராகவும், 1977இல் நிரந்தர பேராசிரியராகவும் ஆனார். 1981 முதல் டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக தென்மேற்கு மருத்துவ மையத்தில் மருந்தியல் துறைக்குத் தலைமை பேராசிரியராக இருந்தார். 2009இல் ஓய்வு பெற்ற பின்னர் , டெக்சாஸின் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டார். அவர் 2012ஆம் ஆண்டில் இந்தப் பொறுப்பினை ராஜினாமா செய்தார். 2005ஆம் ஆண்டு முதல் இவர் , எலி லில்லி அண்ட் நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார்.

அவரது படைப்புகளுக்காக, 1984ஆம் ஆண்டில் கனடாவின் கெய்ட்னர் அறக்கட்டளை விருது, அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிக்கான ஆல்பர்ட் லாஸ்கர் விருது மற்றும் 1989ஆம் ஆண்டில்லூயிசா கிராஸ்ன் ஹார்விட்ஸ் பரிசு, மேலும் இதே ஆண்டில் நோபல் பரிசசினைப் பெற்றார். அவர் தேசிய அறிவியல் அகாதமி மற்றும் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியின் உறுப்பினராகவும், புற்றுநோய் ஆராய்ச்சி அகாதமிக்கான அமெரிக்க சங்கத்தின் உறுப்பினராகவும், 2013 முதல் (அல்லது அதற்கு முன்னர்), அறிவியல் கல்விக்கான தேசிய மையத்தின் ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]

தொடக்க கால வாழ்க்கை[தொகு]

கில்மான் கனெக்டிகட்டின் நியூ ஹேவனில் பிறந்தார். அவரது பெற்றோர் மாபெல் (ஷ்மிட்) மற்றும் ஆல்ஃபிரட் கில்மேன் ஆவர். [3] இவருக்கு ஜோனா கில்மேன் எனும் ஒரு மூத்த சகோதரி இருந்தார். அவர் நியூயார்க்கில் உள்ள வெள்ளை சமவெளியில் (ஒயிட் பிளைனில் ) வளர்ந்தார், அதே நேரத்தில் அவரது தந்தை கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றினார் .

இறப்பு[தொகு]

டெக்சாஸின் டல்லாஸில் 2015 டிசம்பர் 23 அன்று தனது 74 வயதில் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட கணைய புற்றுநோயினால் கில்மான் இறந்தார். இவருக்கு ஆமி அரியாக்னோ எனும் மனைவி மற்றும் அன்னே சின்கோவெக், டல்லாஸ், மற்றும் ஆஸ்டினின் எட்வர்ட் கில்மேன் ஆகிய குழந்தைகள் இருந்தனர். [4] [5]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரட்_ஜி._கில்மன்&oldid=2898030" இருந்து மீள்விக்கப்பட்டது