ஸ்டான்லி கோஹன் (உயிர்வேதியியலாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்டான்லி கோஹன்
ஸ்டான்லி கோஹன்
பிறப்புநவம்பர் 17, 1922
தேசியம்அமெரிக்கர்
துறைஉயிர்வேதியியலாளர்
பணியிடங்கள்சென் லூயிசிலுள்ள வாசிங்டன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மிச்சிகன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநரம்பு வளர்ச்சிக் காரணி
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1986)
ஃபிராங்க்ளின் பதக்கம் (1987)

ஸ்டான்லி கோஹன் (Stanley Cohen, பி. நவம்பர் 17, 1922) ஒரு அமெரிக்க உயிரியலாளர்[1]. இவர் ப்ரூக்ளின் கல்லூரியில் 1943 இல் தனது இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பணம் சம்பாதிக்க ஒரு பால் பதப்படுத்தும் ஆலையில் ஒரு நுண்ணுயிரியல் வல்லுனராக பணிபுரிந்த பிறகு, 1945 இல் ஒபெர்லின் கல்லூரி விலங்கியலில் எம்.ஏ. பட்டம் பெற்றார். 1948 இல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நரம்பு வளர்ச்சிக் காரணி யைக் கண்டுபிடித்தற்காகப் பரவலாக அறியப்படுகிறார். 1986ம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை ரீட்டா-லெவி மோன்டால்சினியுடன் சேர்ந்துப் பெற்றவர்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. ""Stanley Cohen - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Stanley Cohen - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 18 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)